சங்கீதம் 78 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽என் மக்களே,␢ என் அறிவுரைக்குச்␢ செவிசாயுங்கள்;␢ என் வாய்மொழிகளுக்குச்␢ செவிகொடுங்கள்.⁾2 ⁽நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்;␢ முற்காலத்து மறைசெய்திகளை␢ எடுத்துரைப்பேன்.⁾3 ⁽நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை,␢ எம் மூதாதையர் எமக்கு␢ விரித்துரைத்தவை –␢ இவற்றை உரைப்போம்.⁾4 ⁽அவர்களின் பிள்ளைகளுக்கு␢ நாங்கள் அவற்றை மறைக்க மாட்டோம்;␢ வரவிருக்கும் தலைமுறைக்கு␢ ஆண்டவரின் புகழ்மிகு,␢ வலிமைமிகு செயல்களையும்␢ அவர் ஆற்றிய வியத்தகு␢ செயல்களையும் எடுத்துரைப்போம்.⁾5 ⁽யாக்கோபுக்கென அவர்␢ நியமங்களை வகுத்தார்;␢ இஸ்ரயேலுக்கெனத்␢ திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்;␢ இதனையே தம் பிள்ளைகளுக்கும்␢ கற்பிக்குமாறு␢ நம் மூதாதையர்க்கு அவர்␢ கட்டளையிட்டார்.⁾6 ⁽வரவிருக்கும் தலைமுறையினர்␢ இவற்றை அறிந்திடவும்,␢ இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் –␢ இவர்கள் தம் புதல்வர்களுக்கு␢ ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,⁾7 ⁽அதனால், அவர்கள் கடவுள்மீது␢ நம்பிக்கை வைக்கவும்,␢ இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும்,␢ அவர்தம் கட்டளைகளைக் § கடைப்பிடிக்கவும்,⁾8 ⁽தங்கள் மூதாதையரைப்போல்,␢ எதிர்ப்பு மனமும்,␢ அடங்காக் குணமும் கொண்ட␢ தலைமுறையாகவும்,␢ நேரிய உள்ளமற்றவர்களாகவும்␢ இறைவன்மீது உண்மைப் பற்று § அற்றவர்களாகவும்␢ இராதபடி அவர் கட்டளையிட்டார்.⁾9 ⁽வில் வீரரான எப்ராயிம் மக்கள்,␢ போரில் புறங்காட்டி ஓடினர்.⁾10 ⁽அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட␢ உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை;␢ அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற␢ மறுத்துவிட்டனர்.⁾11 ⁽அவர்தம் செயல்களையும்␢ அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும்␢ அவர்கள் மறந்தனர்.⁾12 ⁽எகிப்து நாட்டில், சோவான் சமவெளியில்␢ அவர்களின் மூதாதையர் காணுமாறு␢ அவர் வியத்தகு செயல்கள் பல புரிந்தார்;⁾13 ⁽கடலைப் பிரித்து␢ அவர்களை வழிநடத்தினார்;␢ தண்ணீரை அணைக்கட்டுப்போல␢ நிற்கும்படி செய்தார்;⁾14 ⁽பகலில் மேகத்தினாலும்␢ இரவு முழுவதும்␢ நெருப்பின் ஒளியாலும்␢ அவர்களை வழி நடத்தினார்.⁾15 ⁽பாலைநிலத்தில் பாறைகளைப் பிளந்தார்;␢ ஆழத்தினின்று பொங்கிவருவது␢ போன்ற நீரை␢ அவர்கள் நிறைவாகப் பருகச் செய்தார்;⁾16 ⁽பாறையினின்று நீரோடைகள்␢ வெளிப்படச் செய்தார்;␢ ஆறுகளென நீரை அவர்␢ பாய்ந்தோடச் செய்தார்.⁾17 ⁽ஆயினும், அவர்கள் அவருக்கெதிராகத்␢ தொடர்ந்து பாவம் செய்தனர்;␢ வறண்ட நிலத்தில்␢ உன்னதருக்கு எதிராய் எழுந்தனர்.⁾18 ⁽தம் விருப்பம்போல் உணவு கேட்டு␢ வேண்டுமென்றே இறைவனைச்␢ சோதித்தனர்.⁾19 ⁽அவர்கள் கடவுளுக்கு எதிராக␢ இவ்வாறு பேசினார்கள்:␢ ‘பாலை நிலத்தில் விருந்தளிக்க␢ இறைவனால் இயலுமா?⁾20 ⁽உண்மைதான்! அவர் பாறையை␢ அதிரத் தட்டினார்;␢ நீர் பாய்ந்து வந்தது;␢ ஆறுகள் கரைபுரண்டு ஓடின.␢ ஆயினும், அப்பமளிக்க இயலுமா அவரால்?␢ தம் மக்களுக்கு இறைச்சி தர முடியுமா?’⁾21 ⁽எனவே, இதைக் கேட்ட ஆண்டவர்␢ சினங்கொண்டார்;␢ நெருப்பு யாக்கோபுக்கு எதிராய்க்␢ கிளர்ந்தெழுந்தது.␢ இஸ்ரயேல்மீது அவரது சினம்␢ பொங்கியெழுந்தது.⁾22 ⁽ஏனெனில், அவர்கள் கடவுள்மீது␢ பற்றுறுதி கொள்ளவில்லை;␢ அவர் காப்பார் என்று நம்பவில்லை.⁾23 ⁽ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு␢ அவர் கட்டளையிட்டார்;␢ விண்ணகத்தின் கதவுகளைத்␢ திறந்துவிட்டார்.⁾24 ⁽அவர்கள் உண்பதற்காக மன்னாவை␢ மழையெனப் பொழியச் செய்தார்;␢ அவர்களுக்கு வானத்து உணவை␢ வழங்கினார்.⁾25 ⁽வான தூதரின் உணவை␢ மானிடர் உண்டனர்;␢ அவர்களுக்கு வேண்டியமட்டும்␢ உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.⁾26 ⁽அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை␢ இறங்கிவரச் செய்தார்;␢ தம் ஆற்றலினால் தென்காற்றை␢ அழைத்துவந்தார்.⁾27 ⁽அவர் இறைச்சியைத் துகள்துகளென␢ அவர்கள்மீது பொழிந்தார்;␢ இறகுதிகழ் பறவைகளைக்␢ கடற்கரை மணலென வரவழைத்தார்.⁾28 ⁽அவற்றை அவர்தம்␢ பாளையத்தின் நடுவிலும்␢ கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார்.⁾29 ⁽அவர்கள் உண்டனர்;␢ முற்றிலுமாய் நிறைவடைந்தனர்;␢ அவர்கள் விரும்பியவற்றையே␢ அவர் அவர்களுக்கு அளித்தார்.⁾30 ⁽அவர்களது பெருந்தீனி வேட்கை␢ தணியுமுன்பே,␢ அவர்கள் வாயிலில்␢ உணவு இருக்கும் பொழுதே,⁾31 ⁽கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக␢ மூண்டெழுந்தது;␢ அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்;␢ இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார்.⁾32 ⁽இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும்,␢ அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்;␢ அவர்தம் வியத்தகு செயல்களில்␢ நம்பிக்கை கொள்ளவில்லை.⁾33 ⁽ஆகையால், அவர்களது வாழ்நாளை␢ மூச்சென மறையச் செய்தார்;␢ அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால்␢ முடிவுறச் செய்தார்.⁾34 ⁽அவர்களை அவர் கொன்றபோது␢ அவரைத் தேடினர்;␢ மனம் மாறி இறைவனைக்␢ கருத்தாய் நாடினர்.⁾35 ⁽கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும்␢ உன்னதரான இறைவன்␢ தங்கள் மீட்பர் என்பதையும்␢ அவர்கள் நினைவில் கொண்டனர்.⁾36 ⁽ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே␢ அவரைப் புகழ்ந்தார்கள்;␢ தங்கள் நாவினால் அவரிடம்␢ பொய் சொன்னார்கள்.⁾37 ⁽அவர்கள் இதயம்␢ அவரைப் பற்றிக்கொள்வதில்␢ உறுதியாய் இல்லை;␢ அவரது உடன்படிக்கையில்␢ அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.⁾38 ⁽அவரோ இரக்கம் கொண்டவராய்,␢ அவர்கள் குற்றத்தை மன்னித்தார்;␢ அவர்களை அழித்துவிடவில்லை,␢ பலமுறை தம் கோபத்தை␢ அடக்கிக்கொண்டார்.␢ தம் சினத்தையெல்லாம்␢ அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை.⁾39 ⁽அவர்கள் வெறும் சதையே என்பதையும்␢ திரும்பி வராத காற்று என்பதையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.⁾40 ⁽பாலை நிலத்தில்␢ அவர்கள் எத்தனையோமுறை␢ அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்!␢ வறண்ட நிலத்தில்␢ அவர் மனத்தை வருத்தினர்!⁾41 ⁽இறைவனை அவர்கள்␢ மீண்டும் மீண்டும் சோதித்தனர்;␢ இஸ்ரயேலின் தூயவருக்கு␢ எரிச்சலூட்டினர்.⁾42 ⁽அவரது கைவன்மையை மறந்தனர்;␢ எதிரியிடமிருந்து அவர் அவர்களை␢ விடுவித்த நாளையும் மறந்தனர்;⁾43 ⁽அந்நாளில் எகிப்தில் அவர்␢ அருஞ்செயல்கள் செய்தார்;␢ சோவான் சமவெளியில்␢ வியத்தகு செயல்கள் புரிந்தார்.⁾44 ⁽அவர்களின் ஆறுகளைக்␢ குருதியாக மாற்றினார்;␢ எனவே, தங்கள் ஓடைகளினின்று␢ அவர்களால் நீர் பருக இயலவில்லை.⁾45 ⁽அவர்களை விழுங்குமாறு␢ அவர்கள்மீது ஈக்களையும்,␢ அவர்களது நாட்டை அழிக்குமாறு␢ தவளைகளையும் அவர் அனுப்பினார்.⁾46 ⁽அவர்களது விளைச்சலைப்␢ பச்சைப் புழுக்களுக்கும்␢ அவர்களது உழைப்பின் பயனை␢ வெட்டுக்கிளிகளுக்கும் அவர் கொடுத்தார்.⁾47 ⁽கல்மழையினால் அவர்களுடைய␢ திராட்சைக் கொடிகளையும்␢ உறைபனியால் அவர்களுடைய␢ அத்தி மரங்களையும் அவர் அழித்தார்.⁾48 ⁽அவர்களுடைய கால்நடைகளைக்␢ கல்மழையிடமும்␢ அவர்களுடைய ஆடுமாடுகளை␢ இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார்.⁾49 ⁽தம் சினத்தையும், சீற்றத்தையும்␢ வெஞ்சினத்தையும் இன்னலையும் –␢ அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தை –␢ அவர் ஏவினார்.⁾50 ⁽அவர் தமது சினத்திற்கு␢ வழியைத் திறந்துவிட்டார்;␢ அவர்களைச் சாவினின்று␢ தப்புவிக்கவில்லை;␢ அவர்களின் உயிரைக்␢ கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.⁾51 ⁽எகிப்தின் அனைத்துத்␢ தலைப்பேறுகளையும்␢ ‛காம்’ கூடாரங்களில்␢ ஆண் தலைப்பேறுகளையும்␢ அவர் சாகடித்தார்.⁾52 ⁽அவர்தம் மக்களை ஆடுகளென␢ வெளிக்கொணர்ந்தார்;␢ பாலைநிலத்தில் அவர்களுக்கு␢ மந்தையென வழி காட்டினார்.⁾53 ⁽பாதுகாப்புடன் அவர்களை␢ அவர் அழைத்துச் சென்றார்;␢ அவர்கள் அஞ்சவில்லை;␢ அவர்களுடைய எதிரிகளைக்␢ கடல் மூடிக்கொண்டது.⁾54 ⁽அவர் தமது திருநாட்டுக்கு,␢ தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு,␢ அவர்களை அழைத்துச் சென்றார்.⁾55 ⁽அவர்கள் முன்னிலையில்␢ வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்;␢ அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு␢ உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்;␢ இஸ்ரயேல் குலங்களை␢ அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார்.⁾56 ⁽ஆயினும், உன்னதரான கடவுளை␢ அவர்கள் சோதித்தனர்;␢ அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்;␢ அவர்தம் நியமங்களைக்␢ கடைப்பிடிக்கவில்லை.⁾57 ⁽தங்கள் மூதாதையர்போல்␢ அவர்கள் வழி தவறினர்;␢ நம்பிக்கைத் துரோகம் செய்தனர்;␢ கோணிய வில்லெனக் குறி மாறினர்.⁾58 ⁽தம் தொழுகை மேடுகளால்␢ அவருக்குச் சினமூட்டினர்;␢ தம் வார்ப்புச் சிலைகளால்␢ அவருக்கு ஆத்திரமூட்டினர்.⁾59 ⁽கடவுள் இதைக் கண்டு␢ சினம் கொண்டார்;␢ இஸ்ரயேலை அவர்␢ முழுமையாகப் புறக்கணித்தார்;⁾60 ⁽சீலோவில் அழைந்த தம்␢ உறைவிடத்தினின்று வெளியேறினார்;␢ மானிடர் நடுவில் தாம் வாழ்ந்த␢ கூடாரத்தினின்று அகன்றார்;⁾61 ⁽தம் வலிமையை*␢ அடிமைத் தனத்திற்குக் கையளித்தார்;␢ தம் மாட்சியை*␢ எதிரியிடம் ஒப்புவித்தார்;⁾62 ⁽தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்;␢ தம் உரிமைச்சொத்தின்மீது␢ கடுஞ்சினங்கொண்டார்.⁾63 ⁽அவர்களுடைய இளைஞரை␢ நெருப்பு விழுங்கியது;␢ அவர்களுடைய கன்னியர்க்குத்␢ திருமணப் பாடல் இல்லாது போயிற்று.⁾64 ⁽அவர்களுடைய குருக்கள்␢ வாளால் வீழ்த்தப்பட்டனர்;␢ அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு␢ ஒப்பாரி வைக்க வழியில்லை.⁾65 ⁽அப்பொழுது,␢ உறக்கத்தினின்று எழுவோரைப்போல்,␢ திராட்சை மதுவால் களிப்புறும்␢ வீரரைப்போல்␢ எம் தலைவர் விழித்தெழுந்தார்.⁾66 ⁽அவர் தம் எதிரிகளைப்␢ புறமுதுகிடச் செய்தார்;␢ அவர்களை என்றென்றும்␢ இகழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.⁾67 ⁽அவர் யோசேப்பின் கூடாரத்தைப்␢ புறக்கணித்தார்;␢ எப்ராயிம் குலத்தைத்␢ தேர்வு செய்யவில்லை.⁾68 ⁽ஆனால், யூதாவின் குலத்தை,␢ தமக்கு விருப்பமான சீயோன் மலையை␢ அவர் தேர்ந்துகொண்டார்.⁾69 ⁽தம் திருத்தலத்தை உயர் விண்ணகம்போல்␢ அவர் அமைத்தார்;␢ மண்ணுலகத்தில்* என்றும்␢ நிலைத்திருக்குமாறு எழுப்பினார்.⁾70 ⁽அவர் தாவீதைத்␢ தம் ஊழியராய்த் தேர்ந்தெடுத்தார்;␢ ஆட்டு மந்தைகளினின்று␢ அவரைப் பிரித்தெடுத்தார்.⁾71 ⁽இறைவன் தம் மக்களான யாக்கோபை,␢ தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை,␢ பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய␢ தாவீது மேய்க்குமாறு செய்தார்.⁾72 ⁽அவரும் நேரிய உள்ளத்தோடு␢ அவர்களைப் பேணினார்;␢ கைவன்மையாலும் அறிவுத் திறனாலும்␢ அவர்களை வழிநடத்தினார்.⁾சங்கீதம் 78 ERV IRV TRV