1 ⁽அநீதிக்குப் பழிவாங்கும்␢ இறைவா! ஆண்டவரே!␢ அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா,␢ ஒளிர்ந்திடும்!⁾

2 ⁽உலகின் நீதிபதியே, எழுந்தருளும்;␢ செருக்குற்றோர்க்கு உரிய␢ தண்டனையை அளியும்.⁾

3 ⁽எத்துணைக் காலம், ஆண்டவரே!␢ எத்துணைக் காலம்␢ பொல்லார் அக்களிப்பர்?⁾

4 ⁽அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்;␢ தீமைசெய்வோர் அனைவரும்␢ வீம்பு பேசுகின்றனர்.⁾

5 ⁽ஆண்டவரே! அவர்கள்␢ உம் மக்களை நசுக்குகின்றனர்;␢ உமது உரிமைச் சொத்தான அவர்களை␢ ஒடுக்குகின்றனர்.⁾

6 ⁽கைம்பெண்டிரையும் அன்னியரையும்␢ அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்;␢ திக்கற்றவரை அவர்கள்␢ கொலை செய்கின்றனர்.⁾

7 ⁽‘ஆண்டவர் இதைக்␢ கண்டு கொள்வதில்லை;␢ யாக்கோபின் கடவுள்␢ கவனிப்பதில்லை’ என்கின்றனர்.⁾

8 ⁽மக்களிடையே அறிவிலிகளாய்␢ இருப்போரே, உணருங்கள்;␢ மதிகேடரே, எப்பொழுது நீங்கள்␢ அறிவு பெறுவீர்கள்?⁾

9 ⁽செவியைப் பொருத்தியவர்␢ கேளாதிருப்பாரோ?␢ கண்ணை உருவாக்கியவர்␢ காணாதிருப்பாரோ?⁾

10 ⁽மக்களினங்களைக் கண்டிப்பவர்,␢ மானிடருக்கு அறிவூட்டுபவர்␢ தண்டியாமல் இருப்பாரோ?⁾

11 ⁽மானிடரின் எண்ணங்கள் வீணானவை;␢ இதனை ஆண்டவர் அறிவார்.⁾

12 ⁽ஆண்டவரே! நீர் கண்டித்து␢ உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும்␢ மனிதர் பேறுபெற்றோர்;⁾

13 ⁽அவர்களின் துன்ப நாள்களில்␢ அவர்களுக்கு அமைதி அளிப்பீர்.␢ பொல்லார்க்குக் குழி வெட்டப்படும்.⁾

14 ⁽ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்;␢ தம் உரிமைச் சொத்தாம்␢ அவர்களைக் கைவிடார்.⁾

15 ⁽தீர்ப்பு வழங்கும் முறையில்␢ மீண்டும் நீதி நிலவும்;␢ நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.⁾

16 ⁽என் சார்பில் பொல்லார்க்கு␢ எதிராக எழுபவர் எவர்?␢ என் சார்பில் தீமை செய்வோர்க்கு␢ எதிராக நிற்பவர் எவர்?⁾

17 ⁽ஆண்டவர் எனக்குத்␢ துணை நிற்காதிருந்தால்,␢ என் உயிர் விரைவில்␢ மௌன உலகிற்குச் சென்றிருக்கும்!⁾

18 ⁽‘என் அடி சறுக்குகின்றது’ என்று␢ நான் சொன்னபோது,␢ ஆண்டவரே! உமது பேரன்பு␢ என்னைத் தாங்கிற்று.⁾

19 ⁽என் மனத்தில் கவலைகள் பெருகும்போது,␢ என் உள்ளத்தை உமது ஆறுதல்␢ மகிழ்விக்கின்றது.⁾

20 ⁽சட்டத்திற்குப் புறம்பாகத்␢ தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர்␢ உம்மோடு ஒன்றாக␢ இணைந்திருக்க முடியுமோ?⁾

21 ⁽நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க␢ அவர்கள் இணைகின்றனர்;␢ மாசற்றோர்க்குக்␢ கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர்.⁾

22 ⁽ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்;␢ என் கடவுள் எனக்குப்␢ புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.⁾

23 ⁽அவர்கள் இழைத்த தீங்கை␢ அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்;␢ அவர்கள் செய்த தீமையின் பொருட்டு␢ அவர்களை அழிப்பார்;␢ நம் கடவுளாம் ஆண்டவர்␢ அவர்களை அழித்தே தீர்வார்.⁾

சங்கீதம் 94 ERV IRV TRV