சகரியா 4

fullscreen1 என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:

fullscreen2 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.

fullscreen3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

fullscreen4 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

fullscreen5 என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

fullscreen6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

fullscreen7 பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

fullscreen8 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

fullscreen9 செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.

fullscreen10 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

fullscreen11 பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.

fullscreen12 மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

fullscreen13 அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

fullscreen14 அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், என்னுடைய வேதத்தை விட்டு விலகி;

Tamil Easy Reading Version
அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.

Thiru Viviliam
⁽அவன் புதல்வர்␢ என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ,␢ என் நீதிநெறிகளின்படி நடக்காவிடிலோ,⁾

சங்கீதம் 89:29சங்கீதம் 89சங்கீதம் 89:31

King James Version (KJV)
If his children forsake my law, and walk not in my judgments;

American Standard Version (ASV)
If his children forsake my law, And walk not in mine ordinances;

Bible in Basic English (BBE)
If his children give up my law, and are not ruled by my decisions;

Darby English Bible (DBY)
If his sons forsake my law, and walk not in mine ordinances;

Webster’s Bible (WBT)
His seed also will I make to endure for ever, and his throne as the days of heaven.

World English Bible (WEB)
If his children forsake my law, And don’t walk in my ordinances;

Young’s Literal Translation (YLT)
If his sons forsake My law, And in My judgments do not walk;

சங்கீதம் Psalm 89:30
அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல் என் வேதத்தை விட்டு விலகி;
If his children forsake my law, and walk not in my judgments;

If
אִםʾimeem
his
children
יַֽעַזְב֣וּyaʿazbûya-az-VOO
forsake
בָ֭נָיוbānāywVA-nav
my
law,
תּוֹרָתִ֑יtôrātîtoh-ra-TEE
walk
and
וּ֝בְמִשְׁפָּטַ֗יûbĕmišpāṭayOO-veh-meesh-pa-TAI
not
לֹ֣אlōʾloh
in
my
judgments;
יֵלֵכֽוּן׃yēlēkûnyay-lay-HOON