1 Chronicles 29 - ORIYA (Tamil)

1 ଏକତ୍ରୀତ ହୋଥିବା ଇଶ୍ରାୟେଲର ସମସ୍ତ ଲୋକଙ୍କୁ ରାଜା ଦାଉଦ କହିଲେ, ପରମେଶ୍ବର ମାରେ ପୁତ୍ର ଶଲୋମନକୁ ମନୋନୀତ କରିଅଛନ୍ତି। ଶ ଲୋମନ ଅଳ୍ପବଯସ୍କ ଅଟେ ଓ ଏହି କାର୍ୟ୍ଯ ନିମନ୍ତେ ଯେଉଁ ସମସ୍ତ ବିଷଯ ଆବଶ୍ଯକ, ସେ ତାହା ଜାଣେ ନାହିଁ ? କିନ୍ତୁ ଏହି କାର୍ୟ୍ଯ ଅତ୍ଯନ୍ତ ଗୁରୁତ୍ବପୂର୍ଣ୍ଣ ଅଟେ। ଏହି ମନ୍ଦିର ଲୋକମାନଙ୍କ ନିମନ୍ତେ ନୁହେଁ, ଏହି ମନ୍ଦିର ସଦାପ୍ରଭୁ ପରମେଶ୍ବରଙ୍କ ନିମନ୍ତେ ଅଟେ।பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.

2 ପରମେଶ୍ବରଙ୍କ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିବା ନିମନ୍ତେ ମୁଁ ମାରେ ସାଧ୍ଯମତେ ଯୋଜନା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିଅଛି। ମୁଁ ସୁବର୍ଣ୍ଣ ରେ ନିର୍ମିତ ହବୋକୁ ଥିବା ସାମଗ୍ରୀଗୁଡ଼ିକ ନିମନ୍ତେ ସୁବର୍ଣ୍ଣ ଦଇେଅଛି। ମୁଁ ରେ ୗପ୍ୟ ରେ ନିର୍ମିତ ହବୋକୁ ଥିବା ସାମଗ୍ରୀଗୁଡ଼ିକ ନିମନ୍ତେ ରେ ୗପ୍ୟ ଦଇେଅଛି। ମୁଁ ପିତ୍ତଳ ରେ ନିର୍ମିତ ହବୋକୁ ଥିବା ସାମଗ୍ରୀଗୁଡ଼ିକ ନିମନ୍ତେ ପିତ୍ତଳ ଦଇେଅଛି। ମୁଁ ଲୌହର ନିର୍ମିତ ହବୋକୁ ଥିବା ସାମଗ୍ରୀଗୁଡ଼ିକ ନିମନ୍ତେ ଲୌହ ଦଇେଅଛି। ମୁଁ କାଠର ନିର୍ମିତ ହବୋକୁ ଥିବା ସାମଗ୍ରୀଗୁଡ଼ିକ ନିମନ୍ତେ କାଠ ଦଇେଅଛି। ମୁଁ ଚିତ୍ରବିଚିତ୍ର ଟାଇଲ୍ ଓ ପ୍ରସ୍ତର ଖାଦେନ କାର୍ୟ୍ଯ ପାଇଁ ଓ ଗୋବଦକମେଣି ଓ ସମସ୍ତ ପ୍ରକାର ବିଭିନ୍ନ ରଙ୍ଗର ବହୁମୂଲ୍ଯ ପ୍ରସ୍ତର ଓ ଶୁଭ୍ର ମାର୍ବଲପ୍ରସ୍ତର ଦଇେଅଛି। ସଦାପ୍ରଭୁଙ୍କ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କାର୍ୟ୍ଯ ନିମନ୍ତେ ମୁଁ ଏହି ପ୍ରକାର ଅନକେ ଅନକେ ସାମଗ୍ରୀ ଦଇେଅଛି।நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க, அந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.

3 ମୁଁ ମାରେପରମେଶ୍ବରଙ୍କ ମନ୍ଦିର ନିମନ୍ତେ ସୁବର୍ଣ୍ଣ ଓ ରେ ୗପ୍ୟ ନିର୍ମିତ ଏକ ବିଶଷେ ଉପହାର ନିର୍ମାଣ କରୁଅଛି। ମୁଁ ଏହା କରୁଅଛି, କାରଣ ମାରେ ପରମେଶ୍ବରଙ୍କ ମନ୍ଦିର ନିର୍ମିତ ହେଉ ବୋଲି ମୁଁ ପ୍ରକୃତ ରେ ଚା ହେଁ। ଏହି ପବିତ୍ର ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିବା ନିମନ୍ତେ ମୁଁ ଏହି ସମସ୍ତ ବସ୍ତୁ ଦାନ କରୁଅଛି।இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

4 ମୁଁ ଓଫୀରୁ ପ୍ରସ୍ତୁତ ତିନି ହଜାର ତାଳନ୍ତ ଶୁଦ୍ଧ ସୁବର୍ଣ୍ଣ ଦଇେଅଛି। ମୁଁ ସାତ ହଜାର ତାଳନ୍ତ ଶୁଦ୍ଧ ରେ ୗପ୍ୟ ଦଇେଅଛି। ଏହି ରେ ୗପ୍ୟ ମନ୍ଦିରର ଅଟ୍ଟାଳିକାଗୁଡ଼ିକର କାନ୍ଥର ଆବରଣ ନିମନ୍ତେ ଉଦ୍ଦିଷ୍ଟ।அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும்வேலை அனைத்திற்காகவும, ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.

5 ସୁବର୍ଣ୍ଣ ଓ ରେ ୗପ୍ୟ ନିର୍ମିତ ସକଳ ବସ୍ତୁ ନିମନ୍ତେ ମୁଁ ସୁବର୍ଣ୍ଣ ଓ ରେ ୗପ୍ୟ ଦଇେଅଛି। ଦକ୍ଷ କାରିଗରମାନେ ଯେପରି ମନ୍ଦିର ନିମନ୍ତେ ସବୁ ପ୍ରକାରର ବସ୍ତୁ ନିର୍ମାଣ କରିପାରନ୍ତି, ଏଥି ନିମନ୍ତେ ମୁଁ ସୁବର୍ଣ୍ଣ ଓ ରେ ୗପ୍ୟ ଦଇେଅଛି। ବର୍ତ୍ତମାନ, ଇଶ୍ରାୟେଲର ଲୋକମାନଙ୍କ ମଧ୍ଯରୁ ତୁମ୍ଭମାନେେ କେତଜେଣ ଆଜି ନିଜକୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ନିମନ୍ତେ ଉତ୍ସର୍ଗ କରିବାକୁ ପ୍ରସ୍ତୁତ ଅଛ ?இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.

6 ପରିବାରର ନେତାଗଣ, ଇଶ୍ରାୟେଲର ବିଭିନ୍ନ ଗୋଷ୍ଠୀର ନେତାଗଣ, ସନୋପତିଗଣ, ସନୋଧ୍ଯକ୍ଷଗଣ ଓ ରାଜାଙ୍କର କାର୍ୟ୍ଯନିର୍ବାହକଗଣ ସମସ୍ତେ ପ୍ରସ୍ତୁତ ଥିଲେ ଓ ସମାନଙ୍କେର ବହୁମୂଲ୍ଯ ବସ୍ତୁସବୁ ଦଇେ ଦେଲେ।அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய்,

7 ସମାନେେ ଏହି ସମସ୍ତ ବସ୍ତୁ ପରମେଶ୍ବରଙ୍କ ମନ୍ଦିର ନିମନ୍ତେ ଦେଲେ : ପାଞ୍ଚ ହଜାର ତାଳନ୍ତ ଓ ଦଶ ହଜାର ତାରିକ୍ ମୁଦ୍ରା ଓ ଦଶ ହଜାର ତାଳନ୍ତ ରୂପା ଓ ଅଠର ହଜାର ତାଳନ୍ତ ପିତ୍ତଳ ଓ ଏକ ଲକ୍ଷ ତାଳନ୍ତ ଲୁହା ଦେଲେ।தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.

8 ଯେଉଁ ଲୋକମାନଙ୍କ ନିକଟରେ ବହୁମୂଲ୍ଯ ପ୍ରସ୍ତରମାନ ଥିଲା, ସମାନେେ ତାହା ସଦାପ୍ରଭୁଙ୍କ ମନ୍ଦିର ନିମନ୍ତେ ଦେଲେ। ୟିହୀଯଲେ ସହେି ବହୁମୂଲ୍ଯ ପ୍ରସ୍ତରଗୁଡ଼ିକର ଯତ୍ନ ନେଲେ। ୟିହୀଯଲେ ଗେର୍ଶୋନ୍ ପରିବାରରୁ ଆସିଥିଲେ।யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.

9 ନେତାଗଣ ଆନନ୍ଦ ମଧିଅରେ ଏତେ ପରିମାଣର ଦାନ ଦେଉଥିବାରୁ ଲୋକମାନେ ମଧ୍ଯ ଅତ୍ଯନ୍ତ ଆନନ୍ଦିତ ଥିଲେ। ନେତାଗଣ ଉତ୍ତମ ହୃଦଯ ରେ ମୁକ୍ତ ଭାବରେ ଦାନ କରୁଥିଲେ। ରାଜା ଦାଉଦ ମଧ୍ଯ ଅତ୍ଯନ୍ତ ଆନନ୍ଦିତ ଥିଲେ।இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

10 ଏହାପରେ ଦାଉଦ ଏକତ୍ରୀତ ହାଇେଥିବା ସମସ୍ତ ଲୋକଙ୍କ ସାକ୍ଷାତ ରେ ସଦାପ୍ରଭୁଙ୍କର ପ୍ରଶଂସାଗାନ କଲେ। ଦାଉଦ କହିଲେ :ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

11 ମହାନତା, ପରାକ୍ରମ, ମହିମା, ବିଜଯ ଓ ଗୌରବ ତୁମ୍ଭର ଅଟେ। କାହିଁକି ? କାରଣ ସ୍ବର୍ଗ ଓ ପୃଥିବୀସ୍ଥ ସମସ୍ତ ବିଷଯ ତୁମ୍ଭର ଅଟେ ; ହେ ସଦାପ୍ରଭୁ, ରାଜ୍ଯ ତୁମ୍ଭର ଅଟେ। ତୁମ୍ଭେ ହିଁ ସକଳ ବିଷଯର ମୁଖ୍ଯ ରୂପେ ପ୍ରଶଂସିତ ହାଇେଅଛ।கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.

12 ଧନ ଓ ସମ୍ମାନ ତୁମ୍ଭଠାରୁ ଆ ସେ। ତୁମ୍ଭେ ସକଳ ବିଷଯକୁ ଶାସନ କର। ତୁମ୍ଭର ହସ୍ତ ରେ ପରାକ୍ରମ ଓ ଶକ୍ତି ଅଛି । ଆଉ ତୁମ୍ଭ ହସ୍ତ ରେ ଯେ କୌଣସି ବ୍ଯକ୍ତିକୁ ମହାନ୍ ଓ ପରାକ୍ରମୀ କରାଇବାର କ୍ଷମତା ଅଛି।ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

13 ବର୍ତ୍ତମାନ, ହେ ଆମ୍ଭମାନଙ୍କର ପରମେଶ୍ବର, ଆମ୍ଭମାନେେ ତୁମ୍ଭର ଧନ୍ଯବାଦ କରୁଅଛୁ ଓ ତୁମ୍ଭ ଗୌରବୟୁକ୍ତ ନାମର ପ୍ରଶଂସା କରୁଅଛୁ।இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.

14 ଆମ୍ଭମାନେେ କିଏ ଯେ ଏପରି ସ୍ବେଚ୍ଛାପୂର୍ବକ ଦାନ କରିବାକୁ ସମର୍ଥ ହବେୁ ? ଏହି ସମସ୍ତ ବସ୍ତୁ ମାେ'ଠାରୁ କିଅବା ମାରେଲୋକମାନଙ୍କଠାରୁ ଆସି ନାହିଁ। ଏହି ସମସ୍ତ ବସ୍ତୁ ତୁମ୍ଭଠାରୁ ଆ ସେ, ତୁମ୍ଭଠାରୁ ଯାହା ଆସିଅଛି, ଆମ୍ଭେ କବଳେ ତାହା ତୁମ୍ଭକୁ ଦଇେଅଛୁ।இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

15 ଆମ୍ଭମାନେେ ଆମ୍ଭମାନଙ୍କ ପୂର୍ବପୁରୁଷମାନଙ୍କ ପରି କବଳେ ଅପରିଚିତ ଆଗନ୍ତୁକ ଅଟୁ ଓ ଏହି ପୃଥିବୀ ମଧିଅରେ ଭ୍ରମଣ କରୁଅଛୁ। ଏହି ପୃଥିବୀର ଆମ୍ଭମାନଙ୍କର ସମୟ କବଳେ ଅତିକ୍ରାନ୍ତ ଛାଯା ତୁଲ୍ଯ। ଆମ୍ଭମାନେେ ତାହାକୁ ବନ୍ଦ କରି ନ ପାରୁ।உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.

16 ହେ ସଦାପ୍ରଭୁ, ଆମ୍ଭମାନଙ୍କର ପରମେଶ୍ବର, ଆମ୍ଭମାନେେ ଏହି ସମସ୍ତ ବସ୍ତୁ ତୁମ୍ଭର ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିବା ନିମନ୍ତେ ଏକତ୍ର କରିଅଛୁ। ଆମ୍ଭମାନେେ ତୁମ୍ଭ ନାମକୁ ସମ୍ମାନ ଦବୋ ନିମନ୍ତେ ଏହି ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରୁଅଛୁଁ। କିନ୍ତୁ ଏହି ସମସ୍ତ ବସ୍ତୁ ତୁମ୍ଭଠାରୁ ଆ ସେ, ଓ ସକଳ ବସ୍ତୁ ତୁମ୍ଭର ଅଟେ।எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.

17 ହେ ମାରେ ପରମେଶ୍ବର, ମୁଁ ଜାଣେ ଯେ ତୁମ୍ଭେ ଲୋକମାନଙ୍କର ପରୀକ୍ଷା ନିଅ, ଆଉ, ଲୋକମାନେ ଉତ୍ତମ କର୍ମ କଲେ ତୁମ୍ଭେ ଆନନ୍ଦିତ ହୁଅ। ମୁଁ ଏକ ଶୁଦ୍ଧ, ବିଶ୍ବସ୍ତ ହୃଦଯ ରେ, ଆନନ୍ଦିତ ମନ ରେ ତୁମ୍ଭକୁ ଏହି ସମସ୍ତ ବସ୍ତୁ ଦେଉଅଛି। ମୁଁ ତୁମ୍ଭର ଲୋକମାନଙ୍କୁ ଏଠା ରେ ଏକତ୍ରୀତ ହବୋର ଦେଖୁଅଛି। ଆଉ ସମାନେେ ତୁମ୍ଭ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ଆନନ୍ଦିତ ମନ ରେ ଏହି ବସ୍ତୁଗୁଡ଼ିକ ଦାନ କରୁଥିବାର ମୁଁ ଦେଖୁଅଛି।என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.

18 ହେ ସଦାପ୍ରଭୁ, ତୁମ୍ଭେ ଆମ୍ଭମାନଙ୍କର ପୂର୍ବପୁରୁଷ ଅବ୍ରହାମ, ଇସ୍ହାକ୍ ଓ ଇଶ୍ରାୟେଲଙ୍କର ପରମେଶ୍ବର ଅଟ। ଅନୁଗ୍ରହ କରି ଯଥାର୍ଥ ବିଷଯ ଯୋଜନା କରିବାକୁ ତୁମ୍ଭର ଲୋକମାନଙ୍କୁ ସାହାୟ୍ଯ କର। ତୁମ୍ଭ ପ୍ରତି ଅନୁଗତ ଓ ବିଶ୍ବସ୍ତ ହବୋ ନିମନ୍ତେ ସମାନଙ୍କେୁ ସାହାୟ୍ଯ କର।ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.

19 ଆଉ, ମାରେପୁତ୍ର ଶଲୋମନକୁ ତୁମ୍ଭ ପ୍ରତି ବିଶ୍ବସ୍ତ ହବୋ ନିମନ୍ତେ ସାହାୟ୍ଯ କର। ସର୍ବଦା ତୁମ୍ଭର ଆଜ୍ଞା, ବିଧି ଓ ଶାସନ ସକଳର ବାଧ୍ଯ ହବୋ ନିମନ୍ତେ ତାହାକୁ ସାହାୟ୍ଯ କର। ଶଲୋମନଙ୍କୁ ଏହି ସମସ୍ତ ବିଷଯ କରିବା ନିମନ୍ତେ ସାହାୟ୍ଯ କର ଓ ଏହି ପବିତ୍ର ମନ୍ଦିର ରେ ନିର୍ମାଣ କରିବା ନିମନ୍ତେ ମୁଁ ଯେଉଁ ଯୋଜନା କରିଅଛି, ସେଥି ରେ ତାହାକୁ ସାହାୟ୍ଯ କର।என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக்கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.

20 ଏହାପରେ ଦାଉଦ ସବୁ ଦଳର ଲୋକମାନଙ୍କୁ ଏକତ୍ରୀତ କରି କହିଲେ, ବର୍ତ୍ତମାନ ତୁମ୍ଭମାନଙ୍କର ସଦାପ୍ରଭୁ ପରମେଶ୍ବରଙ୍କର ଧନ୍ଯବାଦ କର। ତେଣୁ ସମସ୍ତ ଲୋକ ସଦାପ୍ରଭୁ ପରମେଶ୍ବରଙ୍କର ପ୍ରଶଂସାଗାନ କଲେ, ଯେଉଁ ପରମେଶ୍ବରଙ୍କ ଉପାସନା ସମାନଙ୍କେର ପୂର୍ବପୁରୁଷମାନେ ମଧ୍ଯ କରୁଥିଲେ। ସମାନେେ ସଦାପ୍ରଭୁ ଓ ରାଜାଙ୍କୁ ସମ୍ମାନ ଜଣାଇବା ନିମନ୍ତେ ଭୂମିରେ ଆଣ୍ଠୁମାଡ଼ି ପଡ଼ିଲେ।அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,

21 ପରଦିନ ଲୋକମାନେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ବଳିଦାନ କଲେ। ସମାନେେ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ହାମବେଳି ଅର୍ପଣ କଲେ। ସମାନେେ 1,000 ବଳଦ, 1,000 ଅଣ୍ଡିରା ମଷେ, 1,000 ମଷେଶାବକ ଓ ପଯେ ନବୈେଦ୍ଯ ଉତ୍ସର୍ଗ କଲେ। ସମାନେେ ଇଶ୍ରାୟେଲର ଲୋକମାନଙ୍କ ନିମନ୍ତେ ଅନକେ ମଙ୍ଗଳାର୍ଥକ ନବୈେଦ୍ଯ ଉତ୍ସର୍ଗ କଲେ।கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.

22 ସହେିଦିନ ଲୋକମାନେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ସହିତ ଏକତ୍ର ଭୋଜନ ଓ ପାନ କରି ଅତି ଆନନ୍ଦିତ ହେଲେ।அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடு கர்த்தருக்கு முன்பாகப் போஜனபானம்பண்ணி, தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம்விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்பண்ணினார்கள்.

23 ଏହାପରେ ଶଲୋମନ ସଦାପ୍ରଭୁଙ୍କ ସିଂହାସନ ରେ ରାଜାରୂପେ ବସିଲେ। ଶଲୋମନ ତାଙ୍କ ପିତାଙ୍କ ସ୍ଥାନ ନେଲେ। ଶଲୋମନ ଅତ୍ଯନ୍ତ ସଫଳ ହେଲେ। ଇଶ୍ରାୟେଲର ସମସ୍ତ ଲୋକ ଶଲୋମନଙ୍କର ବାଧ୍ଯ ହେଲେ।அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே, கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.

24 ସମସ୍ତ ନେତାଗଣ, ସୈନ୍ଯଗଣ ଓ ରାଜା ଦାଉଦଙ୍କର ପୁତ୍ରଗଣ ଶଲୋମନଙ୍କୁ ରାଜାରୂପେ ସ୍ବୀକାର କଲେ ଓ ତାଙ୍କର ବାଧ୍ଯ ହେଲେ।சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.

25 ସଦାପ୍ରଭୁ ଶଲୋମନଙ୍କୁ ଅତି ମହାନ୍ କଲେ। ଇଶ୍ରାୟେଲର ସମସ୍ତ ଲୋକ ଜାଣିଥିଲେ ଯେ, ସଦାପ୍ରଭୁ ହିଁ ଶଲୋମନଙ୍କୁ ମହାନ୍ କରିଅଛନ୍ତି। ସଦାପ୍ରଭୁ ଶଲୋମନଙ୍କୁ ରାଜୋଚିତ ସମ୍ମାନ ପ୍ରଦାନ କଲେ। ଶଲୋମନଙ୍କ ପୂର୍ବରୁ ଇଶ୍ରାୟେଲର କୌଣସି ରାଜା ଏହିପରି ସମ୍ମାନ ପାଇ ନ ଥିଲେ।இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

26 ୟିଶୀଙ୍କ ପୁତ୍ର ଦାଉଦ ସମଗ୍ର ଇଶ୍ରାୟେଲ ଉପରେ ଚାଳିଶ ବର୍ଷ ବ୍ଯାପି ରାଜା ଥିଲେ। ଦାଉଦ ହିବ୍ରୋଣ ନଗର ରେ ସାତବର୍ଷ ପର୍ୟ୍ଯନ୍ତ ରାଜା ଥିଲେ।இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.

27 ଏହାପରେ ଦାଉଦ ୟିରୁଶାଲମ ନଗର ରେ ତତେିଶ ବର୍ଷ ପର୍ୟ୍ଯନ୍ତ ରାଜା ଥିଲେ।அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழுவருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.

28 ଦାଉଦ ବୃଦ୍ଧ ହବୋରୁ ମୃତ୍ଯୁଭୋଗ କଲେ। ଦାଉଦ ଏକ ଉତ୍ତମ, ଦୀର୍ଘ ଜୀବନୟାପନ କରିଥିଲେ। ଦାଉଦ ଅନକେ ଧନସମ୍ପତ୍ତି ଓ ସମ୍ମାନର ଅଧିକାରୀ ହାଇେଥିଲେ ଆଉ ଦାଉଦଙ୍କ ପରେ ତାଙ୍କର ପୁତ୍ର ଶ ଲୋମନ ରାଜା ହେଲେ।அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய் நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.

29 ରାଜା ଦାଉଦଙ୍କର କୃତ ସମସ୍ତ ବିଷଯ, ଆରମ୍ଭରୁ ଶଷେ ପର୍ୟ୍ଯନ୍ତ ଶାମୁଯଲେ ଭବିଷ୍ଯତବକ୍ତା, ନାଥନ ଭବିଷ୍ଯତବକ୍ତା ଓ ଗାଦ୍ ଭବିଷ୍ଯତବକ୍ତାମାନଙ୍କର ପୁସ୍ତକଗୁଡ଼ିକରେ ଲଖାୟୋଇଅଛି।தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,

30 ଦାଉଦ ଇଶ୍ରାୟେଲର ରାଜା ରୂପେ ଯେଉଁ ସମସ୍ତ ବିଷଯ କରିଥିଲେ, ସହେି ଲଖାଗେୁଡ଼ିକ ତାହାର ବିବରଣୀ ପ୍ରଦାନ କରେ। ସହେି ଲଖାଗେୁଡ଼ିକ ଦାଉଦଙ୍କ ପରାକ୍ରମ ଓ ତାଙ୍କ ପ୍ରତି ଘଟିତ ସକଳ ବିଷଯ ବର୍ଣ୍ଣନା କରେ। ଆଉ ସଗେୁଡ଼ିକ ଇଶ୍ରାୟେଲ ଓ ତାହାର ଚତୁର୍ଦ୍ଦିଗ ରେ ଥିବା ରାଜ୍ଯଗୁଡ଼ିକ ପ୍ରତି ଘଟିଥିବା ସକଳ ବିଷଯ ବର୍ଣ୍ଣନା କରେ।ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

Tamil Bible