1 Kings 18 - ORIYA (Tamil)
1 ଅନାବୃଷ୍ଟିର ତୃତୀୟ ବର୍ଷ ରେ ସଦାପ୍ରଭୁ ଏଲିଯଙ୍କୁ କହିଲେ, ତୁମ୍ଭେ ୟାଇ ରାଜା ଆହାବ୍ଙ୍କୁ ସାକ୍ଷାତ କର। ଆମ୍ଭେ ଭୂମିକୁ ଶୀଘ୍ର ବୃଷ୍ଟି ପଠାଇବୁ।அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
2 ତେଣୁ ଏଲିଯ ରାଜା ଆହାବଙ୍କୁ ଭଟେିବାକୁ ଗଲେ।அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் சமாரியாவிலே கொடிதாயிருந்தது.
3 ତେଣୁ ରାଜା ଆହାବ୍ ରାଜଗୃହର ଅଧ୍ଯକ୍ଷ ଓବଦିଯକୁ ଡକାଇଲେ। ଓବଦିଯ ସଦାପ୍ରଭୁଙ୍କର ପ୍ରକୃତ ଅନୁଗାମୀ ଥିଲେ।ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.
4 ପୁଣି ଯେଉଁ ସମୟରେ ଈଷବଲେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାମାନଙ୍କୁ ସଂହାର କରୁଥିଲେ ସେ ସମୟରେ ଓବଦିଯ ଏକଶତ ଭବିଷ୍ଯତ୍ବକ୍ତାଙ୍କୁ ନଇେ ପଗ୍ଭଶ ଜଣ କରି ଗୋଟିଏ ଗହ୍ବର ମଧିଅରେ ଲୁଗ୍ଭଇ ରଖି ସମାନଙ୍କେୁ ଅନ୍ନ ଜଳ ଦଇେ ପ୍ରତିପାଳନ କରିଥିଲେ।யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.
5 ଆହାବ୍ ଓବଦିଯକୁ କହିଲେ, ମାେ ସହିତ ଆସ, ଆସ ୟିବା ଏବଂ ଦେଶର ସବୁ ଝରଣା ଓ ନଦୀ କୂଳ ଦେଖିବା। ଆମ୍ଭେ ଯଦି ଆମ୍ଭର ଅଶ୍ବଗୁଡିକ ଓ ଗଧମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରଚୁର ଘାସ ପାଇ ପାରିବା ତବେେ ଆମ୍ଭେ ଆମ୍ଭର ପଶୁମାନଙ୍କୁ ବଧ କରିବାକୁ ପଡିବ ନାହିଁ।ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.
6 ସମାନଙ୍କେ ମଧ୍ଯରୁ ପ୍ରେତ୍ୟକକ ଲୋକ ଦେଶ ମଧିଅରେ ଗୋଟିଏ ଗୋଟିଏ ପ୍ରାନ୍ତକୁ ଜଳର ଅନ୍ବଷେଣ କରିବାକୁ ଗଲେ। ଆହାବ୍ ଗୋଟିଏ ଦିଗ ରେ ଓ ଓବଦିଯ ଅନ୍ୟ ଦିଗ ରେ ଗଲେ।அப்படியே தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.
7 ଓବଦିଯ ପଥ ମଧିଅରେ ଯାଉ ଯାଉ ଏଲିଯଙ୍କୁ ଭଟେିଲେ। ସେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଏଲିଯଙ୍କୁ ଚିହ୍ନିଲେ ଓ ମୁଣ୍ତ ନିଆଁଇ ପ୍ରଣାମ କରି କହିଲେ, ତୁମ୍ଭେ କ'ଣ ମାରେ ମହାଶୟ ଏଲିଯ?ஒபதியா வழியில் போகுபோது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;
8 ଏଲିଯ ତହୁଁ ଉତ୍ତର କଲେ, ହଁ, ମୁଁ ଏଲିଯ, ୟାଅ ତୁମ୍ଭ ମୁନିବଙ୍କୁ ଜଣାଅ ମୁଁ ଏଠା ରେ ଅଛି।அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்.
9 ତା'ପରେ ଓବଦିଯ କହିଲେ, ଯଦି ମୁଁ ଆହାବ୍ଙ୍କୁ ତୁମ୍ଭର ଉପସ୍ଥିତି କ ହେ, ତବେେ ସେ ମାେତେ ବଧ କରିବେ। ମୁଁ ତ ତୁମ୍ଭ ନିକଟରେ କିଛି ଅପରାଧ କରି ନାହିଁ, ତବେେ ତୁମ୍ଭେ ମାେତେ କାହିଁକି ମରାଇବାକୁ ଇଚ୍ଛା କରୁଛ?அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
10 ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭର ପରମେଶ୍ବର ଅଛନ୍ତି। ମୁଁ ପରମେଶ୍ବରଙ୍କ ନାମ ରେ ପ୍ରତିଜ୍ଞା କରି କହୁଛି, ଦେଶ ମଧିଅରେ ଏପରି କୌଣସି ଗୋଷ୍ଠୀ ବା ରାଜ୍ଯ ନାହିଁ ଯେଉଁସ୍ଥାନକୁ ମାରେ ପ୍ରଭୁ ତୁମ୍ଭକୁ ଅନ୍ବଷେଣ କରିବାକୁ ପଠାଇ ନାହାଁନ୍ତି। ତୁମ୍ଭକୁ ଖାଜେିବାକୁ ରାଜା ପ୍ରେତ୍ୟକକ ଦେଶକୁ ଲୋକ ପଠାଇ ଅଛନ୍ତି। ସହେି ଦେଶର ଶାସକମାନଙ୍କୁ ଶପଥ କରିବା ପାଇଁ ବାଧ୍ଯ କରିଛନ୍ତି ଯେ, ସମାନେେ ତୁମ୍ଭକୁ ସମାନଙ୍କେ ଦେଶ ରେ ପାଇ ନାହାନ୍ତି।உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.
11 ଏବେ ତୁମ୍ଭେ କହୁଛ, ୟାଅ ଓ ତୁମ୍ଭ ପ୍ରଭୁଙ୍କୁ କୁହ ଏଲିଯ ଏଠା ରେ ଅଛନ୍ତି।இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
12 ଯଦି ମୁଁ ୟାଇ ତୁମ୍ଭ ବିଷଯ ରେ ରାଜା ଆହାବ୍ଙ୍କୁ ଜଣାଏ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଆତ୍ମା ତୁମ୍ଭରୁ ମାରେ ଅଜଣା ସ୍ଥାନକୁ ନଇେଯିବେ। ଯେତବେେଳେ ଆହାବ୍ ତୁମ୍ଭକୁ ନ ପାଇବେ ସେ ମାେତେ ହତ୍ଯା କରିବେ। ମାତ୍ର ମୁଁ ବାଲ୍ଯ କାଳରୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଅନୁଗାମୀ ହାଇେ ଆସୁଛି।நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்.
13 ମୁଁ ଯାହା କରିଛି ତୁମ୍ଭେ ସେ ସବୁ ଜାଣିଛ। ଈଷବଲେ ଯେତବେେଳେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାମାନଙ୍କୁ ମାରିପକାଉ ଥିଲା। ମୁଁ ସମାନଙ୍କେ ମଧ୍ଯରୁ ଏକଶତ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାଙ୍କୁ ନଇେ ପଗ୍ଭଶ ଜଣ କରି ଦୁଇଟି ଗହ୍ବର ରେ ଲୁଗ୍ଭଇ ରଖିଥିଲି ଓ ସମାନଙ୍କେୁ ଅନ୍ନ ଜଳ ଦଇେ ଭରଣ ପୋଷଣ କରିଥିଲି।யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
14 ଏବେ ତୁମ୍ଭେ କହୁଛ, ୟାଅ ତୁମ୍ଭ ମୁନିବଙ୍କୁ କୁହ ଏଲିଯ ଏଠା ରେ ଅଛି। ତହିଁରେ ସେ ମାେତେ ବଧ କରିବେ।இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.
15 ଏଲିଯ ଉତ୍ତର କଲେ, ସର୍ବଶକ୍ତିମଯ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଜୀବିତ ଥିବା ପର୍ୟ୍ଯନ୍ତ ମୁଁ ପ୍ରତିଜ୍ଞା କରୁଛି, ମୁଁ ନିଶ୍ଚଯ ରାଜାଙ୍କୁ ଆଜି ଦଖାେ କରିବି।அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
16 ତେଣୁ ଓବଦିଯ ରାଜା ଆହାବ୍ଙ୍କୁ ଏଲିଯଙ୍କ ଉପସ୍ଥିତି ଜଣାଇଲେ। ରାଜା ଏଲିଯଙ୍କୁ ସାକ୍ଷାତ କରିବାକୁ ଗଲେ।அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
17 ଆହାବ୍ ଏଲିଯଙ୍କୁ ପଚାରିଲେ, ତୁମ୍ଭେ କ'ଣ ସହେି, ଯେ ଇଶ୍ରାୟେଲର ଦୁଃଖର କାରଣ?ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
18 ଏଲିଯ କହିଲେ, ନା, ମୁଁ ଇଶ୍ରାୟେଲର ଅସୁବିଧା କରି ନାହିଁ। ତୁମ୍ଭେ ଓ ତୁମ୍ଭର ପିତୃବଂଶ ଏହି ଅସୁବିଧାର କାରଣ। ଏବଂ ତୁମ୍ଭମାନେେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଆଜ୍ଞା ମାନିବା ବନ୍ଦ କରି ଭଣ୍ତ ଦବେତା ବାଲ୍ର ପୂଜା କରିବା ଆରମ୍ଭ କଲ।அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
19 ଏବେ ତୁମ୍ଭେ ଲୋକ ପଠାଇ ସମଗ୍ର ଇଶ୍ରାୟେଲକୁ କର୍ମିଲ ପର୍ବତ ରେ ଦଖାେ କରିବାକୁ କୁହ। ବାଲ୍ ଦବେତାର 450 ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତା ଓ ଅଶରୋ ବଦେୀର 400 ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାଙ୍କୁ ସହେି ପର୍ବତ ରେ ଦଖାେ କରିବାକୁ ଏକତ୍ର କର। ଯେଉଁମାନେ ସାଧାରଣତଃ ଇଷବଲରେ ମଜେ ରେ ଭୋଜନ କରନ୍ତି ଏବଂ ସମାନଙ୍କେୁ ପର୍ବତକୁ ଆଣ।இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
20 ତେଣୁ ଆହାବ୍ ସମସ୍ତ ଇଶ୍ରାୟେଲୀୟଙ୍କୁ ଓ ସହେି ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାମାନଙ୍କୁ କର୍ମିଲ ପର୍ବତକୁ ଡକାଇଲେ।அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.
21 ଏଲିଯ ସମସ୍ତ ଇଶ୍ରାୟେଲ ଲୋକମାନଙ୍କୁ ସମ୍ ବୋଧନ କଲେ, ତୁମ୍ଭମାନେେ କେତକୋଳ ଦ୍ବିମତ ମଧିଅରେ ସନ୍ଦହେ ରେ ରହିବ? ସଦାପ୍ରଭୁଙ୍କର ପ୍ରକୃତ ଅନୁସରଣକାରୀ ହୁଅ, ଯଦି ତୁମ୍ଭେ ତାଙ୍କୁ ସତ୍ଯ ଭାବୁଛ। ଅନ୍ୟ ପକ୍ଷ ରେ ଯଦି ବାଲ ଦବେତା ସତ୍ଯ ବୋଲି ଭାବୁଛ, ତାଙ୍କୁ ଅନୁସରଣ କର।அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
22 ତେଣୁ ଏଲିଯ କହିଲେ, ମୁଁ ଏଠା ରେ ସଦାପ୍ରଭୁଙ୍କର ଏକମାତ୍ର ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତା ଅଛି, ମାତ୍ର ବାଲ୍ର 450 ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତା ଏଠା ରେ ଅଛନ୍ତି।அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.
23 ଦୁଇଟି ବୃଷଭ ଆଣ। ବାଲ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତା ସେଥି ମଧ୍ଯରୁ ଗୋଟିଏ ନେଉ ଏବଂ ତାକୁ ବଧ କରି ତାକୁ ଖଣ୍ତ ଖଣ୍ତ କରି କାଠ ଉପରେ ରଖୁ। ସମାନେେ ସେଥି ରେ ଅଗ୍ନି ସଂୟୋଗ କରିବା ଉଚିତ୍ ନୁହେଁ। ମାେତେ ମଧ୍ଯ ଗୋଟିଏ ବୃଷଭ ଦିଆଯାଉ। ଠିକ୍ ସହେିପରି ଖଣ୍ତ ଖଣ୍ତ ପ୍ରସ୍ତୁତ କରି କାଠ ଉପରେ ରଖିବି। ଏବଂ ମୁଁ ତାକୁ ଅଗ୍ନି ଲଗାଇବି।இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக் கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.
24 ତୁମ୍ଭେ ବାଲ୍ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାଗଣ ତୁମ୍ଭ ଦବେତାକୁ ତୁମ୍ଭର ପ୍ରାର୍ଥନା କରିବ ଓ ମୁଁ ମାରେ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିବି। ତହିଁରେ ଯେଉଁ ପରମେଶ୍ବର ଅଗ୍ନିଦ୍ବାରା ଉତ୍ତର ଦବେେ ସହେି ପ୍ରକୃତ ପରମେଶ୍ବର। ତା'ପରେ ସମସ୍ତ ଲୋକମାନେ ତାଙ୍କ ସହିତ ଏକମତ ହେଲେ ଏବଂ କହିଲେ, ଯାହା ତୁମ୍ଭେ କୁହ ଉତ୍ତମ ଅଟେ।நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்ʠοடுவேன்; ŠΪ்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.
25 ଏଲିଯ ବାଲ୍ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାଙ୍କୁ କହିଲେ, ତୁମ୍ଭମାନେେ ତ ଏଠା ରେ ଅନକେ ଅଛ। ପ୍ରଥମେ ତୁମ୍ଭମାନେେ ଗୋଟିଏ ବୃଷଭ ପସନ୍ଦ କର। ବୃଷଭଟିକୁ ପ୍ରସ୍ତୁତ କର ଏବଂ ତୁମ୍ଭମାନଙ୍କର ଦବେତାକୁ ପ୍ରାର୍ଥନା କର। ମାତ୍ର ଅଗ୍ନି ସଂୟୋଗ କର ନାହିଁ।அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
26 ତେଣୁ ସମାନେେ ବୃଷଭଟିକୁ ନେଲେ ଓ ପ୍ରସ୍ତୁତ କଲେ। ସମାନେେ ପ୍ରାତଃକାଳରୁ ମଧ୍ଯାହ୍ନ ପର୍ୟ୍ଯନ୍ତ ବାଲ ନାମ ରେ ପ୍ରାର୍ଥନା କରି କହିଲେ, ହେ ବାଲ୍ ଆମ୍ଭମାନଙ୍କ ବିନତି ଶୁଣ। ମାତ୍ର କୌଣସି ଶଦ୍ଦ ହେଲାନାହିଁ କି କହେି ଉତ୍ତର ଦେଲେ ନାହିଁ। ସମସ୍ତ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାଗଣ ସମାନଙ୍କେ ନିର୍ମିତ ୟଜ୍ଞବଦେୀର ଗ୍ଭରିପଟେ ନାଚିଲେ। ମାତ୍ର ଅଗ୍ନି ସଂଘଟିତ ହେଲା ନାହିଁ।தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
27 ଏଲିଯ ସମାନଙ୍କେୁ ପରିହାସ କରି କହିଲେ, ଯଦି ବାଲ୍ ସତ୍ଯ ଦବେତା, ତବେେ ଉଚ୍ଚସ୍ବର ରେ ଡାକ, ସେ ହୁଏତ ଧ୍ଯାନ କରୁଥିବ କିମ୍ବା ବାହାରକୁ ୟାଇଥିବ, କିମ୍ବା ୟାତ୍ରା କରୁଥିବ, ଅବା ସେ ନିଦ୍ରିତ ଥିବ, ଏଣୁ ତାକୁ ଜାଗ୍ରତ କରିବାକୁ ଉଚ୍ଚସ୍ବର ରେ ଡାକ।மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
28 ତେଣୁ ସମାନେେ ଉଚ୍ଚସ୍ବର ରେ ପ୍ରାର୍ଥନା କଲେ। ସମାନେେ ଖଣ୍ତା ଓ ବର୍ଚ୍ଛା ରେ ନିଜକୁ କ୍ଷତ ବିକ୍ଷତ କଲେ। ଏହିପରି ସମାନେେ ପୂଜା କରୁଥିଲେ। ସମାନଙ୍କେ ଶରୀରରୁ ଧାର ଧାର ରକ୍ତ ବହିଲା।அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
29 ଅପରାହ୍ନ ଅତିକ୍ରାନ୍ତ ହେଲା, ମାତ୍ର ଅଗ୍ନି ସୃଷ୍ଟି ହେଲା ନାହିଁ। ସମାନେେ ସନ୍ଧ୍ଯାକାଳୀନ ବଳିଦାନ ଉତ୍ସର୍ଗ କରିବା ପର୍ୟ୍ଯନ୍ତ ପ୍ରକାପ କରି ଚାଲିଲେ। କିନ୍ତୁ କୌଣସି ଶଦ୍ଦ ହେଲା ନାହିଁ, ବାଲ୍ କିଛି ଉତ୍ତର କଲେ ନାହିଁ କିମ୍ବା କହେି ମନୋୟୋଗ କଲେ ନାହିଁ।மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
30 ତା'ପରେ ଏଲିଯ ଲୋକମାନଙ୍କୁ ଡାକି କହିଲେ, ବର୍ତ୍ତମାନ ତୁମ୍ଭମାନେେ ମାେ ନିକଟକୁ ଆସ। ତେଣୁ ସମାନେେ ଏଲିଯର ଗ୍ଭରି ପାଖ ରେ ଏକତ୍ରୀତ ହେଲେ। ସଦାପ୍ରଭୁଙ୍କ ଭାଙ୍ଗି ୟାଇଥିବା ୟଜ୍ଞବଦେୀକୁ ଏଲିଯ ପୁନନିର୍ମାଣ କଲେ।அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு;
31 ଏଲିଯ ବାର ଗୋଟି ପଥର ପାଇଲେ। ଏହି ବାରଟି ପଥର ବାରଟି ଗୋଷ୍ଠୀ ପାଇଁ ଉର୍ଦ୍ଦିଷ୍ଟ ଥିଲା। ଏହା ବାରଟି ଗୋଷ୍ଠୀ ଯାକୁବଙ୍କର ବାର ପୁତ୍ରମାନଙ୍କର ନାମ ଅନୁସାରେ ହେଲେ। ସଦାପ୍ରଭୁ ଯାକୁବଙ୍କୁ ଇଶ୍ରାୟେଲ ନାମ ଦଇେଥିଲେ।உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
32 ଆଉ ସହେି ପଥର ରେ ସେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ନାମ ରେ ଏକ ୟଜ୍ଞବଦେୀ ପୁନଃନିର୍ମାଣ କରି ସହେି ୟଜ୍ଞବଦେୀର ଚତୁଃପାଶର୍ବ ରେ ଦୁଇମହଣ ବିହନ ଧରିଲା ଭଳି ଏକ ଖାଇ ନିର୍ମାଣ କଲେ।அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,
33 ତା'ପରେ ସେ ୟଜ୍ଞବଦେୀ କାଠ ସଜାଇ ସହେି କାଠ ଉପରେ ବୃଷଭକୁ ଖଣ୍ତ ଖଣ୍ତ କରି କାଟି ଥୋଇଲେ।விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.
34 ତା'ପରେ ଏଲିଯ କହିଲେ, ଗ୍ଭରିଟି କଳସ ଜଳ ରେ ପୂର୍ଣ୍ଣ କରି ସହେି ହାମାେର୍ଥକ ବଳିର ମାଂସ ଓ କାଠ ଉପରେ ଢାଳ। ପୁଣି ଏଲିଯ କହିଲେ, ଦ୍ବିତୀୟ ଥର ପାଇଁ ତାହା କର। ତା'ପରେ ପୁଣି କହିଲେ, ତୃତୀୟ ଥର ପାଇଁ ତାହା କର। ସମାନେେ ପ୍ରତିଥର ତାହାହିଁ କଲେ।பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.
35 ତଦ୍ଦ୍ବାରା ୟଜ୍ଞବଦେୀରୁ ଜଳ ବହି ଖାଇଟିକୁ ପୂର୍ଣ୍ଣ କଲା।அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
36 ସନ୍ଧ୍ଯାକାଳୀନ ପ୍ରାର୍ଥନା ଉତ୍ସର୍ଗ କରିବା ସମୟରେ ଏଲିଯ ସଦାପ୍ରଭୁଙ୍କ ୟଜ୍ଞବଦେୀ ନିକଟକୁ ଗଲେ ଓ କହିଲେ, ହେ ସଦାପ୍ରଭୁ, ଅବ୍ରହାମ, ଇସ୍ହାକ ଓ ଯାକୁବର ପରମେଶ୍ବର ଇଶ୍ରାୟେଲୀୟମାନଙ୍କୁ ଆଜି ପ୍ରମାଣ କର ଯେ, ତୁମ୍ଭେ ଇଶ୍ରାୟେଲର ପରମେଶ୍ବର ଓ ମୁଁ ଯେ ତୁମ୍ଭର ସବେକ ଏବଂ ମୁଁ ଯେ ତୁମ୍ଭ ବାକ୍ଯ ଅନୁସାରେ ଏହିସବୁ କାର୍ୟ୍ଯ କରିଅଛି।அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
37 ହେ ସଦାପ୍ରଭୁ, ମାେ ପ୍ରାର୍ଥନାର ଉତ୍ତର ଦିଅ। ଆଉ ଏହି ଲୋକମାନଙ୍କୁ ଦଖାଇେ ଦିଅ ଯେ ତୁମ୍ଭେ ସଦାପ୍ରଭୁ, ପରମେଶ୍ବର, ତାହା ହେଲେ ସମାନେେ ସର୍ବାନ୍ତଃକରଣ ରେ ଜାଣିବେ ଯେ ତୁମ୍ଭେ ସମାନଙ୍କେୁ ତୁମ୍ଭ ନିକଟକୁ ଫରୋଇ ଆଣିଛ।கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
38 ସେତବେେଳେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ପ୍ ରରେିତ ଅଗ୍ନି ପ୍ରଜ୍ଜଳିତ ହେଲା ଓ ସହେି ଅଗ୍ନି ହାମାେର୍ଥକ ବଳି, କାଠ, ପ୍ରସ୍ତର, ଧୂଳି ଗ୍ରାସ କରି ୟଜ୍ଞବଦେୀର ଗ୍ଭରିପାଖ ରେ ଥିବା ଖାଇର ଜଳକୁ ଶୁଷ୍କ କରି ଦଲୋ।அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
39 ଏହା ଦେଖି ସମଗ୍ର ଲୋକ ଭୂମିରେ ମୁଣ୍ତ ନୁଆଁଇ କହିଲେ, ସଦାପ୍ରଭୁ ହିଁ ପରମେଶ୍ବର, ସଦାପ୍ରଭୁ ହିଁ ପରମେଶ୍ବର।ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
40 ତା'ପରେ ଏଲିଯ ସମାନଙ୍କେୁ କହିଲେ, ବାଲ୍ର ସମସ୍ତ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାଙ୍କୁ ଧର, କାହାରିକୁ ଛାଡ ନାହିଁ। ତେଣୁ ଲୋକମାନେ ସମସ୍ତ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତାଙ୍କୁ ଧରିଲେ। ତତ୍ପରେ ଏଲିଯ ସମାନଙ୍କେୁ କୀଶୋନ ନଦୀ ନିକଟକୁ ନଇେ ସଠାେରେ ହତ୍ଯା କଲେ।அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
41 ତତ୍ପରେ ଏଲିଯ ରାଜା ଆହାବ୍ଙ୍କୁ କହିଲେ, ବର୍ତ୍ତମାନ ତୁମ୍ଭେ ୟାଇ ପାନ, ଭୋଜନ କର। କାରଣ ପ୍ରବଳ ବର୍ଷା ଆସୁଅଛି।பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
42 ତେଣୁ ରାଜା ଆହାବ୍ ଭୋଜନ ନିମନ୍ତେ ଗଲେ। ଏଲିଯ କର୍ମିଲ ପର୍ବତର ଉପରକୁ ଚଢି଼ଲେ ଆଶା ରେ ପଡିଲେ ଏବଂ ଆପଣା ଆଣ୍ଠୁ ମଧିଅରେ ମୁଣ୍ତ ରଖିଲେ।ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,
43 ତା'ପରେ ଏଲିଯ ତାଙ୍କର ସବେକକୁ କହିଲେ, ସମୁଦ୍ର ଆଡକୁ ଅନାଅ।தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
44 ସପ୍ତମ ଥର ରେ ସବେକ ଫରେିଆସି କହିଲା, ମୁଁ ମନୁଷ୍ଯର ହାତମୁଠା ସଦୃଶ ଖଣ୍ଡେ କ୍ଷୁଦ୍ର ମେଘ ସମୁଦ୍ରରୁ ଉଠିବାପରି ଦେଖୁଛି।ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றாள்.
45 ଅଳ୍ପକ୍ଷଣ ପରେ ଆକାଶ କଳା ମେଘ ରେ ଆବୃତ ହାଇେ ପବନ ବହି ପ୍ରବଳ ବୃଷ୍ଟି ଆରମ୍ଭ ହାଇଗେଲା। ଆହାବ୍ ତାଙ୍କର ରଥରେ ବସି ୟିଷ୍ରିଯଲକେୁ ଗଲେ।அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
46 ସଦାପ୍ରଭୁଙ୍କ ଶକ୍ତି ଏଲିଯଙ୍କ ଉପରେ ପଡିଲା। ସେ ନିଜର କଟି ବସ୍ତ୍ରକୁ ଶକ୍ତ ଭାବରେ ବାନ୍ଧି ୟିଷ୍ରିଯଲରେ ପ୍ରବେଶ ସ୍ଥାନ ପର୍ୟ୍ଯନ୍ତ ଆହାବ୍ଙ୍କ ଆଗେ ଆଗେ ଦୌଡିଗଲେ।கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான்.
Tamil Bible