2 Kings 6 - TELUGU (Tamil)
1 అంతట ప్రవక్తల శిష్యులు ఎలీషాయొద్దకు వచ్చిఇదిగో నీయొద్ద మాకున్న స్థలము ఇరుకుగా నున్నది;தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.
2 నీ సెలవైతే మేము యొర్దాను నదికి పోయి తలయొక మ్రాను అచ్చటనుండి తెచ్చుకొని మరియొకచోట నివాసము కట్టుకొందుమని మనవి చేయగా అతడువెళ్లుడని ప్రత్యుత్తరమిచ్చెను.நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
3 ఒకడుదయచేసి నీ దాసులమైన మాతో కూడ నీవు రావలెనని కోరగా అతడునేను వచ్చెదనని చెప్పిஅவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
4 వారితోకూడ పోయెను; వారు యొర్దానుకు వచ్చి మ్రానులు నరుకుచుండిరి.அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்த போது மரங்களை வெட்டினார்கள்.
5 ఒకడు దూలము నరుకుచున్నప్పుడు గొడ్డలి ఊడి నీటిలో పడి పోగా వాడు అయ్యో నా యేలినవాడా, అది యెరవుతెచ్చినదని మొఱ్ఱపెట్టెను గనుకஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.
6 ఆ దైవజనుడు అదెక్కడపడెనని అడిగెను; వాడు అతనికి ఆ స్థలమును చూపింపగా అతడు కొమ్మయొకటి నరికి నీళ్లలో వేయగా గొడ్డలి తేలెను.தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,
7 అతడు దానిని పట్టుకొనుమని వానితో చెప్పగా వాడు తన చెయ్యి చాపి దానిని పట్టుకొనెను.அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
8 సిరియారాజు ఇశ్రాయేలుతో యుద్ధముచేయవలెనని కోరి తన సేవకులతో ఆలోచనచేసిఫలానిస్థలమందు మన దండు పేట ఉంచుదమని చెప్పెను.அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.
9 అయితే ఆ దైవ జనుడు ఇశ్రాయేలురాజునకు వర్తమానము పంపిఫలాని స్థలమునకు నీవు పోవద్దు, అచ్చటికి సిరియనులు వచ్చి దిగి యున్నారని తెలియజేసెను గనుకஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான்.
10 ఇశ్రాయేలురాజు దైవజనుడు తనకు తెలిపి హెచ్చరికచేసిన స్థలమునకు పంపి సంగతి తెలిసికొని తనవారిని రక్షించుకొనెను. ఈలాగు మాటిమాటికి జరుగుచు వచ్చినందునஅப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.
11 సిరియారాజు కల్లోలపడి తన సేవకులను పిలిచిమనలో ఇశ్రాయేలు రాజు పక్షము వహించిన వారెవరైనది మాకు తెలియజెప్ప రాదా అని వారి నడుగగాஇந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
12 అతని సేవకులలో ఒకడురాజవైన నా యేలినవాడా, ఇశ్రాయేలురాజు పక్షమున ఎవరును లేరుగాని ఇశ్రాయేలులో నున్న ప్రవక్తయగు ఎలీషా మీ అంతఃపురమందు మీరు అనుకొనిన మాటలు ఇశ్రాయేలురాజునకు తెలియజేయుననెను.அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
13 అందుకు రాజుమేము మనుష్యులను పంపి అతని తెప్పించునట్లు నీవు వెళ్లి అతడుండు చోటు చూచి రమ్ము అని సెలవియ్యగా అతడు దోతానులో ఉన్నాడని వర్తమానము వచ్చెను.அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
14 కాబట్టి రాజు అచ్చటికి గుఱ్ఱములను రథము లను గొప్పసైన్యమును పంపెను. వారు రాత్రివేళ వచ్చి నలుదిశలను పట్టణమును చుట్టుకొనగాஅப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.
15 దైవజనుడైన అతని పనివాడు పెందలకడ లేచి బయటికి వచ్చి నప్పుడు గుఱ్ఱములును రథములును గల సైన్యము పట్టణ మును చుట్టుకొని యుండుట కనబడెను. అంతట అతని పనివాడు అయ్యో నా యేలినవాడా, మనము ఏమి చేయుదమని ఆ దైవజనునితో అనగాதேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
16 అతడుభయ పడవద్దు, మన పక్షమున నున్నవారు వారికంటె అధికులై యున్నారని చెప్పిஅதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
17 యెహోవా, వీడు చూచునట్లు దయచేసి వీని కండ్లను తెరువుమని ఎలీషా ప్రార్థనచేయగా యెహోవా ఆ పనివాని కండ్లను తెరవచేసెను గనుక వాడు ఎలీషాచుట్టును పర్వతము అగ్ని గుఱ్ఱములచేత రథ ములచేతను నిండియుండుట చూచెను.அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
18 ఆ దండువారు అతని సమీపించినప్పుడు ఎలీషాఈ జనులను అంధత్వ ముతో మొత్తుమని యెహోవాను వేడుకొనగా ఆయన ఎలీషాచేసిన ప్రార్థనచొప్పున వారిని అంధత్వముతో మొత్తెను.அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.
19 అప్పుడు ఎలీషాఇది మార్గముకాదు, ఇది పట్టణము కాదు, మీరు నా వెంట వచ్చినయెడల మీరు వెదకువానియొద్దకు మిమ్మును తీసికొని పోదునని వారితో చెప్పి షోమ్రోను పట్టణమునకు వారిని నడిపించెను.அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.
20 వారు షోమ్రోనులోనికి వచ్చినప్పుడు అతడుయెహోవా, వీరు చూచునట్లు వీరి కండ్లను తెరువుమని ప్రార్థనచేయగా యెహోవా వారి కండ్లను తెరవచేసెను గనుక వారు తాము షోమ్రోను మధ్య ఉన్నామని తెలిసికొనిరి.அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
21 అంతట ఇశ్రాయేలురాజు వారిని పారజూచినాయనా వీరిని కొట్టుదునా, కొట్టుదునా? అని ఎలీషాను అడుగగాஇஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப் போடலாமா என்று கேட்டான்.
22 అతడునీవు వీరిని కొట్టవద్దు; నీ కత్తిచేతను నీ వింటిచేతను నీవు చెరపట్టిన వారినైనను కొట్టుదువా? వారికి భోజనము పెట్టించి వారు తిని త్రాగిన తరువాత వారు తమ యజమానుని యొద్దకు వెళ్లుదురని చెప్పెను.அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக் கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்.
23 అతడు వారి కొరకు విస్తారమైన భోజన పదార్థములను సిద్ధపరచగా వారు అన్నపానములు పుచ్చుకొని రాజు సెలవుపొంది తమ యజమానుని యొద్దకు పోయిరి. అప్పటినుండి సిరి యనుల దండువారు ఇశ్రాయేలు దేశములోనికి వచ్చుట మానిపోయెను.அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.
24 అటుతరువాత సిరియా రాజైన బెన్హదదు తన సైన్య మంతటిని సమకూర్చుకొని వచ్చి షోమ్రోనునకు ముట్టడి వేసెను.இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.
25 అప్పుడు షోమ్రోనులో గొప్ప క్షామము కలిగి యుండగా గాడిదయొక్క తల ఎనుబది రూపాయలకును, అరపావు పావురపు రెట్ట అయిదు రూపాయలకును అమ్మ బడెను; వారు అంత కఠినముగా ముట్టడి వేసియుండిరి.அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள்.
26 అంతట ఇశ్రాయేలురాజు పట్టణపు ప్రాకారముమీద సంచారముచేయగా ఒక స్త్రీ రాజును చూచిరాజవైన నా యేలినవాడా, సహాయము చేయుమని కేకలు వేయుట వినిஇஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின் மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.
27 యెహోవా నీకు సహాయము చేయనిది నేనెక్కడ నుండి నీకు సహాయము చేయుదును? కళ్లములోనుండి యైనను ద్రాక్షగానుగలోనుండియైనను దేనినైనను ఇచ్చి సహాయముచేయ వల్లపడదని చెప్పిஅதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
28 నీ విచారమునకు కారణమేమని యడుగగా అదిఈ స్త్రీ నన్ను చూచినేటి ఆహారమునకు నీ బిడ్డను ఇమ్ము రేపు మనము నా బిడ్డను భక్షించుదుము, అని చెప్పినప్పుడుராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.
29 మేము నా బిడ్డను వంటచేసికొని తింటివిు. అయితే మరునాటియందు నేను దాని చూచినేటి ఆహారమునకు నీ బిడ్డను ఇమ్మని అడిగితిని గాని అది తన బిడ్డను దాచిపెట్టెనని చెప్పెను.அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவிட்டாள் என்றாள்.
30 రాజు ఆ స్త్రీ మాటలు విని తన వస్త్రములను చింపుకొని యింక ప్రాకారముమీద నడిచి పోవుచుండగా జనులు అతనిని తేరి చూచినప్పుడు లోపల అతని ఒంటి మీద గోనెపట్ట కనబడెను.அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்.
31 తరువాత రాజుషాపాతు కుమారుడైన ఎలీషాయొక్క తల యీ దినమున అతనిపైన నిలిచియున్నయెడల దేవుడు నాకు గొప్ప అపాయము కలుగజేయునుగాక అనెను.அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
32 అయితే ఎలీషా తన యింట కూర్చునియుండగా పెద్దలును అతనితోకూడ కూర్చుండి యున్నప్పుడు రాజు ఒక మనిషిని పంపెను. ఆ పంప బడినవాడు ఎలీషాదగ్గరకు రాకమునుపే అతడు ఆ పెద్ద లను చూచిఈ నరహంతకుని కుమారుడు నా తలను కొట్టి వేయుటకు ఒకని పంపియున్నాడని మీకు తెలిసినదా? మీరు కనిపెట్టి యుండి, ఆ దూత రాగా వాడు లోపలికి రాకుండ తలుపుతో వానిని వెలుపలికి తోసి తలుపు మూసి వేయుడి;వాని యజమానుని కాళ్లచప్పుడు వానివెనుక వినబడును గదా అని వారితో చెప్పుచుండగాஎலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
33 ఆ దూత అతనియొద్దకు వచ్చెను. అంతట రాజుఈ కీడు యెహోవా వలననైనది, నేను ఇక ఎందుకు యెహోవాకొరకు కనిపెట్టి యుండవలెననెను.அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
Tamil Bible