ஏசாயா 15

fullscreen1 மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

fullscreen2 அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

fullscreen3 அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும் அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.

fullscreen4 எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

fullscreen5 என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.

fullscreen6 நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து பச்சையில்லாமற்போகிறது.

fullscreen7 ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும் அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.

fullscreen8 கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.

fullscreen9 தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்

Cross Reference

Psalm 41:9
ମାରେ ଅନ୍ତରଙ୍ଗ ବନ୍ଧୁ ମାେ ସହିତ ଭୋଜନ କଲେ ଏବଂ ମୁଁ ତାଙ୍କୁ ବିଶ୍ବାସ କଲି। କିନ୍ତୁ ଦେଖ, ସେ ଆଜି ମାେ ବିରୁଦ୍ଧରେ ଯାଉଛନ୍ତି।

Psalm 55:12
ୟଦି କୌଣସି ଶତ୍ରୁ ମାେତେ ତିରସ୍କାର କଲା ମୁଁ ସହନ୍ତି। ୟଦି ମାରେ ଶତ୍ରୁମାନେ ମାେ ବିରୁଦ୍ଧରେ ଆକ୍ରମଣ କରନ୍ତି। ମୁଁ ତାଙ୍କଠାରୁ ନିଜକୁ ଲୁଚାନ୍ତି।

Luke 22:48
କିନ୍ତୁ ଯୀଶୁ ତାହାଙ୍କୁ କହିଲେ, ୟିହୂଦା, ତୁମ୍ଭେ କ'ଣ ମନୁଷ୍ଯପୁତ୍ରଙ୍କୁ ତାହାଙ୍କ ଶତୃମାନଙ୍କ ହାତ ରେ ଦଇେ ଦବୋପାଇଁ ବଂଧୁତାର ଚୁମ୍ବନକୁ ବ୍ଯବହାର କରୁଛ?

Job 6:14
ଜଣେ ବ୍ଯକ୍ତିର ସାଙ୍ଗମାନେ ତା'ର କଷ୍ଟ ସମୟରେ ତାକୁ ଦୟା କରିବା କଥା, ଯଦିଓ ସେ ସର୍ବଶକ୍ତିମାନ ପରମେଶ୍ବରଙ୍କଠାରୁ ବିମୁଖ ହୁଏ।

Psalm 38:11
ମାରେ ରୋଗ ଯୋଗୁଁ ମାରେ ବନ୍ଧୁ ଓ ପଡ଼ୋଶୀମାନେ ମାେତେ ଦଖାେ କରିବାକୁ ଆସନ୍ତି ନାହିଁ। ମାରେ ପରିବାରବର୍ଗ ମାଠାରୁେ ଦୂରଇେ ରହନ୍ତି।

Psalm 55:20
ମାରେ ଶତ୍ରୁମାନେ ସମାନଙ୍କେର ଜୀବନ ଧାରଣର ପଥ ବଦଳାଇବେ ନାହିଁ। ସମାନେେ ପରମେଶ୍ବରଙ୍କୁ ଭୟ କରନ୍ତି ନାହିଁ କି ସମ୍ମାନ ଦିଅନ୍ତି ନାହିଁ।

Psalm 109:4
ମୁଁ ସମାନଙ୍କେୁ ପ୍ରମେ କଲି। କିନ୍ତୁ ସମାନେେ ମାେତେ ଦୋଷୀ କଲେ। କିନ୍ତୁ ମୁଁ କ୍ରମାଗତ ପ୍ରାର୍ଥନା କରିଚାଲିଛି।