Ezekiel 41 - TELUGU (Tamil)
1 తరువాత అతడు నన్ను ఆలయమునకు తోడుకొని వచ్చి దాని స్తంభములను కొలిచెను. ఇరుప్రక్కల అవి ఆరు మూరలాయెను, ఇది గుడారపు వెడల్పు.பின்பு அவர் என்னை தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாய் அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம்.
2 వాకిలి వెడల్పు పది మూరలు, తలుపు ఇరుప్రక్కల అయిదేసి మూరలు, దాని నిడివిని కొలువగా నలుబది మూరలు, దాని వెడల్పు ఇరువది మూరలు.வாசல் நடையின் அகலம் பத்துமுழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப் புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.
3 అతడు లోపలికి పోయి వాకిలి స్తంభమును కొలువగా రెండు మూరలాయెను, వాకిలి ఆరుమూరలు;వెడల్పు ఏడు మూరలు.பின்பு அவர் உள்ளேபோய் வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.
4 ఇది అతి పరిశుద్ధస్థలమని చెప్పి దాని నిడివిని కొలువగా ఇరువది మూరలును ఆలయమునకును దానికిని మధ్య వెడల్పు ఇరువది మూరలు నాయెను.பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபதுமுழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.
5 తరువాత అతడు మందిరపు గోడను కొలువగా ఆరు మూరలాయెను, మందిరపు ప్రక్కలనున్న మేడ గదులను కొలువగా నాలుగేసి మూరలాయెను.பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தை சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.
6 ఈ మేడగదులు మూడేసి అంతస్థులు గలవి. ఈలాగున ముప్పది గదులుండెను, ఇవి మేడ గదులచోటున మందిరమునకు చుట్టు కట్టబడిన గోడతో కలిసియుండెను; ఇవి మందిరపుగోడను ఆనుకొనియున్న ట్టుండి ఆనుకొనక యుండెను.இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது.
7 ఆ గోడ మేడగదులకు ఎక్కిన కొలది అవి మరి వెడల్పుగా పెరిగెను, పైకెక్కిన కొలది మందిరముచుట్టునున్న యీ మేడగదుల అంతస్థులు మరి వెడల్పగుచుండెను గనుక మందిరపు పైభాగము మరి వెడల్పుగా ఉండెను; పైకెక్కిన కొలది అంతస్థులు మరి వెడల్పుగా ఉండెను.உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.
8 మరియు నేను చూడగా మంది రము చుట్టునున్న నేలకట్టు ఎత్తుగా కనబడెను, ఏల యనగా ఆ మేడగదులకు ఆరు పెద్దమూరలుగల పునాది యుండెను.மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது.
9 మేడగదులకు బయటనున్న గోడ అయిదు మూరల వెడల్పు; మరియు మందిరపు మేడగదుల ప్రక్కల నున్న స్థలము ఖాలీగా విడువబడి యుండెనుபுறம்பே சுற்றுக்கட்டுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாயிருந்தது. ஆலயத்துக்கு இருக்கும் சுற்றுக்கட்டுகளின் மாளிகையிலே வெறுமையாய் விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.
10 గదులమధ్య మందరిముచుట్టు నలుదిశల ఇరువది మూరల వెడల్పున చోటు విడువబడి యుండెనుஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது.
11 మేడగదుల వాకిండ్లు ఖాలీగానున్న స్థలముతట్టు ఉండెను; ఒక వాకిలి ఉత్తరపు తట్టునను ఇంకొక వాకిలి దక్షిణపుతట్టునను ఉండెను. ఖాలీగా నున్న స్థలముచుట్టు అయిదు మూరల వెడల్పుం డెను.சுற்றுக்கட்டினுடைய வாசல் நடைகள், வெறுமையாய் விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் சுற்றிலும் ஐந்து முழமாயிருந்தது.
12 ప్రత్యేకింపబడిన చోటుకెదురుగానున్న కట్ట డము పడమటితట్టు డెబ్బది మూరల వెడల్పు, దాని గోడ అయిదు మూరల వెడల్పు; గోడ నిడివి తొంబది మూరలు.மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது.
13 మందిరముయొక్క నిడివిని అతడు కొలు వగా నూరు మూరలాయెను, ప్రత్యేకింపబడిన స్థల మును దాని కెదురుగానున్న కట్టడమును దానిగోడ లను కొలువగా నూరు మూరలాయెను.அவர் ஆலயத்தை நூறுமுழ நீளமாகவும், பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும் அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.
14 మరియు తూర్పుతట్టు మందిరపు నిడివిని ప్రత్యేకింపబడిన స్థలమును కొలువగా నూరు మూరలాయెను.ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான பிரத்தியேகமான இடமும் இருந்த அகலம் நூறுமுழமுமாயிருந்தது.
15 ఈలాగున మందిరపు వెనుకటి భాగమున ప్రత్యేకింపబడిన స్థలమున కెదురుగా నున్న కట్టడమును దాని ఇరుప్రక్కలనున్న వసారాలను కొలువగా నూరు మూరలాయెను.பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறுமுழமாயிருந்தது.
16 మరియు గర్భాలయ మును ఆవరణపు మంటపములను గడపలను కమ్ములుగల కిటికీలను ఎదుటి మూడు అంతస్థుల చుట్టునున్న వసారాలను ఆయన కొలిచెను. కిటికీలు మరుగుచేయబడెను, గడపలకెదురుగా నేలనుండి కిటికీలవరకు బల్ల కూర్పుండెనుவாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைகாவணங்களும் சுற்றிலும் தரைதுவக்கி ஜன்னல்கள் மட்டாகப் பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.
17 వాకిండ్లకు పైగా మందిరమునకు బయటను లోప లను ఉన్న గోడ అంతయు లోగోడయు వెలిగోడయు చుట్టుగోడయు కొలతప్రకారము కట్టబడియుండెను.வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது.
18 కెరూబులును ఖర్జూరపు చెట్లును ఉండెను; దానికి రెండేసి కెరూబుల సందున ఖర్జూరపుచెట్టు ఒకటియుండెను; ఒక్కొక్క కెరూబునకు రెండేసి ముఖము లుండెను.கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.
19 ఎట్లనగా ఈ తట్టు ఖర్జూరపు చెట్టువైపున మనుష్యముఖ మును ఆ తట్టు ఖర్జూరపుచెట్టువైపున సింహముఖమును కనబడెను; ఈ ప్రకారము మందిరమంతటిచుట్టు నుండెను.பேரீச்சமரத்துக்கு இந்தண்டையில் மனுஷமுகமும், பேரீச்சமரத்துக்கு அந்தண்டையில் சிங்கமுகமும் இருந்தது; இப்படி ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது.
20 నేల మొదలుకొని వాకిలిపైవరకు మందిరపు గోడకు కెరూబులును ఖర్జూరపు చెట్లును ఉండెను.தரைதுவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.
21 మందిరపు ద్వార బంధములు చచ్చౌకములు, పరిశుద్ధస్థలపు ద్వారబంధ ములును అట్టివే.தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது.
22 బలిపీఠము కఱ్ఱతో చేయబడెను, దాని యెత్తు మూడు మూరలు, నిడివి రెండు మూరలు, దాని పీఠమును మూలలును ప్రక్కలును మ్రానితో చేయబడి నవి; ఇది యెహోవా సముఖమందుండు బల్ల అని అతడు నాతో చెప్పెను.மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும் அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது; அவர் என்னை நோக்கி: இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.
23 మందిరమునకును పరిశుద్ధ స్థలమునకును రెండు వాకిండ్లుండెను.தேவாலயத்துக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்கும் இரண்டு வாசல்களும்,
24 ఒక్కొక వాకిలి రెండేసి మడత రెక్కలు గలది.வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது.
25 మరియు గోడలమీద ఉన్నట్లుగా మందిరపు వాకిండ్లమీదను కెరూబులును ఖర్జూరపుచెట్లును చెక్కబడి యుండెను, బయటి మంటపమునకు విచిత్రముగా చేసిన ఉబుకువాటుపని కనబడెను.சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது.
26 మరియు మంటపమునకును ఇరుప్రక్కల గోడలకును మందిరపు మేడగదులకును ఒరపాకులకును ఇరుప్రక్కల కమ్ములు వేసిన కిటికీలును ఖర్జూరపు చెట్లనుపోలిన అలంకారమును ఉండెను.மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், ஆலயத்தின் சுற்றுக்கட்டுகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் சித்தரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது.
Tamil Bible