Genesis 14 - ORIYA (Tamil)

1 ଶିନିଯରର ଅମ୍ରାଫଲ୍ ରାଜା ଓ ଇଲ୍ଲାସରର ଅରିଯୋକ ରାଜା ଥିଲେ। କଦର୍ଲାଯୋମର ଇଲାମର ରାଜା ଥିଲେଓ ଗୋଯିମର ତିଦିଯଲର ରାଜା ଥିଲେ।சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;

2 ଏହି ସମସ୍ତ ରାଜାଗଣ ମିଳିତଭାବେ ସଦୋମର ରାଜା ବିରା, ହ ମାରେର ରାଜା ବିର୍ଶା, ଅଦ୍ମାର ରାଜା ଶିନାବ୍ ଓ ସବୋଯିମର ରାଜା ଶିମବରେ ଓ ବିଲାର, ସୋଯରର ରାଜାଙ୍କ ସହିତ ୟୁଦ୍ଧ କଲେ।அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.

3 ଏହି ସମସ୍ତ ରାଜାମାନେ ସମାନଙ୍କେର ସୈନ୍ଯମାନଙ୍କୁ ସୀଦ୍ଦୀମ ଉପତ୍ୟକା ରେ ଉପସ୍ଥିତ କରାଇଲେ। ସହେି ସୀଦ୍ଦୀମ ଉପତ୍ୟକା ବର୍ତ୍ତମାନ ଲବଣ ସମୁଦ୍ର।இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.

4 ଏହି ରାଜାମାନେ ବାରବର୍ଷ ପର୍ୟ୍ଯନ୍ତ କଦର୍ଲାଯୋମର ରାଜାଙ୍କର ବଶୀଭୂତ ରହି ତ୍ରଯୋଦଶ ବର୍ଷ ରେ ତାଙ୍କର ବିଦ୍ରୋହି ହାଇେଥିଲେ।இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள்.

5 ଏହିପରି ଚତୁର୍ଦ୍ଦଶ ବର୍ଷ ରେ କଦର୍ଲାଯୋମର ରାଜା ଓ ୟୋଉଁ ରାଜାମାନେ ତାଙ୍କ ସହିତ ଥିଲେ ଆସି ଅସ୍ତରୋତ୍କର୍ଣ୍ଣଯିମ ରେ ରଫାଯୀମ ଲୋକମାନଙ୍କୁ ଏବଂ ହମ ରେ ସୁଷୀଯ ଲୋକମାନଙ୍କୁ ପରାସ୍ତ କଲେ। ଶାବିକିରିଯାଥଯିମ ରେ ଏମୀଯ ଲୋକମାନଙ୍କୁ ପରାସ୍ତ କଲେ।பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,

6 ପ୍ରାନ୍ତର ନିକଟସ୍ଥ ଏଲ୍ପାରଣ ପର୍ୟ୍ଯନ୍ତ ସଯେୀର ପର୍ବତ ନିବାସୀ ହୋରୀଯ ଲୋକମାନଙ୍କୁ ଜଯ କଲେ।சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,

7 ଏବାପରେ ରାଜା କଦର୍ଲାଯୋମର ସଠାରୁେ ଫରେି ଐଣ୍ମିସ୍ପଟ୍ ଅର୍ଥାତ କାଦେଶକୁ ୟାଇ ଅମାଲାକୀଯ ଲୋକମାନଙ୍କୁ ସମସ୍ତ ଦେଶ ଏବଂ ହତ୍-ସସୋନ୍ ତାମର ନିବାସୀ ଇ ମାରେୀଯ ଲୋକମାନଙ୍କୁ ପରାସ୍ତ କଲେ।திரும்பிக் காதேஸென்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.

8 ସହେି ସମୟରେ ସଦୋମର ରାଜା, ହ ମାରେର ରାଜା, ଅଦ୍ମାର ରାଜା, ସବୋଯିମର ରାଜା ଓ ବଲାର ଅର୍ଥାତ୍ ସୋଯ ରେ ରାଜା ଏହି ପାଞ୍ଚ ରାଜା ଏବଂ ତାଙ୍କର ସୈନ୍ଯଗଣ ଏକତ୍ରିତ ହେଲେ। ସମାନେେ ସୀଦ୍ଦୀମ ଉପତ୍ୟକାକୁ ୟୁଦ୍ଧ କରିବାକୁ ଗଲେ।அப்பொழுது சோதோமின் ராஜாவும் கொமோராவின் ராஜாவும் அத்மாவின் ராஜாவும் செபோயீமின் ராஜாவும் சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே,

9 ସମାନେେ ଏଲମର ରାଜା କଦର୍ଲାଯୋମର ଓ ଗୋଯିମର ତିଦିଯଲର ରାଜା ଓ ଶିନିଯରର ଅମ୍ରାଫଲ୍ର ରାଜା ଓ ଇଲ୍ଲାସରର ରାଜା। ଏହି ଚ଼ାରି ଜଣ ରାଜା ପାଞ୍ଚଙ୍କ ବିରୁଦ୍ଧ ରେ।ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும் சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் எலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்.

10 ସହେି ସୀଦ୍ଦୀମ ପଦା ରେ ମାଟିଆତୈଳର ଅନକେ ଗାତ ଥିଲା ଏବଂ ସଦୋମର ରାଜା ଓ ଗ ମାରୋର ରାଜା ପଳାଯନ କଲେ ଓ ସଠାେରେ ପଡ଼ିଗଲେ ଏବଂ ଅବଶିଷ୍ଟ ସୈନ୍ଯମାନେ ପର୍ବତକୁ ପଳାଇ ଗଲେ।அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.

11 ଏଥିପାଇଁ ସମାନେେ ସଦୋମ ଓ ହ ମାରୋର ସମସ୍ତ ସମ୍ପତ୍ତି ଏବଂ ଭକ୍ଷ ଲୁଟିନଇେ ପଳାଇଗଲେ।அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

12 ଅବ୍ରାମର ଭାତୃ ପୁତ୍ର ଲୋଟ ସଦୋମ ରେ ବାସ କରୁଥିଲା ଏବଂ ଶତୃମାନେ ତାହାକୁ ବନ୍ଦୀ କଲେ। ଏବଂ ଶତୃଗଣ ତାଙ୍କର ସମସ୍ତ ସମ୍ପତ୍ତି ଲୁଟି ନେଲେ।ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும் அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.

13 ସେତବେେଳେ ଜଣେ ପଳାତକ ଏବ୍ରୀଯ ଅବ୍ରାମଙ୍କୁ ସମାଚ଼ାର ଦଲୋ। ସହେି ସମୟରେ ଅବ୍ରାମ ଇଷ୍କୋଲର ଓ ଆନରରେ ଭ୍ରାତା ଇ ମାରେୀଯ ମମ୍ରିର ଆଲୋନ ବୃକ୍ଷମୂଳେ ବାସ କରୁଥିଲେ। ସମାନେେ ମଧ୍ଯ ଅବ୍ରାମଙ୍କର ସହାୟ ଥିଲେ।தப்பியோடின ஒருவன் எபிரேயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சம பூமியிலே அப்பொழுது குடியிருந்தான்.

14 ଯେତବେେଳେ ଅବ୍ରାମ ନିଜର ଜ୍ଞାତି ଧରା ହାଇେ ୟିବାର ସମାଚ଼ାର ଶୁଣିଲେ। ଅବ୍ରାମ ତା'ର ସମସ୍ତ ପରିବାରକୁ ଏକତ୍ରିତ କଲେ। ସଠାେରେ 318 ଜଣ ତାଲିମପ୍ରାପ୍ତ ସୈନିକ ଥିଲେ। ଅବ୍ରାମ ସେ ଶତୃମାନଙ୍କ ପେଛ ପେଛ ଗୋଡ଼ଇେ ଗୋଡ଼ଇେ ଦାନ ନଗର ପର୍ୟ୍ଯନ୍ତ ଗଲେ।தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,

15 ସହେି ରାତ୍ରି ରେ ସିଏ ଓ ତାଙ୍କର ସୈନ୍ଯମାନେ ସମସ୍ତେ ମିଶି ତାଙ୍କର ଶତୃମାନଙ୍କ ବିରୁଦ୍ଧ ରେ ଅତର୍କିତ ଆକ୍ରମଣ କଲେ। ସମାନେେ ତାଙ୍କୁ ପରାସ୍ତ କରି ତାଙ୍କୁ ଗୋଡ଼ଇେ ଗୋଡ଼ଇେ ଦମ୍ମସକରେ ଉତ୍ତର ସ୍ଥିତ ହାବୋ ପର୍ୟ୍ଯନ୍ତ ଗୋଡ଼ାଇଲେ।இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி,

16 ଏହାପରେ ସେ ତାଙ୍କର ଭାତୃ ପୁତ୍ର ଲୋଟ ତାଙ୍କର ସମ୍ପତ୍ତି ପୁଣି ସ୍ତ୍ରୀଗଣ ଏବଂ ସୈନ୍ଯଗଣଙ୍କୁ ବାହୁଡ଼ାଇ ଆଣିଲେ।சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.

17 ତା'ପରେ ଅବ୍ରାମ କଦର୍ଲାଯୋମରକୁ ଓ ତାଙ୍କର ସହାୟ ରାଜାଗଣଙ୍କୁ ଜଯ କରି ବାହୁଡ଼ିବା ପରେ ସଦୋମର ରାଜା ତାଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ କରିବାକୁ ଶାବୀ ପଦା, ଅର୍ଥାତ୍ ରାଜାର ପଦାକୁ ଗମନ କଲେ।அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான்.

18 ଶାଲମର ରାଜା ମଲ୍କୀଷଦକେ ଅବ୍ରାହାମକୁ ସାକ୍ଷାତ କରିବା ପାଇଁ ଗଲେ। ସେ ସର୍ବୋପରିସ୍ଥ ପରମେଶ୍ବରଙ୍କର ଯାଜକ। ମଲକୀଷଦକେ ରୋଟୀ ଓ ଦ୍ରାକ୍ଷାରସ ଘନେି ଆସିଲେ।அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

19 ସେ ଅବ୍ରାମଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରି କହିଲେ, ଅବ୍ରାମ ସ୍ବର୍ଗ ଓ ପୃଥିବୀର ଅଧିକାରୀ ସର୍ବୋପରିସ୍ଥ ପରମେଶ୍ବରଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ ହୁଅନ୍ତୁ।அவனை ஆசீர்வதித்து, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

20 ସର୍ବୋପରିସ୍ଥ ପରମେଶ୍ବର ଧନ୍ଯ ହୁଅନ୍ତୁ ୟିଏ ତୁମ୍ଭର ଶତୃଗଣଙ୍କୁ ତୁମ୍ଭ ହସ୍ତ ରେ ଦେଲେ।உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

21 ଏହାପରେ ସଦୋମର ରାଜା ଅବ୍ରାମଙ୍କୁ କହିଲେ, ତୁମ୍ଭେ ସମସ୍ତ ସମ୍ପତ୍ତି ନିଅ ମାତ୍ର ମନୁଷ୍ଯସକଳ ଆମ୍ଭକୁ ଦିଅ।சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.

22 କିନ୍ତୁ ଅବ୍ରାମ ସଦୋମର ରାଜାଙ୍କୁ ଉତ୍ତର ଦଇେ କହିଲେ, ମୁଁ ସ୍ବର୍ଗ ଓ ପୃଥିବୀର ଅଧିକାରୀ ସଦାପ୍ରଭୁ ପରମେଶ୍ବରଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ହସ୍ତ ଉଠାଇ କହିଅଛି ଯେ,அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,

23 ମୁଁ ପ୍ରତିଜ୍ଞା କରିଛି ଯେ ମୁଁ ତୁମ୍ଭର କିଛି ରଖିବୀ ନାହିଁ। ଏପରିକି ତୁମ୍ଭ ପାଖ ରେ ଥିବା ସୂତା କିମ୍ବା ଜୋତାର ବନ୍ଧନୀ ମଧ୍ଯ ନବେି ନାହିଁ। ମୁଁ ତୁମ୍ଭକୁ କହିବାକୁ ଚା ହେଁ ନାହିଁ, 'ମୁଁ ଅବ୍ରାମଙ୍କୁ ଧନି କରିଛି।'வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.

24 କବଳେ ମାରେ ୟୁବକମାନେ ଯାହା ଭୋଜନ କରି ଅଛନ୍ତି ତାହା ନବେି। ପୁଣି ମାହେର ଯେଉଁ ସହାୟକଗଣ ସଙ୍ଗ ରେ ୟାଇଥିଲେ ସମାନେେ ଅର୍ଥାତ୍ ଆନରେ ଇଷ୍କୋଲ ଓ ମମ୍ରି ଆପଣା ଆପଣା ପ୍ରାପ୍ଯ ଗ୍ରହଣ କରନ୍ତୁ।வாலிபர் சாப்பிட்டது போக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

Tamil Bible