Hosea 13 - BENGALI (Tamil)

1 “ইফ্রয়িম ইস্রায়েলে নিজেকে খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছিল| ইফ্রয়িম কথা বলত এবং জনসাধারণ ভয়ে কাঁপত| কিন্তু ইফ্রয়িম পাপ করেছিল, সে বালকে পূজো করতে আরম্ভ করেছিল|எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.

2 এখন ইস্রায়েল জাতি এমশঃ আরো বেশী পাপ করছে| তাদের নিজেদের জন্য তারা মূর্ত্তি তৈরি করছে| মজুররা রূপো দিয়ে ওই সৌখীন মূর্ত্তিগুলো তৈরি করছে| তারপর ওই লোকরা তাদের মূর্ত্তিগুলির সঙ্গে কথা বলছে| ওই মূর্ত্তিগুলির জন্যে তারা বলি উত্সর্গ করছে| তারা ওই সোনার বাছুরগুলোকে চুমু খাচ্ছে|இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளைத் முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள்.

3 সে জন্যেই ওই লোকরা শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে| তারা হবে ভোরবেলায় আসা কুযাশার মতো| কুযাশা য়েমন আসে এবং তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়| ইস্রায়েল জাতিরা ভূষির মতোই হবে যা মাড়াইয়ের ঘর থেকে উড়ে যায়| ইস্রায়েল জাতি হবে ধোঁযার মত, য়েটা চিমনি থেকে ওঠে এবং অদৃশ্য হয়ে যায়|ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.

4 “যখন থেকে তোমরা মিশরের মাটিতে আছো তখন থেকেই আমি তোমাদের প্রভু ঈশ্বর| তোমরা আমাকে ছাড়া অন্য কোন ঈশ্বরকে চিনতে না| আমি ছাড়া আর কোন ত্রাণকর্তা নেই|நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.

5 আমি সেই মরুভূমিতে তোমাদের চিনতাম- আমি সেই সমতল শুকনো মাটির দেশে তোমাদের চিনতাম|நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்.

6 “আমি ইস্রায়েল জাতিকে খাদ্য জুগিয়েছি; তারা সেই খাদ্য খেযেছে| তারা পেট ভরে খেযেছে এবং খুশী হয়েছে| (তারপর) তারা অহঙ্কারী হয়েছে এবং আমাকে ভুলে গেছে!தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.

7 “সেজন্য আমি তাদের কাছে সিংহের মতোই হব| আমি চিতাবাঘের মতোই রাস্তায় অপেক্ষা করব|ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன்.

8 আমি তাদের ভাল্লুকের মতো আক্রমণ করব যার বাচচাদের কেড়ে নেওয়া হয়েছে| আমি তাদের আক্রমণ করব- তাদের বুকগুলোকে একটানে চিরে ফেলব| আমি সিংহ অথবা বন্য জীব-জন্তুদের মতোই শিকারকে ছিঁড়ে ছিঁড়ে খাব|”குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல பட்சித்துப்போடுவேன், காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.

9 “ইস্রায়েল, আমি তোমাকে সাহায্য করেছিলাম; কিন্তু তোমরা আমার বিরুদ্ধে গেছো| সেজন্য এখন আমি তোমাদের ধ্বংস করব!இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.

10 তোমাদের রাজা কোথায়? তোমাদের কোন শহরেই সে তোমাদের রক্ষা করতে পারবে না! তোমাদের বিচারকরা কোথায়? তোমরা তাদের খোঁজ করে বলছো, ‘আমাদের একজন রাজা এবং কিছু নেতা দাও|’எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?

11 আমি রুদ্ধ হয়েছিলাম এবং আমি তোমাকে একজন রাজা দিয়েছিলাম| তারপর আমি যখন খুবই রুদ্ধ হয়েছিলাম, তখন তাকে নিয়ে গিয়েছিলাম|நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.

12 “ইফ্রয়িম তার দোষ লুকোবার চেষ্টা করেছিল| সে ভেবেছিল, তার পাপগুলো গোপন বিষয় কিন্তু সে ওই কাজের জন্য শাস্তি পাবে|எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.

13 একজন স্ত্রীলোক প্রসব করার সময় য়ে যন্ত্রণা অনুভব করে, তার শাস্তিও সেই রকম হবে| সে কখনোই জ্ঞানী পুত্র হতে পারবে না| তার জন্মাবার সময় আসবে এবং সে বেঁচে থাকতে পারবে না|பிரசவஸ்திரீயின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பேறுகாலமட்டும் அவன் நிற்கவில்லை.

14 “আমি তাদের কবর থেকে রক্ষা করব! আমি তাদের মৃত্যুর হাত থেকে মুক্তি দেব! মৃত্যু, তোমার রোগগুলি কোথায়? কবর, কোথায় তোমার বিনষ্ট করার ক্ষমতা? আমি শোক প্রকাশ করার কোন কারণই দেখি না!அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.

15 ইস্রায়েল তার ভাযেদের সঙ্গে বড় হয়েছে| কিন্তু পূর্ব দিক থেকে একটি শক্তিশালী ঝড় আসবে আর মরুভূমির দিক থেকে প্রভুর ঝড় বইবে| তখন ইস্রায়েলের কুযো শুকিয়ে যাবে| তার জলের ঝর্ণাগুলি শুকিয়ে যাবে| ইস্রায়েলের কোষাগার থেকে যা কিছু মূল্য়বান তার সব কিছুই বাতাস উড়িযে নিয়ে যাবে|இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.

16 শমরিয়া অবশ্যই শাস্তি পাবে| কারণ সে তার ঈশ্বরের বিরুদ্ধে গেছে| ইস্রায়েল জাতি তরবারির সাহায্যেই নিহত হবে| তাদের সন্তানদের টুকরো টুকরো করে ছিন্ন করে দেওয়া হবে| তাদের গর্ভবতী মেয়েদের ছিঁড়ে ফেলা হবে|”சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.

Tamil Bible