Isaiah 32 - ORIYA (Tamil)

1 ଦେଖ, ଜଣେ ରାଜା ଧର୍ମାନୁସା ରେ ରାଜତ୍ବ କରିବେ ଓ ଅଧିପତିଗଣ ନ୍ଯାଯ ରେ ଶାସନ କରିବେ।இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..

2 ଯଦି ଏହା ଘଟିବ, ତବେେ ସହେି ମାନବ ବତାସରୁ ଆଶ୍ରଯସ୍ଥାନ ଓ ଝଡ଼ ବର୍ଷାରୁ ଆଶ୍ରଯ, ଶୁଷ୍କ ଭୂମିରେ ଜଳଷୋର୍ତ ଓ ଉତ୍ତପ୍ତ ଭୂମିରେ ଶୀତଳ ଛାଯା ପ୍ରଦାୟକ ଶୈଳ ସଦୃଶ ହବେ।அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.

3 ପୁଣି ଦର୍ଶକମାନଙ୍କର ଚକ୍ଷୁ ମୁଦ୍ରିତ ହବେ ନାହିଁ ଓ ଶ୍ରୋତାମାନଙ୍କର କର୍ଣ୍ଣ ଅବଧାନ କରିବ।அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.

4 ଦ୍ବନ୍ଦ ରେ ପଡ଼ିଥିବା ବ୍ଯକ୍ତି ଜ୍ଞାନ ଲାଭ କରିବେ। ନିର୍ବୀକମାନେ ସ୍ପଷ୍ଟ କଥା କହିବେ।பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.

5 ନିର୍ବୋଧମାନେ ମହାତ୍ମା ଓ ଖଳଲୋକ ଉଦାର ବୋଲି ପ୍ରସିଦ୍ଧ ହବେେ ନାହିଁ।மூடன் இனித் தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.

6 କାରଣ ଜଣେ ମୃତ ନିର୍ବୋଧ କଥା କହିବ ଓ ତାହାର ହୃଦଯ ରେ ଅଧର୍ମ କଥା କଳ୍ପନା କରିବ। ସେ ସର୍ବଦା ଭ୍ରାନ୍ତିମୂଳକ କାର୍ୟ୍ଯ କରିବ ସେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ପ୍ରତିକୂଳ ରେ ମନ୍ଦକଥା କହିବ। ସେ କ୍ଷୁଧିତକୁ ଖାଦ୍ୟ ଦବେ ନାହିଁ କି ତୃଷିତକୁ ଜଳଦାନ କରିବ ନାହିଁ।ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.

7 ଆଉ ମଧ୍ଯ ଖଳ ଲୋକର ଉପାଯ ସବୁ ମନ୍ଦ। ସେ ଦରିଦ୍ରଠାରୁ ସମସ୍ତ ଅପହରଣ କରିବାକୁ ଯୋଜନା କଲେ। ସେ ଦରିଦ୍ର ଲୋକମାନଙ୍କୁ ମିଥ୍ଯା ଅଭିଯୋଗ ସାହାୟ୍ଯ ରେ ଧ୍ବଂସ କରିବାକୁ ଶପଥ ନିଏ, ଯଦିବା ସେତବେେଳେ ସହେି ଦରିଦ୍ର ଲୋକ ଯାହା କ ହେ, ତାହା ସଠିକ୍।லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப்பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.

8 ମାତ୍ର ଜଣେ ମହାତ୍ମା ଉତ୍ତମ କଥା କଳ୍ପନା କରେ ଓ ସହେି ଉତ୍ତମ ଆଚରଣ ରେ ସେ ସ୍ଥିର ରହେ।தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

9 ହେ ସୁଖିନୀ ସ୍ତ୍ରୀଗଣ, ତୁମ୍ଭମାନେେ ମାେ କଥା ଶୁଣ। ହେ ବିଶ୍ବସ୍ତା ନାରୀଗଣ, ମାେ ବାକ୍ଯ ରେ କର୍ଣ୍ଣପାତ କର।சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.

10 ହେ ନିଶ୍ଚିତା ନାରୀଗଣ, ତୁମ୍ଭମାନେେ ବର୍ଷକ ପ ରେ ଉଦ୍ବିଗ୍ନା ହବେ। କାରଣ ଦ୍ରାକ୍ଷାଫଳର ଅଭାବ ହବେ, ଫଳ ଅମଳର ସମୟ ଆସିବ ନାହିଁ।நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.

11 ହେ ଶାନ୍ତିପ୍ରିଯ ନାରୀଗଣ, ତୁମ୍ଭମାନେେ କମ୍ପିତା ହବେ। ହେ ନିଶ୍ଚିତା ନାରୀଗଣ, ତୁମ୍ଭମାନେେ ଉଦ୍ ବିଗ୍ନା ହବେ। ତୁମ୍ଭମାନଙ୍କର ବସ୍ତ୍ର କାଢ଼ି ବିବସ୍ତ୍ରା ହୁଅ ଓ କଟି ଦେଶ ରେ ଚଟ ବାନ୍ଧ।சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள், உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.

12 ସହେି ମନୋରମ ଫଳ କ୍ଷତେ ଓ ଫଳବତୀ ଦ୍ରାକ୍ଷାଲତା ନିମନ୍ତେ ଦୁଃଖ ରେ ଛାତିକୁ ମାରି ହବେେ।செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.

13 ମାରେଲୋକମାନଙ୍କ ଭୂମି କଣ୍ଟକ ଓ କାନକୋଳିକୁ ବୃକ୍ଷ ରେ ପୂର୍ଣ୍ଣ ହବୋ ନିମନ୍ତେ ଓ ନଗରର ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସପୂର୍ଣ୍ଣ ଗୃହଗୁଡ଼ିକ ପାଇଁ ବିଳାପ କର।என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.

14 ମାରେ ଲୋକମାନେ ରାଜନଗରୀ ପରିତ୍ଯାଗ କରିବେ ଓ ଜନାକୀର୍ଣ୍ଣ ନଗର ଜନଶୂନ୍ଯ ହବେ। ଗିରି ଓ ପ୍ରହରି ଦୁର୍ଗ ଚିରିକାଳ ଗୁହାମଯ, ବନ୍ଦ ଗର୍ଦ୍ଦଭମାନଙ୍କର ଉଲ୍ଲାସ ଭୂମି ଓ ପଶୁପଲର ଚରାସ୍ଥାନ ହବେ।அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.

15 ଆତ୍ମା ଉର୍ଦ୍ଧ୍ବରୁ ଆସିବା ପର୍ୟ୍ଯନ୍ତ ଏହିସବୁ ଚାଲୁ ରହିବ। ବର୍ତ୍ତମାନ ଏହା ଧାର୍ମିକମାନଙ୍କ ଇଚ୍ଛା ପାଇଁ ମରୁଭୂମି ହାଇେଛି, ତା'ପ ରେ ମରୁଭୂମି ଠିକ୍ ବିଚାର ରେ ପାଇବେ ଏବଂ ଫଳ ବଗିଚା ଜଙ୍ଗଲ ରେ ପରିଣତ ହବେ।உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.

16 ସେତବେେଳେ ପ୍ରାନ୍ତର ରେ ନ୍ଯାଯ ବିଚାର ବାସ କରିବ ଓ ଉର୍ବର କ୍ଷତେ ରେ ଧାର୍ମିକତା ବସତି ସ୍ଥାପନ କରିବ।வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.

17 ପୁଣି ସହେି ଧାର୍ମିକତାର କାର୍ୟ୍ଯ ଶାନ୍ତିମଯ ହବେ ଓ ଧାର୍ମିକତାର ଫଳ ଚିରକାଳ ସୁସ୍ଥିରତା ଓ ନିର୍ଭୟତା ହବେ।நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.

18 ମାରେ ଲୋକମାନେ ଶାନ୍ତିମଯ ବସତି ସ୍ଥାନ ରେ, ନିରାପଦ ତମ୍ବୁ ରେ ଓ ସୁସ୍ଥିର ବିଶ୍ରାମ ସ୍ଥାନ ରେ ବାସ କରିବେ।என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.

19 ମାତ୍ର ଏହି କାର୍ୟ୍ଯ ଘଟିବା ପୂର୍ବରୁ ଅରଣ୍ଯ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିପତିତ ହବେ ଓ ନଗର ସମ୍ପୂର୍ଣ୍ଣରୂପେ ଧ୍ବଂସ ପାଇବ।ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோம்.

20 ତୁମ୍ଭମାନଙ୍କ ମଧ୍ଯରୁ କେତକେ ସକଳ ସ୍ଥାନ ରେ ବୀଜ ବୁଣୁଛ ଓ ଗୋରୁ ଗର୍ଦ୍ଦଭମାନଙ୍କୁ ବାହା ରେ ଚରିବାକୁ ଛାଡ଼ୁଛ, ସେଥିପାଇଁ ତୁମ୍ଭମାନେେ ଧନ୍ଯ।மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

Tamil Bible