1 ⁽அழித்தொழிப்பவனே, உனக்கு␢ ஐயோ கேடு! நீ இன்னும்␢ அழித்தொழிக்கப்படவில்லையே!␢ நம்பிக்கைத் துரோகியே,␢ உனக்கு எவரும்␢ துரோகம் செய்யவில்லையா!␢ நீ அழித்தொழிப்பதை முடித்ததும்,␢ நீயும் அழிந்தொழிவாய்;␢ நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன்,␢ உனக்கும் துரோகம் செய்வார்கள்.⁾

2 ⁽ஆண்டவரே, எங்கள்மீது␢ இரக்கமாய் இரும்;␢ நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்;␢ அதிகாலைதோறும்␢ எங்களைக் காக்கும் கரமாகவும்,␢ துன்ப வேளைகளில் எங்களை␢ விடுவிப்பவராகவும் இருப்பீராக!⁾

3 ⁽ஆரவராப் பேரொலி கேட்க␢ மக்களினங்கள் பின்வாங்கி ஓடுகின்றன;␢ நீர் கிளர்ந்தெழும்போது␢ வேற்றினத்தார் சிதறுண்டு போகின்றனர்.⁾

4 ⁽பச்சைப் புழுக்கள் சேர்ப்பதுபோல்␢ கொள்ளைப் பொருட்கள்␢ சேர்க்கப்படுகின்றன.␢ வெட்டுக்கிளிகள் பாய்வதுபோல்␢ அவற்றின்மேல் மனிதர் பாய்கின்றனர்.⁾

5 ⁽ஆண்டவர் மாட்சிக்கு உரியவர்;␢ ஏனெனில் அவர்␢ உன்னதத்தில் உறைகின்றார்;␢ சீயோனை அவர் நீதியாலும்␢ நேர்மையாலும் நிரப்புகின்றார்;⁾

6 ⁽உங்கள் காலத்தில் அவரே␢ பாதுகாப்பாய் இருப்பார்;␢ அவர் உங்களுக்கு␢ முழு விடுதலை வழங்கி␢ ஞானத்தையும் அறிவாற்றலையும்␢ நல்குவார்.␢ ஆண்டவரைப்பற்றிய அச்சமே␢ அவர்களது அரும்செல்வம்.⁾

7 ⁽இதோ! வலிமைமிக்க␢ அவர்களுடைய வீரர்கள்␢ வீதியில் நின்று கதறியழுகின்றனர்;␢ சமாதானத்தின் தூதர்␢ மனங்கசந்து அழுகின்றனர்.⁾

8 ⁽நெடுஞ்சாலைகளில்␢ ஆள் நடமாட்டம் இல்லை;␢ வழிப்பயணிகள்␢ கடந்து செல்வதும் இல்லை;␢ உடன்படிக்கை முறிக்கப்படுகின்றது;␢ ஒப்பந்தம் மீறப்படுகின்றது;␢ மனிதருக்கு மரியாதையே கிடையாது.⁾

9 ⁽நாடு புலம்பியழுது␢ சோர்ந்து போகின்றது;␢ லெபனோன் வெட்கி நாணித்␢ தளர்ச்சியடைகின்றது;␢ சாரோன் பாலைநிலம்போல் ஆகின்றது;␢ பாசானும் கர்மேலும் இலையுதிர்க்கின்றன.⁾

10 ⁽ஆண்டவர் கூறுகின்றார்:␢ இப்பொழுது நான் எழுந்தருள்வேன்;␢ இப்பொழுது என்னை␢ உயர்த்திக் கொள்வேன்;␢ இப்பொழுது என்னை␢ மாட்சிமைப் படுத்துவேன்.⁾

11 ⁽நீங்கள் பதரைக் கருத்தாங்கி,␢ வைக்கோலைப் பெற்றெடுத்தீர்கள்;␢ உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி␢ உங்களையே எரித்துவிடும்.⁾

12 ⁽சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல்␢ மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்;␢ முட்கள்போல் வெட்டுண்டு␢ நெருப்புக்கு இரையாவார்கள்.⁾

13 ⁽தொலையில் உள்ளோரே,␢ நான்செய்வதைக் கேளுங்கள்;␢ அருகில் உள்ளோரே,␢ என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.⁾

14 ⁽சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்;␢ இறைப்பற்றில்லாரைத்␢ திகில் ஆட்கொள்கின்றது.␢ சுட்டெரிக்கும் நெருப்பில்␢ நம்மில் எவர் தங்குவார்?␢ என்றென்றும் பற்றியெரியும் தழலில்␢ நம்மில் எவர் இருப்பார்?⁾

15 ⁽நீதிநெறியில் நடப்பவர்,␢ நேர்மையானவற்றைப் பேசுபவர்.␢ கொடுமைசெய்து பெற்ற␢ வருவாயை வெறுப்பவர்,␢ கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர்,␢ இரத்தப் பழிச் செய்திகளைச்␢ செவி கொடுத்துக் கேளாதவர்,␢ தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்;⁾

16 ⁽அவர்களே உன்னதங்களில் வாழ்வர்;␢ கற்பாறைக் கோட்டைகள்␢ அவர்களது காவல்அரண் ஆகும்;␢ அவர்களுக்கு உணவு வழங்கப்படும்;␢ தண்ணீர் தரப்படுவதும் உறுதி.⁾

17 ⁽அரசரை உங்கள் கண்கள்␢ அழகுமிக்கவராகக் காணும்;␢ பரந்து விரிந்த நாட்டை␢ நீங்கள் காண்பீர்கள்:⁾

18 ⁽திகிலைப்பற்றி உங்கள் மனம்␢ இவ்வாறு சிந்திக்கும்;␢ ‘குடிக்கணக்குச் செய்தவன் எங்கே?␢ திறைப்பொருளை␢ நிறுத்துப் பார்த்தவன் எங்கே?␢ கோபுரங்களை␢ எண்ணிக்கை இட்டவன் எங்கே?⁾

19 ⁽உங்களுக்கு விளங்காத␢ குளறுபடியான பேச்சையும்␢ புரியாத வேற்றுமொழியையும் கொண்ட␢ காட்டுமிராண்டி மக்களை␢ நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள்.⁾

20 ⁽நம் விழாக்களின் நகரான␢ சீயோனைப் பார்;␢ அமைதியின் இல்லமாகவும்,␢ பெயர்க்கப்படாத முளைகளும்␢ அறுபடாத கயிறுகளும் கொண்ட␢ அசைக்க முடியாத கூடாரமாகவும்␢ எருசலேம் இருப்பதை␢ உங்கள் கண்கள் காணும்.⁾

21 ⁽ஏனெனில், அங்கே ஆண்டவர்␢ நமக்கெனத் தம் மாட்சியை␢ விளங்கச் செய்வார்;␢ அது அகன்ற ஆறுகளையும்␢ விரிந்த நீரோடைகளையும் உடைய␢ இடம் போன்றது;␢ துடுப்புப் படகு அங்குப் போவதில்லை;␢ மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.⁾

22 ⁽ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்;␢ ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்;␢ ஆண்டவரே நமக்கு வேந்தர்;␢ அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்.⁾

23 ⁽உங்கள் வடக்கயிறுகள் தளர்ந்து தொங்கும்;␢ அவற்றால் பாய் மரத்தை␢ நிலையாய்ப் பிடிக்க இயலாது;␢ பாய் விரிக்கவும் முடியாது;␢ அப்பொழுது திரளான␢ கொள்ளைப் பொருள் பங்கிடப்படும்;␢ முடவரும் கொள்ளைப் பொருளைச்␢ சூறையாடுவர்.⁾

24 ⁽சீயோனில் வாழ்பவர் எவரும்␢ ‘நான் நோயாளி’ என்று சொல்லமாட்டார்.␢ அதில் குடியிருக்கும் மக்களின்␢ தீச்செயல் மன்னிக்கப்படும்.⁾

ஏசாயா 33 ERV IRV TRV