1 யோபு அதற்கு உரைத்த மறுமொழி:

2 ⁽இன்றுகூட என் முறைப்பாடு␢ கசப்பாயுள்ளது;␢ நான் வேதனைக் குரல் எழுப்பியும்,␢ என் மேல் அவரது* கை பளுவாயுள்ளது.⁾

3 ⁽அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென␢ நான் அறிய யாராவது உதவுவாரானால்,␢ நான் அவர் இருக்கையை அணுகுவேன்.⁾

4 ⁽என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்;␢ என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.⁾

5 ⁽அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என␢ அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு␢ என்ன சொல்வார் என்பதையும்␢ நான் புரிந்து கொள்வேன்.⁾

6 ⁽மாபெரும் வல்லமையுடன்␢ அவர் என்னோடு வழக்காடுவாரா?␢ இல்லை; அவர் கண்டிப்பாக␢ எனக்குச் செவி கொடுப்பார்.⁾

7 ⁽அங்கே நேர்மையானவன்␢ அவரோடு வழக்காடலாம்;␢ நானும் என் நடுவரால்␢ முழுமையாக விடுவிக்கப்படுவேன்.⁾

8 ⁽கிழக்கே நான் சென்றாலும்␢ அவர் அங்கில்லை;␢ மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.⁾

9 ⁽இடப்புறம் தேடினும்␢ செயல்படுகிற அவரைக் காணேன்;␢ வலப்புறம் திரும்பினும்␢ நான் அவரைப் பார்த்தேனில்லை.⁾

10 ⁽ஆயினும் நான் போகும் வழியை␢ அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால்,␢ நான் பொன்போல் துலங்கிடுவேன்.⁾

11 ⁽அவர் அடிச்சுவடுகளை␢ என் கால்கள் பின்பற்றின;␢ அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.⁾

12 ⁽அவர் நா உரைத்த ஆணையினின்று␢ நான் விலகவில்லை;␢ அவர்தம் வாய்மொழிகளை␢ அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.⁾

13 ⁽ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால்,␢ யாரால் மாற்ற முடியும்? ஏனெனில்,␢ எதை அவர் விரும்புகிறாரோ␢ அதை அவர் செய்கிறார்.⁾

14 ⁽ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை␢ அவர் நிறைவேற்றுவார்;␢ இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.⁾

15 ⁽ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்;␢ அவரைப்பற்றி நினைக்கையில்␢ திகிலடைகின்றேன்.⁾

16 ⁽இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்;␢ எல்லாம் வல்லவர் என்னைக்␢ கலங்கச் செய்தார்.⁾

17 ⁽ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது;␢ காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.⁾

யோபு 23 ERV IRV TRV