Job 42 - ORIYA (Tamil)
1 ତା'ପରେ ଆୟୁବ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ଉତ୍ତର ଦଇେ କହିଲା,அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
2 ହେ ସଦାପ୍ରଭୁ ମୁଁ ଜାଣେ ଆପଣ ସବୁକିଛି କରିପାରନ୍ତି। ତୁମ୍ଭେ ଯାହା କର ବା କରିବାକୁ ଚାହଁ, କହେି ତୁମ୍ଭକୁ ସେ କାମରୁ ନିବୃତ୍ତ କରାଇ ପାରିବେ ନାହିଁ।தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
3 ହେ ସଦାପ୍ରଭୁ, ତୁମ୍ଭେ ମାେତେ ପଚାରିଲ, 'କିଏ ଏହି ଜ୍ଞାନହୀନ ମଣିଷ, ୟିଏ ନିର୍ବୋଧ ଭଳି କଥା କହୁଛି।' ହେ ସଦାପ୍ରଭୁ, ମୁଁ ସହେି ବିଷଯ ରେ କହିଥିଲି, ଯାହା ମୁଁ ବୁଝି ନ ଥିଲି। ମୁଁ ସହେିସବୁ କଥା କହିଥିଲି ଯାହା ଏତେ ଆଶ୍ଚର୍ୟ୍ଯଜନକ ଯେ ତାହା ମାେ ବୁଝିବା ଶକ୍ତିର ବାହା ରେ।அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
4 ହେ ସଦାପ୍ରଭୁ, ତୁମ୍ଭେ ମାେତେ କହିଲ, 'ଶୁଣ ଆୟୁବ, ଆମ୍ଭେ ତୁମ୍ଭକୁ କହିବା। ଆମ୍ଭେ ତୁମ୍ଭକୁ ପ୍ରଶ୍ନ ପଚାରିବା ଓ ତୁମ୍ଭେ ତା'ର ଉତ୍ତର ଦବେ।'நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.
5 ହେ ସଦାପ୍ରଭୁ, ଅତୀତ ରେ ମୁଁ ତୁମ୍ଭ ବିଷଯ ରେ ଶୁଣିଥିଲି। କିନ୍ତୁ ଆଜି ମୁଁ ସ୍ବଚକ୍ଷୁ ରେ ତୁମ୍ଭକୁ ଦେଖିଲି।என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
6 ହେ ସଦାପ୍ରଭୁ, ମୁଁ ଫେ ରଇେ ନେଉଛି ଯାହା ମୁଁ କହିଥିଲି। ହେ ସଦାପ୍ରଭୁ, ମୁଁ ବଡ଼ ଖଦେିତ ଯେପରି ମୁଁ ଧୂଳି ଓ ପାଉଁଶ ଉପରେ ବସିଛି। ମୁଁ ମାରେମନ ପରିବର୍ତ୍ତନ କରିଛି।ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
7 ସଦାପ୍ରଭୁ ଆୟୁବ ସହିତ କଥା ଶଷେ କଲା ପରେ ସେ ତୈମନୀଯ ଇଲୀଫସ୍ ସହିତ କଥା ହେଲେ। ସଦାପ୍ରଭୁ ଇଲୀଫସକୁ କହିଲେ, ଆମ୍ଭେ ତୁମ୍ଭ ଉପରେ ଓ ତୁମ୍ଭର ଦୁଇ ବନ୍ଧୁଙ୍କ ଉପରେ କୋରଧିତ। କାହିଁକି ? କାରଣ ତୁମ୍ଭେ ଆମ୍ଭ ବିଷଯ ରେ ଉଚିତ କଥା କହି ନାହଁ। କିନ୍ତୁ ଆୟୁବ ଆମ୍ଭର ଆଶ୍ରିତ। ଆୟୁବ ଆମ୍ଭ ବିଷଯ ରେ ଉଚିତ୍ କଥା କହିଛି।கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.
8 ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଇଲୀଫସ୍ ସାତାଟେି ଷଣ୍ଢ ଓ ସାତାଟେି ମେଣ୍ଢା ନଇେ ମାେ ଭୃତ୍ଯ ଆୟୁବ ପାଖକୁ ୟାଅ। ତାହା ବଧକରି ନିଜ ପାଇଁ ହାମବେଳି ପରି ଉତ୍ସର୍ଗ କର। ଆମ୍ଭ ଦାସ ଆୟୁବ ତୁମ୍ଭ ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କରିବ ଏବଂ ଆମ୍ଭେ ପ୍ରାର୍ଥନାର ଉତ୍ତର ଦବୋ। ତା'ପରେ ଆମ୍ଭେ ତୁମ୍ଭକୁ ଦଣ୍ଡ ଦବୋ ନାହିଁ, ଯାହାର ତୁମ୍ଭେ ହକଦାର। ତୁମ୍ଭେ ଦଣ୍ଡ ପାଇବା ଉଚିତ୍, କାରଣ ତୁମ୍ଭେ ଅତି ନିର୍ ବୋଧ। ତୁମ୍ଭେ ଆମ୍ଭ ବିଷଯ ରେ ଉଚିତ କଥା କହି ନାହଁ। କିନ୍ତୁ ଆମ୍ଭର ଭୃତ୍ଯ ଆୟୁବ ଆମ୍ଭ ବିଷଯ ରେ ଉଚିତ୍ କଥା କହିଛି।ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார்.
9 ତେଣୁ ତୈମନୀଯ ଇଲୀଫସ୍, ଶୂହୀଯ ବିଲଦଦ୍ ଓ ନାମାଥୀଯ ସୋଫର ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ମାନିଲେ। ତା'ପରେ ସଦାପ୍ରଭୁ ଆୟୁବର ପ୍ରାର୍ଥନାର ଉତ୍ତର ଦେଲେ।அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.
10 ଆୟୁବ ତା'ର ବନ୍ଧୁମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କଲା। ତା'ପରେ ସଦାପ୍ରଭୁ ଆୟୁବକୁ ପୁଣି ସୌଭାଗ୍ଯ ଆଣି ଦେଲେ। ଆୟୁବର ପୂର୍ବରୁ ଯାହା ଥିଲା ତା'ର ଦୁଇଗୁଣ ସେ ଦେଲେ।யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
11 ତା'ପରେ ଆୟୁବର ଭାଇମାନେ, ଭଉଣୀମାନେ, ଯେଉଁ ଲୋକମାନେ ଆୟୁବକୁ ଜାଣିଥିଲେ, ସମସ୍ତେ ତା' ଘରକୁ ଆସିଲେ। ସମାନେେ ସମସ୍ତେ ଆୟୁବର ଘ ରେ ଏକ ବଡ଼ ଭୋଜି ରେ ୟୋଗ ଦେଲେ। ସମାନେେ ଆୟୁବକୁ ସାନ୍ତ୍ବନା ଦେଲେ। ସମାନେେ ଦୁଃଖ ପ୍ରକାଶ କଲେ, କାରଣ ପରମେଶ୍ବର ଆୟୁବ ପାଇଁ ବହୁତ କଷ୍ଟ ଦେଲେ। ପ୍ରେତ୍ୟକକ ବ୍ଯକ୍ତି ଆୟୁବକୁ ଖଣ୍ଡେ ରୂପା ଓ ଗୋଟିଏ ସୁନାମୁଦି ପ୍ରଦାନ କଲେ।அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.
12 ସଦାପ୍ରଭୁ ଆୟୁବକୁ ଅଧିକ ଆଶୀର୍ବାଦ କଲେ, ତାହାଠାରୁ ମଧ୍ଯ ଅଧିକ ୟହା ତା'ର ପ୍ରଥମ ଥିଲା। ଆୟୁବ 14,000 ମେଣ୍ଢା, 6 ,000 ଓଟ, 1,000 ହଳ ବଳଦ, 1,000 ମାଈ ଗଧ ପାଇଲେ।கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
13 ଆୟୁବ ସାତଟି ପୁତ୍ର ଓ ତିନିଟି ଝିଅ ଲାଭ କଲା।ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
14 ଆୟୁବ ତା'ର ପ୍ରଥମ ଝିଅର ନାମ ୟିନୀମା, ଦ୍ବିତୀୟ ଝିଅର ନାମ କତସୀଯା ଓ ତୃତୀୟ ଝିଅର ନାମ କେ ରଣେ ହାପ୍ପୁକ୍ ରଖିଲା।மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.
15 ଆୟୁବର ଝିଅମାନେ ସେ ଦେଶର ସବୁଠାରୁ ସୁନ୍ଦରୀ ଥିଲେ ଏବଂ ତାଙ୍କର ପିତା ସମାନଙ୍କେୁ ଅଂଶ ଦେଲେ ତାଙ୍କ ଭାଇମାନଙ୍କ ସହିତ।தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
16 ଏହାପରେ ଆୟୁବ 140 ବର୍ଷ ଅଧିକା ବଞ୍ଚିଲା। ସେ ନିଜର ପିଲାମାନଙ୍କର, ନାତିନାତୁଣୀମାନଙ୍କର ଚାରିପୁରୁଷ ପର୍ୟ୍ଯନ୍ତ ଦେଖିଲା।இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
17 ଏବଂ ଆୟୁବ ଦୀର୍ଘ ଓ ପୂର୍ଣ୍ଣ ଜୀବନ ବିତାଇବା ପରେ ବୃଦ୍ଧାବସ୍ଥା ରେ ମୃତ୍ଯୁବରଣ କଲା।யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.
Tamil Bible