Leviticus 2 - ORIYA (Tamil)
1 ଆଉ କହେି ସଦାପ୍ରଭୁ ପରମେଶ୍ବରଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ଶସ୍ଯ ନବୈେଦ୍ଯ ଆଣିଲେ, ତାହା ଅତି ସୂକ୍ଷ୍ମ ମଇଦା ରେ ନବୈେଦ୍ଯ ହବେ। ପୁଣି ସେଥି ରେ ସେ ତୈଳ ଢାଳିବ ଓ ତା'ଉପରେ ଲୋବାନି ରଖିବ।ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,
2 ପୁଣି ତାକୁ ହାରୋଣର ଯାଜକ ପୁତ୍ରମାନଙ୍କ ନିକଟକୁ ଆଣିବ। ଯାଜକ ସେଥିରୁ ମୁଠିଏ ସରୁ ମଇଦା, କିଛି ତୈଳ ଓ ସମସ୍ତ କପୂର୍ର ନବେ। ତା'ପରେ ଯାଜକ ଏହି ସ୍ମାରକ ଅଂଶ ୟଜ୍ଞବଦେୀ ଉପରେ ଦଗ୍ଧ କରିବ। ତାହା ସଦାପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ ସୁଗନ୍ଧିତ ନବୈେଦ୍ଯ ଅଟେ।அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
3 ଏହି ଶସ୍ଯ ନବୈେଦ୍ଯର ଅବଶିଷ୍ଟ ଅଂଶ ହାରୋଣର ଓ ତାହାର ପୁତ୍ରମାନଙ୍କର ହବେ। ଏହି ଉପହାରରୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ ନିଆୟାଇଥିବା ଅବଶିଷ୍ଟାଂଶ ମହାପବିତ୍ର ଅଟେ।அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
4 ଆଉ ଯଦି କହେି ତୁନ୍ଦୁର ରେ ପକ୍ବ କରି ଶସ୍ଯ-ନବୈେଦ୍ଯ ଦିଏ, ତବେେ ତାହା ତାଡିଶୁନ୍ଯ ରୋଟୀ ଓ ତୈଳର ଛଣା ୟାଇଥିବା ସରୁ ମଇଦାର ପିଠା କିମ୍ବା ତୈଳାକ୍ତ ସରୁଚକୁଳୀ ହବେ।நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.
5 ପୁଣି ଯଦି ନବୈେଦ୍ଯ କରଇେ ରେ ସକୋ ହାଇେଥିବା ପିଠା ହୁଏ, ତବେେ ଏହା ନିଶ୍ଚିତ ତାଡିଶୂନ୍ଯ ସରୁ ମଇଦାରୁ ତିଆରି ହାଇେ ତୈଳ ରେ ଭଜା ହାଇେ ତିଆରି ହାଇେଥିବ।நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக.
6 ତୁମ୍ଭେ ତାହା ଖଣ୍ଡ ଖଣ୍ଡ କରି ତା'ଉପରେ ତୈଳ ଢାଳିବ, ତାହା ହିଁ ଶସ୍ଯ ନବୈେଦ୍ଯ ହବେ।அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனபலி.
7 ଯଦି ତୁମ୍ଭେ କରଇେ ରେ ରୋଷଇେ ହାଇେ ଶକୋ ୟାଇଥିବା ଶସ୍ଯ ଦିଅ, ତବେେ ତାହା ନିଶ୍ଚିତ ତଲେ ରେ ଭଜା ୟାଇଥିବ ଓ ସରୁ ମଇଦା ରେ ହାଇେ କରଇେ ରେ ପରସା ୟାଇଥିବ।நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
8 ତୁମ୍ଭେ ଏହିସବୁ ଦ୍ରବ୍ଯ ରେ ପ୍ରସ୍ତୁତି ଶସ୍ଯ ନବୈେଦ୍ଯ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଛାମୁକୁ ଆଣିବ। ଆଉ ତାହା ଯାଜକକୁ ଦବେ ଓ ଯାଜକ ତାକୁ ନଇେ ୟଜ୍ଞବଦେୀ ଉପରେ ରଖିବ।இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து,
9 ପୁଣି ଯାଜକ ସହେି ଭଜା ଶସ୍ଯରୁ କିଛି ଅଂଶ ନବୋ ଉଚିତ୍ ଓ ୟଜ୍ଞବଦେୀ ଉପରେ ଏହି ସ୍ମରଣାର୍ଥକ ଅଂଶ ଦଗ୍ଧ କରିବା ଉଚିତ୍। ତାହା ସଦାପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ ସୁବାସିତ ନବୈେଦ୍ଯ ଅଟେ।அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக் குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
10 ସହେି ଶସ୍ଯ-ନବୈେଦ୍ଯର ଅବଶିଷ୍ଟ ଅଂଶ ହାରୋଣ ଓ ତାହାର ପୁତ୍ରଗଣର ହବେ। ଏହି ଅବଶିଷ୍ଟାଂଶ ଯାହା ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉପହାରରୁ ନିଆୟାଏ ମହାପବିତ୍ର ଅଟେ।இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.
11 ତୁମ୍ଭମାନେେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ଯେ କୌଣସି ଶସ୍ଯ-ନବୈେଦ୍ଯ ଆଣିବ, ତାହା ତାଡିଶୂନ୍ଯ ହବୋ ଉଚିତ୍। ତୁମ୍ବମାନେେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ନବୈେଦ୍ଯ ରୂପେ ତାଡି କି ମଧୁ କବେେ ଦଗ୍ଧ କରିବା ଉଚିତ୍ ନୁହେଁ।நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
12 ତୁମ୍ଭମାନେେ ପ୍ରଥମଜାତ ଫଳର ନବୈେଦ୍ଯ ରୂପେ ତାଡି କି ମଧୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ନିଶ୍ଚିତ ଉତ୍ସର୍ଗ କରିପାର, କିନ୍ତୁ ଏହା ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ଗୋଟିଏ ମଧୁର ସୁଗନ୍ଧି ଉପହାର ହବେ। ଏହାକୁ ୟଜ୍ଞବଦେୀ ଉପରକୁ ନିଆ ୟାଇ ପାରିବ ନାହିଁ।முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது.
13 ତୁମ୍ଭେ ସମସ୍ତ ଶସ୍ଯ ନବୈେଦ୍ଯ ରେ ଲବଣ ମିଶାଇବ, ଯାହା ତୁମ୍ଭେ ଉତ୍ସର୍ଗ କର। ପୁଣି ପରମେଶ୍ବରଙ୍କ ଚୁକ୍ତି ରୂପକ ଲବଣକୁ ଶସ୍ଯ ନବୈେଦ୍ଯ ରେ ଦବେ। ଆଉ ତୁମ୍ଭର ସମସ୍ତ ନବୈେଦ୍ଯ ସହିତ ଲବଣ ଏକ ଅଂଶ ହବେ।நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனின் உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறைவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
14 ପୁଣି ଯବେେ ତୁମ୍ଭେ ତୁମ୍ଭର ପ୍ରଥମଜାତ ଶସ୍ଯ ନବୈେଦ୍ଯ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ଉତ୍ସର୍ଗ କର, ତବେେ ତୁମ୍ଭ ପ୍ରଥମଜାତ ଶସ୍ଯ ନବୈେଦ୍ଯ ରୂପେ ଅଗ୍ନି ରେ ଭଜା ତାଜା ଶସ୍ଯ ଉତ୍ସର୍ଗ କରିବ।முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாக கொண்டுவரக்கடவாய்.
15 ପୁଣି ତାହା ଉପରେ ତୈଳ ଦବେ ଓ ଲୋବାନି ରଖିବ। ତାହା ଶସ୍ଯ ନବୈେଦ୍ଯ ହବେ।அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி.
16 ତା'ପରେ କିଛି ମର୍ଦ୍ଦିତ ଶସ୍ଯ, କିଛି ତୈଳ ଓ ସମସ୍ତ ଲୋବାନି ଗୋଟିଏ ସ୍ମରାଣାର୍ଥକ ଅଂଶ ରୂପେ ଦଗ୍ଧ କରିବ। ଏହା ସଦାପ୍ରଭୁଙ୍କ ପ୍ରତି ଗୋଟିଏ ଉପହାର ଅଟେ।பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக் குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.
Tamil Bible