Leviticus 25 - ORIYA (Tamil)

1 ଅନନ୍ତର ସଦାପ୍ରଭୁ ସୀନଯ ପର୍ବତ ରେ ମାଶାଙ୍କେୁ କହିଲେ,கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:

2 ତୁମ୍ଭେ ଇଶ୍ରାୟେଲ ସନ୍ତାନଗଣଙ୍କୁ କୁହ, ଆମ୍ଭେ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ଯେଉଁ ଦେଶ ଦବୋ, ତୁମ୍ଭମାନେେ ସହେି ଦେଶ ରେ ପ୍ରବେଶ କଲେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ଭୂମି ବିଶ୍ରାମ କରିବ।நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.

3 ଛଅବର୍ଷ ପର୍ୟ୍ଯନ୍ତ ତୁମ୍ଭମାନେେ ନିଜନିଜ କ୍ଷେତ୍ର ରେ ବୀଜ ବୁଣିବ ଓ ଛଅବର୍ଷ ପର୍ୟ୍ଯନ୍ତ ତୁମ୍ଭମାନେେ ନିଜ ଦ୍ରାକ୍ଷାଲତା ଝାଡିର ଓ ତହିଁର ଫଳ ସଂଗ୍ରହ କରିବ।ஆறு வருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.

4 ମାତ୍ର ସପ୍ତମ ବର୍ଷ ରେ ଭୁମିକୁ ତୁମ୍ଭମାନେେ ବିଶ୍ରାମ ଦବେ। ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ଏହା ମହାବିଶ୍ରାମ ହବେ। ତୁମ୍ଭମାନେେ ନିଜ କ୍ଷେତ୍ର ରେ ବୀଜ ବୁଣିବ ନାହିଁ କି ନିଜ ଦ୍ରାକ୍ଷାଲତା ଝାଡିବ ନାହିଁ।ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும் உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,

5 ଯେଉଁ ଶସ୍ଯ ତୁମ୍ଭ କ୍ଷେତ୍ର ରେ ଆପେ ହାଇେଥିବା, ତାକୁ ତୁମ୍ଭମାନେେ କାଟିବ ନାହିଁ କିମ୍ବା ତୁମ୍ଭ ଅଝଡା ଦ୍ରାକ୍ଷାଲତାର ଫଳ ସଂଗ୍ରହ କରିବ ନାହିଁ। ତାହା ଭୂମିର ମହାବିଶ୍ରାମ ବର୍ଷ ହବେ।தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதேவிட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஒரு ஓய்வுவருஷமாயிருக்கக்கடவது.

6 ଯଦିଓ ଭୂମି ପାଇଁ ବିଶ୍ରାମ ଅଟେ, ତୁମ୍ଭମାନଙ୍କ ପାଇଁ ଖାଦ୍ୟର ଅଭାବ ହବେ ନାହିଁ। ତୁମ୍ଭ ଦାସମାନଙ୍କର, ତୁମ୍ଭ ବର୍ତ୍ତନଜୀବୀମାନଙ୍କର ଓ ତୁମ୍ଭ ସହବାସୀ ବିଦେଶୀମାନଙ୍କର ଭକ୍ଷ୍ଯର ଅଭାବ ହବେ ନାହିଁ। ତେଣୁ ତୁମ୍ଭମାନଙ୍କର କାହାରି ଖାଦ୍ୟର ଅଭାବ ରହିବ ନାହିଁ।தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,

7 ଆଉ ତୁମ୍ଭମାନଙ୍କର ପଶୁର ଓ ଅନ୍ଯାନ୍ଯ ବନପଶୁମାନଙ୍କ ନିମନ୍ତେ ପ୍ରଚୁର ଖାଦ୍ୟ ହବେ।உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக.

8 ଆଉ ତୁମ୍ଭେ ନିଜ ପାଇଁ ସାତ ବିଶ୍ରାମ ବର୍ଷ, ଅର୍ଥାତ୍ ସାତଗୁଣ ସାତବର୍ଷ ଗଣନା କରିବ, ତାହା ଦ୍ବାରା ସହେି ସାତଗୁଣ ସାତ ବର୍ଷର ସମୟ ତୁମ୍ଭ ପାଇଁ ଅଣଚାଶ ବର୍ଷ ହବେ।அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்.

9 ତହୁଁ ସପ୍ତମ ମାସର ଦଶମ ଦିନ ରେ ତୁମ୍ଭେ ମହାଶବ୍ଦକାରୀ ତୂରୀ ବଜାଇବ, ପ୍ରଯଶ୍ଚିତ ଦିନ ରେ ତୁମ୍ଭମାନେେ ନିଜର ସମଗ୍ର ଦେଶ ରେ ତୂରୀ ବଜାଇବ।அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்.

10 ପୁଣି ତୁମ୍ଭେ ପଚାଶତମ ବର୍ଷକୁ ପବିତ୍ରରୂପେ ବିବଚେନା କରିବ। ସମୁଦାଯ ଦେଶ ରେ ପ୍ରେତ୍ୟକକ ବାସିନ୍ଦାମାନଙ୍କ ପ୍ରତି ମୁକ୍ତି ଘାଷେଣା କରିବ। ତାହା ତୁମ୍ଭମାନଙ୍କ ନିମନ୍ତେ ୟୋବଲେ (ମହୋଲ୍ଲାସ ଉତ୍ସବ) ହବେ। ତୁମ୍ଭମାନେେ ସମସ୍ତେ ନିଜ ନିଜର ସମ୍ପତ୍ତି ନିକଟକୁ ଫରେିୟିବ ଓ ପ୍ରେତ୍ୟକକ ନିଜ ନିଜ ବଂଶ ନିକଟକୁ ଫରେିୟିବ।ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.

11 ସହେି ପଚାଶତମ ବର୍ଷ ବ୍ଯାପି ତୁମ୍ଭମାନଙ୍କ ନିମନ୍ତେ ୟୋବଲେ ହବେ। ତୁମ୍ଭମାନେେ କ୍ଷେତ୍ର ରେ ଶସ୍ଯ ବୁଣିବ ନାହିଁ କିମ୍ବା ଆପେ ବଢିଥିବା ଶସ୍ଯ କାଟିବ ନାହିଁ ଓ ଅଝଡା ଦ୍ରାକ୍ଷାଲତାର ଫଳ ସଂଗ୍ରହ କରିବ ନାହିଁ।அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.

12 କାରଣ ସହେି ବର୍ଷ ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ଅଟେ, ତାହା ତୁମ୍ଭମାନଙ୍କ ପ୍ରତି ପବିତ୍ର ହବେ। ତଥାପି ତୁମ୍ଭମାନେେ କ୍ଷେତ୍ରୋତ୍ପନ୍ନ ଶସ୍ଯାଦି ଖାଇ ପାରିବ।அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.

13 ସେ ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ବର୍ଷ ରେ ପ୍ରେତ୍ୟକକ ନିଜ ନିଜ ଅଧିକାରକୁ ଫରେିୟିବା ଉଚିତ୍।அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

14 ତୁମ୍ଭେ ଯେତବେେଳେ ତୁମ୍ଭର ପ୍ରତିବେଶୀ ନିକଟରେ ଜମି ବିକ୍ରଯ କରିବ, ସେତବେେଳେ ତାହା ସହିତ କୌଣସି ପ୍ରତାରଣା କର ନାହିଁ। ପୁଣି ଯେତବେେଳେ କିଣିବ, ତବେେ ତା' ପ୍ରତି ଅନ୍ଯାଯ କରିବ ନାହିଁ।ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக் கூடாது.

15 ତୁମ୍ଭେ ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ପରବର୍ଷର ସଂଖ୍ଯା ଅନୁସାରେ ଆପଣା ପ୍ରତିବେଶୀଠାରୁ କିଣିବ ଓ ଫଳ ଉତ୍ପତ୍ତି ବର୍ଷର ସଂଖ୍ଯା ଅନୁସାରେ ସେ ତୁମ୍ଭଠା ରେ ବିକ୍ରଯ କରିବ।யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக.

16 ତୁମ୍ଭେ ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ବର୍ଷର ଆଧିକ୍ଯ ଅନୁସାରେ ତହିଁର ମୂଲ୍ଯ ବୃଦ୍ଧି କରିବ ଓ ବର୍ଷର ନ୍ଯୁନତା ଅନୁସାରେ ମୂଲ୍ଯ ଊଣା କରିବ, କାରଣ ସେ ତୁମ୍ଭକୁ ବର୍ଷର ସଂଖ୍ଯା ଅନୁସାରେ ଭୂମି ଜାତ ଦ୍ରବ୍ଯ ବିକ୍ରଯ କରିବ।பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும்.

17 ତୁମ୍ଭମାନେେ ପରସ୍ପର ପ୍ରତି ଅନ୍ଯାଯ କରିବ ନାହିଁ। କିନ୍ତୁ ଆପଣା ପରମେଶ୍ବରଙ୍କୁ ଭୟ କରିବ, କାରଣ ଆମ୍ଭେ ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭମାନଙ୍କର ପରମେଶ୍ବର ଅଟୁ।உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயஞ்செய்யக் கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

18 ଆମ୍ଭର ବ୍ଯବସ୍ଥା ଅନୁସାରେ ଆଚରଣ କରିବ ଓ ଆମ୍ଭର ଶାସନ ସକଳ ମାନିବ ଓ ପାଳନ କରିବ। ତାହା ହେଲେ ତୁମ୍ଭମାନେେ ଦେଶ ରେ ନିର୍ଭୟ ରେ ବାସ କରିପାରିବ।என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.

19 ପୁଣି ଭୁମି ରେ ପ୍ରଚୁର ଶସ୍ଯ ଉତ୍ପନ୍ନ ହବେ। ତୁମ୍ଭମାନେେ ତୃପ୍ତି ରେ ଭୋଜନ କରିବ ଓ ଦେଶ ରେ ନିର୍ଭୟ ରେ ବାସ କରିବ।பூமி தன் கனியைத்தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

20 ତୁମ୍ଭମାନେେ କହିପାର, 'ଆମ୍ଭମାନେେ ତ ବୁଣିବୁ ନାହିଁ, କି ଉତ୍ପନ୍ନ ଫଳ ସଂଗ୍ରହ କରିବୁ ନାହିଁ, ତବେେ ଆମ୍ଭମାନେେ ସପ୍ତମ ବର୍ଷ ରେ କ'ଣ ଖାଇବୁ।'ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,

21 ସେଥିପାଇଁ ତୁମ୍ଭମାନେେ ବ୍ଯସ୍ତ ହୁଅ ନାହିଁ, ଆମ୍ଭେ ଷଷ୍ଠ ବର୍ଷ ରେ ତୁମ୍ଭମାନଙ୍କ ଉପରେ ଆଶୀର୍ବାଦ ଆଜ୍ଞା କରିବା ତହିଁରେ ତାହା ତିନିବର୍ଷର ଅମଳ ଦବେ।நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத்தரும்.

22 ତୁମ୍ଭମାନେେ ଅଷ୍ଟମ ବର୍ଷ ରେ ଯେତବେେଳେ ବୁଣିବ ସେତବେେଳେ ତୁମ୍ଭମାନେେ ପୁରାତନ ଶସ୍ଯ ଖାଉଥିବ। ତୁମ୍ଭମାନେେ ନବମବର୍ଷ ଫଳ ଉତ୍ପନ୍ନ ହବୋ ପର୍ୟ୍ଯନ୍ତ ସହେି ପୁରାତନ ଶସ୍ଯ ଖାଇବ।நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.

23 ଭୂମି ଆମ୍ଭର, ତୁମ୍ଭେ ସବୁଦିନ ପାଇଁ ତାକୁ ବିକ୍ରଯ କରିପାରିବ ନାହିଁ। ତୁମ୍ଭମାନେେ କବଳେ ଆମ୍ଭସହିତ ବାସ କରୁଥିବା ବିଦେଶୀ ଓ ପ୍ରବାସୀ ଅଟ।தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.

24 ଲୋକମାନେ ସମାନଙ୍କେର ଭୂମି ବିକ୍ରଯ କରିପାରନ୍ତି, ମାତ୍ର ପରିବାର ସହେି ଜମି ସର୍ବଦା ଫରେିପାଇବେ।உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.

25 ଯଦି ତୁମ୍ଭର ଭ୍ରାତା ଅତି ଦରିଦ୍ର ହାଇେ ନିଜର ଭୂମି ବିକ୍ରଯ କରେ ତବେେ ତାହାର ମୁକ୍ତିକର୍ତ୍ତା ନିକଟ ସଂପର୍କୀଯ ଆସି ନିଜର ଭ୍ରାତାର ବିକ୍ରୀତ ଭୂମି ମୁକ୍ତ କରିନବେ।உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.

26 ଯଦି ସହେି ବ୍ଯକ୍ତିର ନିକଟ ସଂପର୍କୀଯ କହେି ତା'ର ଭୂମି ମୁକ୍ତ କରିବାକୁ ନ ଥାଏ, ତବେେ ସେ ନିଜେ ଅଧିକ ଧନ ଲାଭ କଲାପରେ ତା'ର ଭୂମି ମୁକ୍ତ କରିବ।அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,

27 ସେ ଭୂମି ବିକ୍ରୀ ହେଲା ବର୍ଷର ଗଣନା କରୁ ଓ ତଦନୁସା ରେ ଅତିରିକ୍ତ ମୂଲ୍ଯ କ୍ରଯକର୍ତ୍ତାକୁ ଫରୋଇ ଦେଉ। ତହିଁରେ ସେ ପୁନର୍ବାର ନିଜର ଅଧିକାର ଫରୋଇ ନବୋକୁ ୟଥେଷ୍ଟ ଅର୍ଥ ନ ପାଏ,அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

28 ତବେେ ସେ ଯାହା ବିକ୍ରଯ କରିଅଛି ତାହା ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ବର୍ଷ ପର୍ୟ୍ଯନ୍ତ କ୍ରଯକର୍ତ୍ତା ହସ୍ତ ରେ ରହିବ। ପୁଣି ତାହା ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ସମୟରେ ମୁକ୍ତ ହବେ ଓ ପୁନର୍ବାର ସେ ପ୍ରକୃତ ଲୋକର ଅଧିକାରକୁ ଫରେିୟିବ।அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போவான்.

29 ଆଉ ଯଦି କହେି ପ୍ରାଚୀର ବେଷ୍ଟିତ ନଗରର ମଧ୍ଯବର୍ତ୍ତୀ ବାସଗୃହ ବିକ୍ରଯ କରେ, ତବେେ ସେ ବିକ୍ରଯ ବର୍ଷର ଶଷେ ପର୍ୟ୍ଯନ୍ତ ତାହା ମୁକ୍ତ କରିପାରିବ। ପୂର୍ଣ୍ଣ ଏକ ବର୍ଷ ମଧିଅରେ ତାହା ମୁକ୍ତ କରିବାର ଅଧିକାର ରହିବ।ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.

30 ଯଦି ନଗର ରେ ସହେି ଗୃହଟିର ଗ୍ଭରିପଟେ ପ୍ରାଚୀର ବେଷ୍ଟିତ ହାଇେଥାଏ, ତବେେ ପଞ୍ଜିକା ବର୍ଷ ସମୂର୍ଣ୍ଣ ହେଲେ ମଧ୍ଯ ତାହା ବିକ୍ ରତାେ ବ୍ଯକ୍ତିକୁ ମିଳିବ ନାହିଁ। ସବୁଦିନ ପାଇଁ ଏକ ଗୃହଟି କ୍ରଯ କର୍ତ୍ତାର ହାଇେ ରହିବ। ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ବର୍ଷ ରେ ମଧ୍ଯ ତାହା ମୁକ୍ତ ହାଇପୋରିବ ନାହିଁ।ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது.

31 ମାତ୍ର ଗ୍ରାମଗୁଡିକର ଗୃହମାନ ପ୍ରାଚୀର ଦ୍ବାରା ଘରୋଉ ହାଇନୋହିଁ। ସହେି ନିର୍ମିତ ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ସମୟରେ ପ୍ରଥମ ବିକ୍ ରତାେ ନିକଟକୁ ଫରେିୟିବ।மதில் சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள் போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.

32 ମାତ୍ର ଲବେୀୟମାନଙ୍କର ନଗରମାନ, ସଠାେରେ ଥିବା ଗୃହସବୁ ମୁକ୍ତ କରିବାର ଅଧିକାର ସମାନଙ୍କେ ପକ୍ଷ ରେ ଅନନ୍ତକାଳସ୍ଥାଯୀ ହବେ।லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.

33 ଯଦି କହେି ଲବେୀୟଠାରୁ ଏକ ଗୃହ କ୍ରଯ କରେ ତବେେ ସହେି ବିକ୍ରୀତ ଗୃହ ଓ ତାହାର ଅଧିକୃତ ନଗର ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ସମୟରେ ମୁକ୍ତ ହବେ, କାରଣ ଇଶ୍ରାୟେଲୀୟ ମଧିଅରେ ଲବେୀୟମାନଙ୍କ ଗୃହସବୁ ସମାନଙ୍କେର ଅଟେ।இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப்பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.

34 ମାତ୍ର ଲବେୀୟମାନଙ୍କ ନଗରର ଗ୍ଭରିପାଖ ରେ ଥିବା କ୍ଷେତ୍ର ଓ ପ୍ରାନ୍ତର ଭୂମି ବିକ୍ରଯ କରାୟିବ ନାହିଁ, କାରଣ ତାହା ସମାନଙ୍କେର ଅନନ୍ତକାଳୀନ ଅଧିକାର।அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.

35 ଆଉ ଯବେେ ତୁମ୍ଭର ଭାଇ ଦରିଦ୍ର ହାଇୟୋଏ ଓ ଜୀବିକା ନିର୍ବାହ ପାଇଁ ଅକ୍ଷମ ହୁଏ, ତବେେ ତୁମ୍ଭେ ତାହାକୁ ରଖିବ; ସେ ବିଦେଶୀ ଓ ପ୍ରବାସୀ ପରି ତୁମ୍ଭ ସହିତ ଜୀବନ ଧାରଣ କରିବ।உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

36 ତୁମ୍ଭେ ତା'ଠାରୁ ଋଣ ବାବଦ ରେ କୌଣସି ସୁଧ ନବେ ନାହିଁ। ମାତ୍ର ଆପଣା ପରମେଶ୍ବରଙ୍କୁ ଭୟ କର ଏବଂ ତୁମ୍ଭର ଭାଇକୁ ତୁମ୍ଭ ସହିତ ଜୀବନଧାରଣ କରିବାକୁ ଦିଅ।நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.

37 ତାକୁ ଟଙ୍କା ଧାର ଦଇେ ତା'ଠାରୁ ସୁଧ ଆଦାଯ କର ନାହିଁ। ଆଉ ତାକୁ ଅନ୍ନ ଦଇେ ତା'ଠାରୁ ଲାଭ ଗ୍ରହଣ କର ନାହିଁ।அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.

38 ଯେ ତୁମ୍ଭର ପରମେଶ୍ବର ଓ ତୁମ୍ଭମାନଙ୍କୁ କିଣାନ ଦେଶ ଦବୋ ନିମନ୍ତେ ମିଶର ଦେଶରୁ ବାହାର କରି ଆଣିଲେ, ସହେି ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭମାନଙ୍କର ପରମେଶ୍ବର ଆମ୍ଭେ ଅଟୁ।உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

39 ଆଉ ଯଦି ତୁମ୍ଭର ଭାଇ ଦରିଦ୍ର ହାଇେଥାଏ ଓ ତୁମ୍ଭ ନିକଟରେ ନିଜକୁ ବିକ୍ରଯ କରେ, ତବେେ ତୁମ୍ଭେ ତାହାକୁ ବନ୍ଧା ଦାସପରି ପରିଶ୍ରମ କରାଇବ ନାହିଁ।உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.

40 ସେ ବର୍ତ୍ତନଜୀବୀ ଓ ପ୍ରବାସୀ ପରି ତୁମ୍ଭ ସହିତ ବାସ କରିବ ଓ ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ବର୍ଷ ପର୍ୟ୍ଯନ୍ତ ତୁମ୍ଭର ଦାସ୍ଯକର୍ମ କରିବ।அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.

41 ତା'ପରେ ସେ ନିଜର ସନ୍ତାନଗଣଙ୍କ ସହିତ ତୁମ୍ଭଠାରୁ ମୁକ୍ତ ହାଇେ ନିଜ ବଂଶ ନିକଟକୁ ଓ ତାହାର ପୂର୍ବପୁରୁଷଙ୍କ ଅଧିକାରକୁ ଫରେିୟିବ।பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.

42 କାରଣ ସମାନେେ ଆମ୍ଭର ଦାସ, ଆମ୍ଭେ ସମାନଙ୍କେୁ ମିଶର ଦେଶରୁ ବାହାର କରି ଆଣିଅଛୁ। ସମାନେେ ପୁନର୍ବାର ଆଉ କ୍ରୀତଦାସ ହବେେ ନାହିଁ।அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால் அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.

43 ତୁମ୍ଭେ ତାକୁ ଜଣେ ନିଷ୍ଠୁର ସ୍ବାମୀରୂପେ ବ୍ଯବହାର କରିବ ନାହିଁ। ତୁମ୍ଭେ ତୁମ୍ଭର ପରମେଶ୍ବରଙ୍କୁ ଭକ୍ତି କରିବ।நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல் உன் தேவனுக்குப் பயந்திரு.

44 ଯଦି ତୁମ୍ଭର କ୍ରୀତଦାସ କିମ୍ବା କ୍ରୀତଦାସୀ ଦରକାର ହୁଏ, ତବେେ ତୁମ୍ଭ ଚତୁର୍ଦ୍ଦିଗସ୍ଥ ଅନ୍ୟଦେଶୀଯମାନଙ୍କଠାରୁ କ୍ରୀତଦାସଦାସୀ କିଣିବ।உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.

45 ଯେଉଁ ପ୍ରବାସୀ ବିଦେଶୀମାନେ ତୁମ୍ଭ ସହିତ ବାସ କରୁଛନ୍ତି ଏବଂ ସମାନଙ୍କେର ପରିବାରର ସଭ୍ଯ ତୁମ୍ଭ ଦେଶ ରେ ଜନ୍ମନ୍ତି, ସମାନଙ୍କେ ସନ୍ତାନମାନଙ୍କୁ ତୁମ୍ଭେ କିଣିପାରିବ। ସମାନେେ ତୁମ୍ଭର କ୍ରୀତଦାସ ଓ କ୍ରୀତଦାସୀ ହବେେ।உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக் கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.

46 ତୁମ୍ଭମାନେେ ନିଜ ଅନ୍ତେ ଆପଣା ଭବିଷ୍ଯତ ସନ୍ତାନଗଣ ଅଧିକାର ନିମନ୍ତେ ପୈତୃକ ସମ୍ପତ୍ତିରୂପେ ସମାନଙ୍କେୁ ଦଇପୋରିବ। ସମାନେେ ତୁମ୍ଭମାନଙ୍କର ଓ ତୁମ୍ଭର ପରିବାରର ସବୁଦିନ ପାଇଁ ଦାସ ହାଇେ ରହିବେ। ମାତ୍ର ତୁମ୍ଭମାନେେ ନିଜ ଭ୍ରାତା ଇଶ୍ରାୟେଲ ଲୋକମାନଙ୍କ ଉପରେ କଠାେର କତ୍ତୃର୍ତ୍ବ କରିବ ନାହିଁ।அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக் கூடாது.

47 ଆଉ ଯଦି ତୁମ୍ଭମାନଙ୍କ ମଧିଅରେ କହେି ପ୍ରବାସୀ କି ବିଦେଶୀ ଧନୀ ହାଇୟୋଏ ଓ ତୁମ୍ଭର ସ୍ବଦେଶୀ ଲୋକ ଦରିଦ୍ର ହାଇୟୋଏ, ଆଉ ସହେି ବିଦେଶୀ ବା ପ୍ରବାସୀ ନିକଟରେ ସେ ନିଜକୁ ବିକ୍ରୀ କରେ,உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,

48 ତବେେ ସେ ବ୍ଯକ୍ତି ପରେ ମୁକ୍ତ ହାଇପୋରିବ। ତାହାର ଜ୍ଞାତ ମଧ୍ଯରୁ କହେି ତାକୁ ମୁକ୍ତ କରିପାରିବ।அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.

49 ତାହାର କକା କିମ୍ବା କକାର ପୁତ୍ର ତାକୁ ମୁକ୍ତ କରିପାରିବ। ଆଉ ତା'ର ବଂଶଜାତ ନିକଟବର୍ତ୍ତୀ କୌଣସି ଜ୍ଞାତି ତାକୁ ମୁକ୍ତ କରିପାରିବ କିମ୍ବା ତାହାର ସ୍ବହସ୍ତ ରେ ଅଧିକ ଧନ ହେଲେ ସେ ନିଜକୁ ମଧ୍ଯ ମୁକ୍ତ କରିପାରିବ।அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.

50 ତହିଁରେ ତାହାର ବିକ୍ରଯ ବର୍ଷଠାରୁ ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ବର୍ଷ ପର୍ୟ୍ଯନ୍ତ ସେ କ୍ରଯକର୍ତ୍ତା ସହିତ ଗଣନା କରିବ, ପୁଣି ବିକ୍ରଯ ବର୍ଷର ସଂଖ୍ଯା ଅନୁସାରେ ତାହାର ମୂଲ୍ଯ ହବେ; ବର୍ତ୍ତନଜୀବୀର ଦିନ ତୁଲ୍ଯ ତାହାର ଦାସତ୍ବ ହବେ।அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக்கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.

51 ଯବେେ ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ବର୍ଷକୁ ଅନକେ ବର୍ଷ ବାକିଥାଏ ତବେେ କ୍ରଯ ମୂଲ୍ଯର ଏକ ବଡ ଅଂଶ ତାକୁ ଫରୋଇ ଦବେ।இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.

52 ଯଦି ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ବର୍ଷ ପର୍ୟ୍ଯନ୍ତ ଅଳ୍ପ ବର୍ଷ ବାକି ଥାଏ, ତବେେ ତାହା ସହିତ ସେ ଗଣନା କରିବ, ସହେି ବର୍ଷ ଅନୁସାରେ ସେ ଆପଣା କ୍ରଯ ମୂଲ୍ଯର ଏକ େଛାଟ ଅଂଶ ତାକୁ ଫରୋଇ ଦବେ।யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருஷங்களுக்குத் தக்கதை, தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.

53 ମାତ୍ର ସହେି ବ୍ଯକ୍ତି ତା' ସହିତ ଜଣେ କ୍ଷଣସ୍ଥାଯୀ ଘରୋଇ ସାହାୟ୍ଯକାରୀ ହିସାବ ରେ ରହିବ। ତୁମ୍ଭ ସାକ୍ଷାତ ରେ ତାହା ଉପରେ କହେି କଠାେର କତ୍ତୃର୍ତ୍ବ କରିପାରିବେ ନାହିଁ।இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக் கூடாது.

54 ଯଦି ତାକୁ କହେି ମୁକ୍ତ ନକରେ, ତବେେ ସେ ଆପଣା ସନ୍ତାନଗଣ ସହ ମହୋଲ୍ଲାସ-ଉତ୍ସବ ବର୍ଷ ରେ ମୁକ୍ତ ହାଇେ ବାହାରି ୟିବ।இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடேகூட இவன் பிள்ளைகளும் யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள்.

55 କାରଣ ଇଶ୍ରାୟେଲ ସନ୍ତାନଗଣ ଆମ୍ଭର ଦାସ। ଆମ୍ଭେ ସମାନଙ୍କେୁ ମିଶର ଦେଶରୁ ଦାସତ୍ବରୁ ବାହାର କରି ଆଣିଅଛୁ। ଆମ୍ଭେ ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭମାନଙ୍କର ପରମେଶ୍ବର ଅଟୁ।இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Bible