Numbers 21 - ORIYA (Tamil)

1 କିଣାନ ବଂଶୀଯ ରାଜା ଆରାଦ ଦକ୍ଷିଣ ପ୍ରଦେଶ ରେ ବାସ କରୁଥିବା ବେଳେ ଶୁଣିଲେ ଯେ ଇଶ୍ରାୟେଲର ଲୋକମାନେ ଅଥାରୀମର ପଥ ଦଇେ ଆସୁଛନ୍ତି। ତେଣୁ ସେ ସମାନଙ୍କେ ବିରୁଦ୍ଧ ରେ ୟୁଦ୍ଧ କଲେ ଓ ସମାନଙ୍କେ ମଧ୍ଯରୁ କେତକଙ୍କେୁ ବନ୍ଧୀ କଲେ।வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, அவர்களில் சிலரை சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

2 ଇଶ୍ରାୟେଲର ଲୋକମାନେ ପ୍ରତିଜ୍ଞା କଲେ: ଯଦି ତୁମ୍ଭେ ଏହି ଲୋକମାନଙ୍କୁ ଆମ୍ଭ ହସ୍ତ ରେ ସମର୍ପଣ କର, ତବେେ ଆମ୍ଭେ ସମାନଙ୍କେ ନଗରସବୁ ବିନାଶ କରିବୁ।அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம் பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள்.

3 ତହୁଁ ସଦାପ୍ରଭୁ ସମାନଙ୍କେ ପ୍ରାର୍ଥନା ଶୁଣିଲେ, ସେ କିଣାନୀଯମାନଙ୍କୁ ଇଶ୍ରାୟେଲ ହସ୍ତ ରେ ସମର୍ପଣ କଲେ ଓ ସମାନଙ୍କେ ସମସ୍ତ ନଗର ବର୍ଜନୀଯ ରୂପେ ବିନାଶ ହେଲା। ତେଣୁ ସହେି ସ୍ଥାନର ନାମ ହର୍ମା ହେଲା।கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.

4 ତା'ପରେ ସମାନେେ ଇଦୋମ ଦେଶ ପ୍ରଦକ୍ଷିଣ କରିବା ନିମନ୍ତେ ହାରେ ପର୍ବତରୁ ଲୋହିତ ସାଗର ପଥ ଦଇେ ୟାତ୍ରା କଲେ। ପୁଣି ଦୀର୍ଘପଥ ୟୋଗୁଁ ସମାନେେ ର୍ଧୈୟ୍ଯହରା ହାଇଗେଲେ।அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.

5 ତହିଁରେ ଲୋକମାନେ ପରମେଶ୍ବର ଓ ମାଶାଙ୍କେ ବିରୁଦ୍ଧ ରେ ଅଭିଯୋଗ କଲେ ଏବଂ କହିଲେ, କାହିଁକି ତୁମ୍ଭମାନେେ ଆମ୍ଭମାନଙ୍କୁ ଏହି ମରୁଭୂମିରେ ମାରିବାକୁ ମିଶର ଦେଶରୁ ବାହାର କରି ଆଣିଲ? ଏଠା ରେ ରୋଟୀ ନାହିଁ କି ଜଳ ନାହିଁ। ଆମ୍ଭମାନେେ ଏହି ଅଖାଦ୍ୟକୁ ଘୃଣା କରୁ।ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.

6 ତେଣୁ ସଦାପ୍ରଭୁ ସମାନଙ୍କେ ମଧ୍ଯକୁ ବିଷଧର ସର୍ପ ପ୍ ରରଣେ କଲେ। ସହେି ସର୍ପମାନେ ଲୋକମାନଙ୍କୁ ଦଂଶନ କରିବାରୁ ଇଶ୍ରାୟେଲର ଅନକେ ଲୋକ ମଲେ।அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச்சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.

7 ଏଥି ରେ ଲୋକମାନେ ମାଶାଙ୍କେ ନିକଟକୁ ଆସି ନିବଦନେ କଲେ, ଆମ୍ଭମାନେେ ସଦାପ୍ରଭୁ ଓ ତୁମ୍ଭ ବିରୁଦ୍ଧ ରେ ଅଭିଯୋଗ କରି ପାପ କରିଅଛୁଁ। ତେଣୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କର, ସେ ଯେପରି ଆମ୍ଭମାନଙ୍କଠାରୁ ଏହି ସର୍ପମାନଙ୍କୁ ଦୂ ରଇେ ନବେେ। ତେଣୁ ମାଶାେ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କଲେ।அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்.

8 ତହୁଁ ସଦାପ୍ରଭୁ ମାଶାଙ୍କେୁ କହିଲେ, ଗୋଟିଏ ପିତ୍ତଳ ସର୍ପ ନିର୍ମାଣ କରି ଗୋଟିଏ ସ୍ତମ୍ଭ ଉପରେ ରଖ। ସର୍ପଦ୍ବାରା ଦଂଶିତ ହାଇେଥିବା ଲୋକମାନେ ମୃତ୍ଯୁବରଣ କରିବେ ନାହିଁ। ଯଦି ସମାନେେ ସ୍ତମ୍ଭ ଉପରେ ଥିବା ସର୍ପକୁ ଦେଖନ୍ତି।அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

9 ତେଣୁ ମାଶାେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଆଜ୍ଞା ପାଳନ କଲେ। ସେ ଏକ ପିତ୍ତଳର ସର୍ପ ନିର୍ମାଣ କରି ଗୋଟିଏ ଖମ୍ବ ଉପରେ ସ୍ଥାପନ କଲେ। ତେଣୁ ସର୍ପ ଦଂଶିତ ବ୍ଯକ୍ତି ସହେି ଖମ୍ବସ୍ଥିତ ପିତ୍ତଳ ସର୍ପପ୍ରତି ଦୃଷ୍ଟିପାତ କରି ବଞ୍ଚିଲେ।அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

10 ଅନନ୍ତର ଇଶ୍ରାୟେଲର ଲୋକମାନେ ୟାତ୍ରାକରି ଓବୋତ ରେ ଛାଉଣୀ ସ୍ଥାପନ କଲେ।இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில் பாளயமிறங்கினார்கள்.

11 ତାହାପରେ ଓବୋତରୁ ୟାତ୍ରା କରି ପୂର୍ବ ଦିଗ ରେ ମାୟୋବର ପୂର୍ବଦିଗସ୍ଥିତ ମରୁଭୂମିରେ ଇଯୀ ଅବାରୀମ ରେ ଛାଉଣୀ ସ୍ଥାପନ କଲେ।ஓபோத்திலிருந்து பிரயாணம் பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள்.

12 ପୁଣି ସମାନେେ ସଠାରୁେ ୟାତ୍ରା କରି ସରେଦ୍ ଉପତ୍ୟକା ରେ ଛାଉଣୀ ସ୍ଥାପନ କଲେ।அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், சாரேத் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.

13 ସଠାରୁେ ସମାନେେ ୟାତ୍ରକରି ଇମାରେୀୟମାନଙ୍କ ସୀମାରୁ ନିର୍ଗତ ଅର୍ଣୋନ ନଦୀର ଅନ୍ୟ ପାଶର୍‌ବ ମରୁଭୂମିରେ ଛାଉଣୀ ସ୍ଥାପନ କଲେ। କାରଣ ମାୟୋବର ଓ ଇ ମାରେୀଯମାନଙ୍କର ମଧ୍ଯବର୍ତ୍ତୀ ଅର୍ଣୋନ୍ ମାୟୋବର ସୀମା ଥିଲା।அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.

14 ଏଥି ନିମନ୍ତେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ୟୁଦ୍ଧ ପୁସ୍ତକରେ କଥିତ ଅଛି, ଯଥା:அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,

15 ଘାଟିର ଗଡାଣିଗୁଡିକ ଯେଉଁଗୁଡିକ ଆରର ନିବାସ ଆଡେ ୟାଇଥିଲା ଏବଂ ସଗେୁଡିକ ମାୟୋବର ସୀମା ରେ ଅବସ୍ଥିତ ଥିଲା।ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

16 ସଠାରୁେ ସମାନେେ ବରେ ନାମକ ସ୍ଥାନକୁ ଆସିଲେ। ସହେି କୂପ ବିଷଯ ରେ ସଦାପ୍ରଭୁ ମାଶାଙ୍କେୁ କହିଲେ, ତୁମ୍ଭେ ଏହି ସ୍ଥାନ ରେ ଲୋକମାନଙ୍କୁ ଏକତ୍ର କର। ମୁଁ ସମାନଙ୍କେୁ ଜଳ ଦବେି।அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.

17 ସହେି ସମୟରେ ଇଶ୍ରାୟେଲ ଏହି ଗୀତ ଗାଇଲେ:அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.

18 ରାଜାମାନେ ଓ ଅଧିପତିମାନେ ସହେି କୂପ ଖୋଳିଛନ୍ତି। କୁଳୀନମାନେ ଓ ରାଜାମାନେ ସମାନଙ୍କେର ଆଶାବାଡି ରେ ଓ ରାଜଦଣ୍ତ ରେ ତାହା ଖାେଳିଛନ୍ତି।நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தில் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.

19 ଲୋକମାନେ ମତ୍ତାନରୁ ନହଲୀଯଲକେୁ ଓ ନହଲୀଯଲଠାରୁେ ବାମାେତକୁ ୟାତ୍ରା କଲେ।அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்துக்கும்,

20 ବାମାେତରୁ ମାୟୋବ କ୍ଷେତ୍ରସ୍ଥିତ ଉପତ୍ୟକା ଦଇେ ପିସ୍ଗା ପର୍ବତର ଶୃଗଂକୁ ୟାତ୍ରା କଲେ। ତାହା ମରୁଭୂମି ଆଡକୁ ଥିଲା।பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.

21 ଅନନ୍ତର ଇଶ୍ରାୟେଲ ଇମାରେୀୟମାନଙ୍କ ରାଜା ସୀହାନେ ନିକଟକୁ କେତକେ ଦୂତଙ୍କ ପଠାଇଲେ, ସମାନେେ ରାଜାଙ୍କୁ କହିଲେ,அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

22 ଦୟାକରି ତୁମ୍ଭ ରାଜ୍ଯ ଦଇେ ଆମ୍ଭମାନଙ୍କୁ ୟିବାକୁ ଦିଅ। ଆମ୍ଭମାନେେ ତୁମ୍ଭ ଶସ୍ଯକ୍ଷେତ୍ର କିମ୍ବା ଦ୍ରାକ୍ଷାଲତାକୁ ପ୍ରବେଶ କରିବୁ ନାହିଁ। ଆମ୍ଭମାନେେ ତୁମ୍ଭ କୂପରୁ ଜଳପାନ କରିବୁ ନାହିଁ। ଆମ୍ଭମାନେେ ତୁମ୍ଭ ଦେଶସୀମା ପାର ହବୋ ପର୍ୟ୍ଯନ୍ତ କବଳେ ରୀଜପଥ ଦଇେ ଗମନ କରିବୁ।உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்க வேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள்.

23 ମାତ୍ର ସୀହାନରେ ରାଜା ଆପଣା ଦେଶ ମଧ୍ଯ ଦଇେ ଇଶ୍ରାୟେଲକୁ ୟାତ୍ରା କରିବାକୁ ଦେଲେ ନାହିଁ। ସେ ଆପଣାର ସମସ୍ତ ଲୋକଙ୍କୁ ଏକତ୍ରୀତ କରି ଇଶ୍ରାୟେଲ ବିରୁଦ୍ଧ ରେ ବାହାରିଲେ। ୟହସଠା ରେ ପହଞ୍ଚି ସେ ଇଶ୍ରାୟେଲର ବିରୁଦ୍ଧ ରେ ୟୁଦ୍ଧ କଲେ।சீகோன் தன் எல்லைவழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.

24 ମାତ୍ର ଇଶ୍ରାୟେଲର ଲୋକମାନେ ରାଜାଙ୍କୁ ହତ୍ଯା କଲେ। ତା'ପରେ ସମାନେେ ଅର୍ଣୋନଠାରୁ ୟଦ୍ଦୋକ ପର୍ୟ୍ଯନ୍ତ ଅର୍ଥାତ୍ ଅେମ୍ମାନୀୟମାନଙ୍କର ସୀମା ପର୍ୟ୍ଯନ୍ତ ଅଗ୍ରସର ହେଲେ। ସମାନେେ ସମାନଙ୍କେର ଦେଶ ଅଧିକାର କଲେ କିନ୍ତୁ ଆଗକୁ ୟାଇ ପାରିଲେ ନାହିଁ। କାରଣ ଅେମ୍ମାନୀୟମାନେ ଶକ୍ତିଶାଳି ଥିଲେ।இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.

25 ଏହିରୂପେ ଇଶ୍ରାୟେଲ ସେ ସମସ୍ତ ନଗର ଦଖଲ କଲେ। ଇଶ୍ରାୟେଲ ଇମାରେୀୟମାନଙ୍କ ସମସ୍ତ ନଗର ରେ ଅର୍ଥାତ୍ ହିଷବୋନ ରେ ଓ ତହିଁର ସମସ୍ତ ନଗର ରେ ବାସକଲେ।இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப்பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.

26 କାରଣ ହିଷ୍ ବୋନ ଇ ମାରେୀଯମାନଙ୍କ ରାଜା ସୀହାନଙ୍କେ ରାଜକୀଯ ନଗର ଥିଲା। ସେ ମାଯାେବର ପୂର୍ବ ରାଜା ବିପକ୍ଷ ରେ ୟୁଦ୍ଧ କଲେ ଏବଂ ଅର୍ଣୋନ୍ ପର୍ୟ୍ଯନ୍ତ ଦେଶ ଅଧିକାର କଲେ।எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.

27 ଏଥି ନିମନ୍ତେ କବିମାନେ କହନ୍ତି,அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.

28 ହିଷ୍ ବୋନଠାରୁ ଅଗ୍ନି ନିର୍ଗତ ହାଇେଅଛି। ଏକ ଶିଖା ସୀହାନେ ନଗରକୁ ବାହାରିଲା। ସହେି ଅଗ୍ନି ମାୟୋବର ଆର ନଗରକୁ ଧ୍ବଂସ କଲା ଏବଂ ଅର୍ଣୋନର ପର୍ବତଗୁଡିକୁ ଧ୍ବଂସ କଲା।எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜுவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது.

29 ହେ ମାୟୋବ ତୁମ୍ଭେ ଦୁଃଖିତ ଅଟ। ତୁମ୍ଭେ କମାେଶର ଲୋକମାନଙ୍କୁ ହରାଇଛ। ତା'ର ପୁତ୍ରଗଣ ପଳାଯନ କରିଛନ୍ତି, ତା'ର କନ୍ଯାମାନେ ଇ ମାରେୀଯ ଶାସକ କର୍ତ୍ତା ରାଜା ସୀହାନେ ହସ୍ତ ରେ ବନ୍ଦୀ ହାଇେଛନ୍ତି।ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.

30 ସମାନଙ୍କେର ଭବିଷ୍ଯତ୍ ବଂଶଧରଗଣ ହିଷ୍ ବୋନଠାରୁ ଦୀବୋନ ପର୍ୟ୍ଯନ୍ତ ଧ୍ବଂସ ହାଇେଛନ୍ତି। ଆମ୍ଭମାନେେ ସମାନଙ୍କେୁ ଶର ନିକ୍ଷପେ କରିଅଛୁ। ହିଷବୋନ୍ ଦୀବୋନ୍ ପର୍ୟ୍ଯନ୍ତ ହେଲା। ଆମ୍ଭମାନେେ ନୋଫହ ପର୍ୟ୍ଯନ୍ତ ଧ୍ବଂସ କଲୁ, ଯାହା ମଦବୋ ନିକଟରେ ଅଛି।அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதேபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.

31 ଏହିରୂପେ ଇଶ୍ରାୟେଲ ଇ ମାରେୀଯମାନଙ୍କ ଦେଶ ରେ ବାସ କଲେ।இஸ்ரவேலர் இப்படியே எமோரியரின் தேசத்திலே குடியிருந்தார்கள்.

32 ମାଶାେ ୟା ସରେ ଅନୁସନ୍ଧାନ କରିବାପାଇଁ ତାଙ୍କର ଲୋକ ପଠାଇଲେ ଏବଂ ତାଙ୍କର ଲୋକମାନେ ତହିଁର ସମସ୍ତ େଛାଟ ନଗରଗୁଡିକୁ ଅକ୍ତିଆର କଲେ ଓ ସଠାେରେ ବାସ କରୁଥିବା ଇ ମାରେୀଯମାନଙ୍କୁ ତଡି ଦେଲେ।பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.

33 ତହୁଁ ସମାନେେ ବାଶନ ଆଡକୁ ଅଗ୍ରସର ହେଲେ। ବାଶନର ରାଜା ଓଗ ତାହାର ଲୋକମାନେ ସମାନଙ୍କେ ସହିତ ଇଦ୍ରିଯୀଠା ରେ ୟୁଦ୍ଧ କଲେ।பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன் சமஸ்த ஜன்ங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான்.

34 ସଦାପ୍ରଭୁ ମାଶାଙ୍କେୁ କହିଲେ, ସେ ରାଜାକୁ ଭୟ କରନାହିଁ, କାରଣ ମୁଁ ତାହାକୁ, ତାହାର ସମସ୍ତ ଲୋକଙ୍କୁ ଓ ତାହାର ଦେଶକୁ ତୁମ୍ଭ ହସ୍ତ ରେ ସର୍ମପଣ କରିବି। ତୁମ୍ଭେ ହିଷବୋନବାସୀ ଇ ମାରେୀଯ ରାଜା ସୀହାନେ ପ୍ରତି ଯେପରି କରିଥିଲ, ତାହା ପ୍ରତି ସହେିପରି କରିବ।கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.

35 ଏଣୁ କହେି ଅବଶିଷ୍ଟ ନ ରହିବା ପର୍ୟ୍ଯନ୍ତ ସମାନେେ ତାହାକୁ ଓ ତାହାର ପୁତ୍ରଗଣକୁ ଓ ତାହାର ସମସ୍ତ ଲୋକଙ୍କୁ ଆକ୍ରମଣ କଲେ ଏବଂ ସମାନେେ ତାହାର ରାଜ୍ଯ ଅଧିକାର କଲେ।அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.

Tamil Bible