Numbers 35 - HINDI (Tamil)

1 फिर यहोवा ने, मोआब के अराबा में, यरीहो के पास की यरदन नदी के तट पर मूसा से कहा,எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

2 इस्त्राएलियों को आज्ञा दे, कि तुम अपने अपने निज भाग की भूमि में से लेवियों को रहने के लिये नगर देना; और नगरों के चारों ओर की चराइयां भी उन को देना।இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும்.

3 नगर तो उनके रहने के लिये, और चराइयां उनके गाय-बैल और भेड़-बकरी आदि, उनके सब पशुओं के लिये होंगी।அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.

4 और नगरों की चराइयां, जिन्हें तुम लेवियों को दोगे, वह एक एक नगर की शहरपनाह से बाहर चारों ओर एक एक हजार हाथ तक की हों।நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலங்கள் பட்டணத்தின் மதில்தொடங்கி, வெளியிலே சுற்றிலும் ஆயிரமுழ தூரத்துக்கு எட்டவேண்டும்.

5 और नगर के बाहर पूर्व, दक्खिन, पच्छिम, और उत्तर अलंग, दो दो हजार हाथ इस रीति से नापना कि नगर बीचों-बीच हो; लेवियों के एक एक नगर की चराई इतनी ही भूमि की हो।பட்டணம் மத்தியில் இருக்க, பட்டணத்தின் வெளிப்புறந்தொடங்கி, கிழக்கே இரண்டாயிரமுழமும், தெற்கே இரண்டாயிரமுழமும், மேற்கே இரண்டாயிரமுழமும், வடக்கே இரண்டாயிரமுழமும் அளந்துவிடக்கடவீர்கள்; இது அவர்கள் பட்டணங்களுக்கு வெளிநிலங்களாயிருப்பதாக.

6 और जो नगर तुम लेवियों को दोगे उन में से छ: शरणनगर हों, जिन्हें तुम को खूनी के भागने के लिये ठहराना होगा, और उन से अधिक बयालीस नगर और भी देना।நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்துக்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலைசெய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கக்கடவீர்கள்; அவைகளையல்லாமல், நாற்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

7 जितने नगर तुम लेवियों को दोगे वे सब अड़तालीस हों, और उनके साथ चराइयां देना।நீங்கள் லேவியருக்குக் கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே.

8 और जो नगर तुम इस्त्राएलियों की निज भूमि में से दो, वे जिनके बहुत नगर हों उन से बहुत, और जिनके थोड़े नगर हों उनसे थोड़े ले कर देना; सब अपने अपने नगरों में से लेवियों को अपने ही अपने भाग के अनुसार दें॥நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப்பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே தங்கள் பட்டணங்களில் லேவியருக்குக் கொடுக்கக்கடவர்கள் என்றார்.

9 फिर यहोवा ने मूसा से कहा,பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

10 इस्त्राएलियों से कह, कि जब तुम यरदन पार हो कर कनान देश में पहुंचो,நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் பிரவேசிக்கும்போது,

11 तक ऐसे नगर ठहराना जो तुम्हारे लिये शरणनगर हों, कि जो कोई किसी को भूल से मार के खूनी ठहरा हो वह वहां भाग जाए।கைப்பிசகாய் ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள்.

12 वे नगर तुम्हारे निमित्त पलटा लेने वाले से शरण लेने के काम आएंगे, कि जब तक खूनी न्याय के लिये मण्डली के साम्हने खड़ा न हो तब तक वह न मार डाला जाए।கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது.

13 और शरण के जो नगर तुम दोगे वे छ: हों।நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும்.

14 तीन नगर तो यरदन के इस पार, और तीन कनान देश में देना; शरणनगर इतने ही रहें।யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும், அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம்.

15 ये छहों नगर इस्त्राएलियों के और उनके बीच रहने वाले परदेशियों के लिये भी शरणस्थान ठहरें, कि जो कोई किसी को भूल से मार डाले वह वहीं भाग जाए।கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.

16 परन्तु यदि कोई किसी को लोहे के किसी हथियार से ऐसा मारे कि वह मर जाए, तो वह खूनी ठहरेगा; और वह खूनी अवश्य मार डाला जाए।ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.

17 और यदि कोई ऐसा पत्थर हाथ में ले कर, जिस से कोई मर सकता है, किसी को मारे, और वह मर जाए, तो वह भी खूनी ठहरेगा; और वह खूनी अवश्य मार डाला जाए।ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால், கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான், அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

18 वा कोई हाथ में ऐसी लकड़ी ले कर, जिस से कोई मर सकता है, किसी को मारे, और वह मर जाए, तो वह भी खूनी ठहरेगा; और वह खूनी अवश्य मार डाला जाए।ஒருவன் தன் கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.

19 लोहू का पलटा लेने वाला आप ही उस खूनी को मार डाले; जब भी वह मिले तब ही वह उसे मार डाले।பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்றுபோடலாம்.

20 और यदि कोई किसी को बैर से ढकेल दे, वा घात लगाकर कुछ उस पर ऐसे फेंक दे कि वह मर जाए,ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலாயினும், பதுங்கியிருந்து அவன் சாகத்தக்கதாய் அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலாயினும்,

21 वा शत्रुता से उसको अपने हाथ से ऐसा मारे कि वह मर जाए, तो जिसने मारा हो वह अवश्य मार डाला जाए; वह खूनी ठहरेगा; लोहू का पलटा लेने वाला जब भी वह खूनी उसे मिल जाए तब ही उसको मार डाले।அவனைப் பகைத்து, தன் கையினால் அடித்ததினாலாயினும், அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும் பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டமாத்திரத்தில் கொன்றுபோடலாம்.

22 परन्तु यदि कोई किसी को बिना सोचे, और बिना शत्रुता रखे ढकेल दे, वा बिना घात लगाए उस पर कुछ फेंक दे,ஒருவன் பகையொன்றும் இல்லாமல் சடுதியில் ஒருவனைத் தள்ளி விழப்பண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல் யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலாயினும்,

23 वा ऐसा कोई पत्थर ले कर, जिस से कोई मर सकता है, दूसरे को बिना देखे उस पर फेंक दे, और वह मर जाए, परन्तु वह न उसका शत्रु हो, और न उसकी हानि का खोजी रहा हो;அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினையாமலுமிருக்கையில், ஒருவனைக் கொன்றுபோடத்தக்க ஒரு கல்லினால் அவனைக்காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால்,

24 तो मण्डली मारने वाले और लोहू का पलटा लेने वाले के बीच इन नियमों के अनुसार न्याय करे;அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,

25 और मण्डली उस खूनी को लोहू के पलटा लेने वाले के हाथ से बचाकर उस शरणनगर में जहां वह पहिले भाग गया हो लौटा दे, और जब तक पवित्र तेल से अभिषेक किया हुआ महायाजक न मर जाए तब तक वह वहीं रहे।கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.

26 परन्तु यदि वह खूनी उस शरणस्थान के सिवाने से जिस में वह भाग गया हो बाहर निकलकर और कहीं जाए,ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,

27 और लोहू का पलटा लेने वाला उसको शरणस्थान के सिवाने के बाहर कहीं पाकर मार डाले, तो वह लोहू बहाने का दोषी न ठहरे।பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.

28 क्योंकि खूनी को महायाजक की मृत्यु तक शरणस्थान में रहना चाहिये; और महायाजक के मरने के पश्चात वह अपनी निज भूमि को लौट सकेगा।கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.

29 तुम्हारी पीढ़ी पीढ़ी में तुम्हारे सब रहने के स्थानों में न्याय की यह विधि होगी।இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது.

30 और जो कोई किसी मनुष्य को मार डाले वह साक्षियों के कहने पर मार डाला जाए, परन्तु एक ही साक्षी की साक्षी से कोई न मार डाला जाए।எவனாகிலும், ஒரு மனிதனைக் கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது.

31 और जो खूनी प्राणदण्ड के योग्य ठहरे उससे प्राणदण्ड के बदले में जुरमाना न लेना; वह अवश्य मार डाला जाए।சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும்பொருளை வாங்கக் கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.

32 और जो किसी शरणस्थान में भागा हो उसके लिये भी इस मतलब से जुरमाना न लेना, कि वह याजक के मरने से पहिले फिर अपने देश मे रहने को लौटने पाएं।தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக் கூடாது.

33 इसलिये जिस देश में तुम रहोगे उसको अशुद्ध न करना; खून से तो देश अशुद्ध हो जाता है, और जिस देश में जब खून किया जाए तब केवल खूनी के लोहू बहाने ही से उस देश का प्रायश्चित्त हो सकता है।நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

34 जिस देश में तुम निवास करोगे उसके बीच मैं रहूंगा, उसको अशुद्ध न करना; मैं यहोवा तो इस्त्राएलियों के बीच रहता हूं॥நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார்.

Tamil Bible