Proverbs 16 - ORIYA (Tamil)
1 ମନୁଷ୍ଯ କଳ୍ପନା କରେ। କିନ୍ତୁ ନିର୍ଣ୍ଣଯ ସଦାପ୍ରଭୁଙ୍କ ପାଖରୁ ଆ ସେ।மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
2 ଜଣେ ଲୋକ ଭାବେ ସେ ଯାହା କହୁଛି, ତାହା ଠିକ୍। କିନ୍ତୁ ସଦାପ୍ରଭୁ ଆମ୍ଭମାନଙ୍କୁ ପରୀକ୍ଷା କରନ୍ତି।மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
3 ସଦାପ୍ରଭୁଙ୍କଠା ରେ ତୁମ୍ଭର ସମସ୍ତ କାର୍ୟ୍ଯ ସମର୍ପଣ କର। ତବେେ ତୁମ୍ଭେ ସବୁ କାର୍ୟ୍ଯ ରେ ଜଯୟୁକ୍ତ ହବେ।உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
4 ସଦାପ୍ରଭୁ ପ୍ରେତ୍ୟକକ ବିଷଯକୁ ତହିଁର ନିଜ ଉଦ୍ଦେଶ୍ଯ ସାଧନ ନିମନ୍ତେ କରିଅଛନ୍ତି। ସଦାପ୍ରଭୁଙ୍କ ବିଚାର ରେ ଦୁଷ୍ଟମାନେ ବିନାଶ ହବେେ।கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
5 ସଦାପ୍ରଭୁ ସହେିମାନଙ୍କୁ ଘୃଣା କରନ୍ତି, ଯେଉଁମାନେ ଭାବନ୍ତି ସେ ସମସ୍ତଙ୍କଠାରୁ ଶ୍ ରେଷ୍ଠତର। ସଦାପ୍ରଭୁ ଏହିପରି ଗର୍ବୀ ଲୋକମାନଙ୍କୁ ନିଃସନ୍ଦହେ ରେ ଦଣ୍ଡିତ କରିବେ।மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
6 ଦୟା ଓ ସତ୍ଯତା ରେ ପାପର ପ୍ରାଯଶ୍ଚିତ ହୁଏ। ସଦାପ୍ରଭୁ ବିଷଯକ ଭୟ ଦ୍ବାରା ମନୁଷ୍ଯମାନେ କୁକ୍ରିଯା ତ୍ଯାଗ କରନ୍ତି।கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
7 ଯଦି ମଣିଷର ରୀତି କଥାଧାରା ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ତୁଷ୍ଟି କରେ, ସେ ତା'ର ଶତ୍ରୁମାନଙ୍କୁ ତାଙ୍କ ସହିତ ଶାନ୍ତି ରେ ରହିବା ପାଇଁ ବାଧ୍ଯ କରନ୍ତି।ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
8 ଅନ୍ଯାଯ ରେ ପ୍ରଚୁର ରୋଜଗାର, ଧାର୍ମିକତା ରେ ଅଳ୍ପ ରୋଜଗାର ହିଁ ଭଲ ଅଟେ।அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
9 ମନୁଷ୍ଯର ମନ ଆପଣାର ପଥ ବିଷଯ ରେ କଳ୍ପନା କରେ, ମାତ୍ର ସଦାପ୍ରଭୁ ତାହାର ଚାଲିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ କରନ୍ତି।மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
10 ଯେତବେେଳେ ରାଜା ଯାହା କହନ୍ତି ତାହା ନିଯମ ହାଇୟୋଏ। ତେଣୁ ତା'ର ବିଚାର ସ୍ବଚ୍ଛ ହବୋ ଉଚିତ୍।ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.
11 ଓଜନ ଓ ଦଣ୍ଡି ସଦାପ୍ରଭୁଙ୍କର ଅଟେ, କିନ୍ତୁ ସଦାପ୍ରଭୁ ଯାହା ଓଜନ ପାଇଁ ବ୍ଯବହାର କରିବାକୁ ବଟକରାସବୁ ତିଆରି କଲେ।சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
12 କୁକର୍ମ କରିବା ରାଜାଙ୍କ ନିମନ୍ତେ ଘୃଣାର ବିଷଯ, ଯେ ହତେୁ ଧାର୍ମିକତା ରେ ସିଂହାସନ ସ୍ଥିରୀକୃତ ହୁଏ।அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
13 ଧର୍ମୟୁକ୍ତ କଥା ରାଜାଙ୍କ ପାଇଁ ତୁଷ୍ଟିକର। ସମାନେେ ଯଥାର୍ଥ କରନ୍ତି ଯେଉଁମାନେ ପ୍ ରମେ କରନ୍ତି।நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
14 ରାଜାଙ୍କର କୋରଧ ମୃତ୍ଯୁର ଦୂତପରି। ମାତ୍ର ଜ୍ଞାନୀଲୋକ ତାହା ଶାନ୍ତ କରେ।ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
15 ରାଜାର ପ୍ରସନ୍ନ ବଦନ ରେ ଜୀବନ ଥାଏ। ତାଙ୍କର ଅନୁଗ୍ରହ ଶଷେ ବର୍ଷାର ମେଘସ୍ବରୂପ।ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
16 ସୁନା ଅପେକ୍ଷା ଜ୍ଞାନଲାଭ କରିବା ଉତ୍ତମ। ସୁବିବଚେନା ପାଇବା ରୂପାଠାରୁ ଅଧିକ ମୂଲ୍ଯବାନ।பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
17 ଧାର୍ମିକ ଲୋକମାନଙ୍କର ଚଳଣି ଅଧର୍ମର ବହୁତ ଦୂର ରେ। ଯେଉଁ ଲୋକ ଆପଣା ପଥ ଜଗି ଚାଲେ, ସେ ଆପଣା ପ୍ରାଣ ରକ୍ଷା କରେ।தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
18 ଅହଙ୍କାର ସର୍ବନାଶର ସମ୍ମୁଖ ରେ ଆ ସେ ଏବଂ ଅହଙ୍କାରୀ ପ୍ରକୃତି ପତନର ସମ୍ମୁଖ ରେ ଆ ସେ।அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
19 ଅହଙ୍କାରୀମାନଙ୍କ ସହିତ ଲୁଟିତ ଦ୍ରବ୍ଯ ଭାଗ କରିବା ଅପେକ୍ଷା ଦରିଦ୍ରତାର ସହିତ ନମ୍ର ହବୋ ଭଲ।அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
20 ଯେଉଁ ଲୋକ ପରମେଶ୍ବରଙ୍କ ବାକ୍ଯ ରେ ମନୋୟୋଗ କରେ, ସେ ସାଫଲ୍ଯ ଅର୍ଜନ କରେ। ପୁଣି ସହେି ଲୋକ ଧନ୍ଯ ଯେ ସଦାପ୍ରଭୁଙ୍କଠା ରେ ନିର୍ଭର କରେ।விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
21 କିଏ ଜ୍ଞାନୀ ବା ବୁଦ୍ଧିମାନ, ଲୋକମାନେ ଜାଣିପାରିବେ। ବାକ୍ଯର ମିଷ୍ଟତା ପାଣ୍ଡିତ୍ଯ ବଢ଼ାଏ।இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
22 ସଦବୁଦ୍ଧି ପାଇଥିବା ଲୋକ ଜୀବନର ଝର ସ୍ବରୂପ ଅଟେ। ମାତ୍ର ଅଜ୍ଞାନତା ଅଜ୍ଞାନମାନଙ୍କର ଶାସ୍ତି।புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
23 ଜ୍ଞାନବାନର ହୃଦଯ ଆପଣା ମୁଖକୁ ଶିକ୍ଷା ଦିଏ। ପୁଣି ତା'ର ବାକ୍ଯ ପାଣ୍ଡିତ୍ଯ ବଢ଼ାଏ।ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
24 ଦୟାପୂର୍ଣ୍ଣ କଥା ମହୁପରି ଅଟେ। ଏହାକୁ ଗ୍ରହଣ କରିବା ସହଜ ଏବଂ ସ୍ବାସ୍ଥ୍ଯ ପାଇଁ ଉତ୍ତମ।இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்.
25 ମନୁଷ୍ଯର ଦୃଷ୍ଟି ରେ ଯେଉଁ ପଥ ସରଳ ଦିଶେ କିନ୍ତୁ ତାହା ମୃତ୍ଯୁ ରେ ହିଁ ଶଷେ ହୁଏ।மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
26 ପରିଶ୍ରମକାତର କ୍ଷୁଧା ତାକୁ ପରିଶ୍ରମ କରିବାକୁ ବାଧ୍ଯ କରେ। ତା'ର ଭୋକିଲା ପାଟି କଠିନ ପରିଶ୍ରମ ପାଇଁ ଅଭିୟାନ କରନ୍ତି।பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
27 ପାପାଧାମ ଲୋକ ଅନିଷ୍ଟ କଳ୍ପନା କରେ। ଏବଂ ତାହାର ବାକ୍ଯଗୁଡ଼ିକ ଅଗ୍ନିପରି ଜଳେ।பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
28 କୁଟିଳ ମନୁଷ୍ଯ ବିବାଦ ବୁଣେ। କାନକୁହା ଲୋକମାନେ ବନ୍ଧୁତ୍ବ ନଷ୍ଟ କରନ୍ତି।மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
29 ଅତ୍ଯାଚାରୀ ଆପଣା ମିତ୍ରଗଣକୁ ଭୁଲିୟାଏ। ଏବଂ ପ୍ରତିବେଶୀକୁ କୁପଥରେ କଢ଼ାଇ ନିଏ।கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
30 ଯେଉଁ ଲୋକ ଆପଣା ଆଖି ମିଞ୍ଜି ମିଞ୍ଜି କରେ, ସେ କୁଟିଳ ବିଷଯ କଳ୍ପନା କରେ, ଏବଂ ଯେ ଆପଣା ଓଷ୍ଠ ଜାବୁଡ଼ି ଧ ରେ, ମନ୍ଦକର୍ମ ସିଦ୍ଧ କରୁଥାଏ।அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
31 ପାଚିଲା କେଶ ଶାେଭାଜନକ ମୁକୁଟ। ତାହା ଧର୍ମ ପଥରେ ପ୍ରାପ୍ତ ହୁଏ।நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
32 ଯେ କୋରଧ ରେ ଧୀର, ସେ ବୀର ଅପେକ୍ଷା ଶ୍ ରେଷ୍ଠ। ପୁଣି ଯେ ଆପଣା ଆତ୍ମା ଉପ ରେ କତ୍ତୃର୍ତ୍ବ କରେ, ସେ ନଗର ବିଜଯୀଠାରୁ ଭଲ।பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
33 ନିଷ୍ପତ୍ତି ପାଇଁ ଗୁଳିବାଣ୍ଟ ପଡ଼େ, କିନ୍ତୁ ନିଷ୍ପତ୍ତି ସଦାପ୍ରଭୁଙ୍କଠାରୁ ଆ ସେ।சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
Tamil Bible