Psalm 139 - ORIYA (Tamil)
1 ହେ ସଦାପ୍ରଭୁ, ତୁମ୍ଭେ ମାେତେ ପରୀକ୍ଷା କରିଅଛ। ତୁମ୍ଭେ ମାରେ ସମସ୍ତ ବିଷଯରେ ଜାଣିଅଛ।கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
2 ତୁମ୍ଭେ ଜାଣ ଯେତବେେଳେ ମୁଁ ବସେ ଏବଂ ଯେତବେେଳେ ମୁଁ ଛିଡ଼ା ହୁଏ। ୟଦିଓ ତୁମ୍ଭେ ଦୂରରେ ଅଛ, ତୁମ୍ଭେ ମାରେ ମନକଥା ଜାଣ।என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
3 ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭେ ଜାଣ, ମୁଁ କେଉଁଠାକୁ ୟାଏ ଏବଂ କେତବେେଳେ ମୁଁ ତଳେ ପଡ଼େ। ମୁଁ ୟାହା କିଛି କରୁଛି ତାହାସବୁ ତୁମ୍ଭେ ଜାଣ।நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
4 ହେ ସଦାପ୍ରଭୁ, ମାେ ମୁହଁରୁ ଶବ୍ଦ ବାହାରିବା ପୂର୍ବରୁ ତୁମ୍ଭେ ଜାଣ ୟେ, ମୁଁ କ'ଣ କହିବାକୁ ଯାଉଛି।என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
5 ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭେ ମାରେ ଚତୁପାଶର୍ବରେ ଅଛ, ମାେ ଆଗରେ ଓ ପଛରେ ଅଛ। ତୁମ୍ଭେ ଆପଣା ସୁରକ୍ଷାର ହାତ ମାେ ଉପରେ ରଖିଥାଅ।முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
6 ମୁଁ ଆଶ୍ଚର୍ୟ୍ଯ ହୁଏ ୟେ, ତୁମ୍ଭେ ୟାହାସବୁ ଜାଣ। ମୁଁ ତାକୁ ବୁଝିପାରେ ନାହିଁ।இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.
7 ମୁଁ ୟୁଆଡ଼େ ୟାଏ, ତୁମ୍ଭର ଆତ୍ମା ସବୁଠାରେ ଥାଏ। ମୁଁ ତୁମ୍ଭର ଉପସ୍ଥିତିରୁ ଖସିୟାଇ ପାରିବି ନାହିଁ।உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்?
8 ହେ ସଦାପ୍ରଭୁ ୟଦି ମୁଁ ସ୍ବର୍ଗକୁ ୟାଏ ତବେେ ତୁମ୍ଭେ ସଠାେରେ ଥାଅ। ୟଦି ମୁଁ ପାତାଳକୁ ୟାଏ, ତବେେ ସଠାେରେ ମଧ୍ଯ ତୁମ୍ଭେ ଅଛ।நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
9 ସଦାପ୍ରଭୁ ମୁଁ ୟଦି ପୂର୍ବକୁ ୟାଏଁ ଯେଉଁଠାରେ ସୂର୍ୟ୍ଯ ଉଦଯ ହେଉଅଛି। ୟଦି ମୁଁ ପଶ୍ଚିମରେ ସମୁଦ୍ରର ପ୍ରାନ୍ତ ସୀମାକୁ ୟାଏ,நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
10 ସଠାେରେ ମଧ୍ଯ ତୁମ୍ଭର ହସ୍ତ ମାେତେ ଆଗକୁ ନଇେଥାନ୍ତା ଏବଂ ତୁମ୍ଭର ଦକ୍ଷିଣ ହସ୍ତ ହୁଏତ ମାେତେ ଧରିଥାନ୍ତା।அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
11 ହେ ସଦାପ୍ରଭୁ, ମୁଁ ତୁମ୍ଭଠାରୁ ଲୁଚିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରି କୁ ହେ, ୟଦି ରାତ୍ରି ଦିନରେ ପରିଣତ ହେଲା ତବେେ ଅନ୍ଧକାର ନିଶ୍ଚିତ ଭାବରେ ମାେତେ ଆଚ୍ଛାଦନ କରିବ।இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.
12 କିନ୍ତୁ ସଦାପ୍ରଭୁ, ଏପରିକି ଅନ୍ଧକାର ତୁମ୍ଭପାଇଁ ଅନ୍ଧକାର ନୁହେଁ। ରାତ୍ରି ହେଉଛି ଦିନ ଭଳି ଉଜ୍ଜ୍ବଳ। ଅନ୍ଧକାର ଏବଂ ଉଜ୍ଜ୍ବଳ ହେଉଛି ତୁମ୍ଭ ପାଇଁ ସମାନ।உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.
13 ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭେ ମାରେ ସମଗ୍ର ଅଂଶକୁ ତିଆରି କଲ। ତୁମ୍ଭେ ମାେତେ ମାେ ମାତୃ ଗର୍ଭରେ ସମସ୍ତ ଶରୀର ସହିତ ରଖିଲ।நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
14 ହେ ସଦାପ୍ରଭୁ, ମୁଁ ତୁମ୍ଭକୁ ଧନ୍ଯବାଦ ଦିଏ କାରଣ ତୁମ୍ଭେ ମାେତେ ଏଭଳି ଏକ ଆଶ୍ଚର୍ୟ୍ଯଜନକ ପଥରେ ତିଆରି କରିଅଛ। ମୁଁ ଭଲ ଭାବରେ ଜାଣେ ୟେ, ତୁମ୍ଭର କାମ ଅଦ୍ଭୁତ ଅଟେ।நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
15 ଯେତବେେଳେ ମୁଁ ନିଜ ମାତୃ ଗର୍ଭରେ ଥିଲି, ଯେତବେେଳେ ମାରେ ଗଠିତ ହେଉଥିଲା, ସେତବେେଳେ ତୁମ୍ଭେ ମାରେ ଅସ୍ଥି ପିଞ୍ଜରାକୁ ଦେଖିଲ।நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.
16 ତୁମ୍ଭେ ପ୍ରେତ୍ୟକକ ଦିନ ମାରେ ଶରୀରର ବୃଦ୍ଧିକୁ ମାରେ ମାତୃଗର୍ଭରେ ଦେଖିଲ। ତୁମ୍ଭ ପ୍ରେତ୍ୟକକ ଅଙ୍ଗ ପ୍ରତ୍ଯଙ୍ଗକୁ ମାେ ତାଲିକାଭୁକ୍ତ କଲ ଏବଂ ସଗେୁଡ଼ିକ ମଧ୍ଯରୁ ଗୋଟିଏ ହେଲେ ବି ବାଦ୍ ଦଇେ ନାହଁ।என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
17 ପରମେଶ୍ବର, ତୁମ୍ଭର ଚିନ୍ତାଧାରା ମାେ ପାଇଁ ବୁଝିବା କଷ୍ଟକର ଅଟେ। ତହିଁରେ ସଗେୁଡ଼ିକ ଗଣନା କରାୟାଇ ପାରିବ ନାହିଁ।தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
18 ତୁମ୍ଭେ ୟାହା କିଛି ଜାଣ, ସେ ସବୁକୁ ୟଦି ମୁଁ ଗଣିପାରୁଥା'ନ୍ତି, ତା' ହେଲେ ସେ ସବୁ ପୃଥିବୀର ଧୂଳିକଣାଠାରୁ ଅଧିକ ହବେ, କିନ୍ତୁ ୟଦି ମୁଁ ତାହା ଗଣିପାରିବି, ତା' ହେଲେ ମୁଁ ତୁମ୍ଭକୁ ଏପର୍ୟ୍ଯନ୍ତ ସମ୍ପୂର୍ଣ୍ଣଭାବରେ ବୁଝି ପାରିଥା'ନ୍ତି।அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.
19 ହେ ପରମେଶ୍ବର, ଦୁଷ୍ଟ ଲୋକମାନଙ୍କୁ ହତ୍ଯା କର। ହେ ହତ୍ଯାକାରୀଗଣ, ମାଠାରୁେ ତୁମ୍ଭେ ଦୂରଇେ ୟାଅ।தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
20 ସହେି ଦୁଷ୍ଟ ଲୋକମାନେ ତୁମ୍ଭ ବିଷଯରେ ଖରାପ ମନ୍ତବ୍ଯ ଦେଉଛନ୍ତି। ତୁମ୍ଭର ଶତ୍ରୁମାନେ ତୁମ୍ଭର ନାମକୁ ଭୁଲ୍ ଭାବରେ ବ୍ଯବହାର କରନ୍ତି।அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.
21 ହେ ସଦାପ୍ରଭୁ, ଯେଉଁମାନେ ତୁମ୍ଭକୁ ଘୃଣା କରନ୍ତି, ମୁଁ ସହେି ଲୋକମାନଙ୍କୁ ଘୃଣା କରେ। ଯେଉଁମାନେ ତୁମ୍ଭ ବିରୁଦ୍ଧରେ ୟାଆନ୍ତି, ସହେି ଲୋକମାନେ ମାରେ ଶତ୍ରୁ।கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
22 ମୁଁ ସମାନଙ୍କେୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଘୃଣା କରେ। ତୁମ୍ଭର ଶତ୍ରୁ ମଧ୍ଯ ମାରେ ଶତ୍ରୁ ଅଟନ୍ତି।முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.
23 ପରମେଶ୍ବର, ମାେ ପ୍ରତି ଦୃଷ୍ଟି ଦିଅ ଏବଂ ମାରେ ମନ କଥା ପଢ଼। ମାେତେ ପରୀକ୍ଷା କର ଏବଂ ମାେ ହୃଦଯକୁ ଜାଣ।தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
24 ଏହା ନିଶ୍ଚିତ କର ୟେ, ମୁଁ କୌଣସି ଦୁଷ୍ଟତାର ବାଟରେ ୟାଇ ନାହିଁ। ମାେତେ ସହେି ବାଟରେ ଆଗଇେ ନିଅ, ୟାହା ସବୁଦିନ ପାଇଁ ସତ୍ଯ ହାଇେଅଛି।வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.
Tamil Bible