Psalm 143 - ASV (Tamil)

1 Hear my prayer, O Jehovah; give ear to my supplications: In thy faithfulness answer me, `and' in thy righteousness.கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.

2 And enter not into judgment with thy servant; For in thy sight no man living is righteous.ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.

3 For the enemy hath persecuted my soul; He hath smitten my life down to the ground: He hath made me to dwell in dark places, as those that have been long dead.சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.

4 Therefore is my spirit overwhelmed within me; My heart within me is desolate.என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.

5 I remember the days of old; I meditate on all thy doings; I muse on the work of thy hands.பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.

6 I spread forth my hands unto thee: My soul `thirsteth' after thee, as a weary land. Selahஎன் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)

7 Make haste to answer me, O Jehovah; my spirit faileth: Hide not thy face from me, Lest I become like them that go down into the pit.கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.

8 Cause me to hear thy lovingkindness in the morning; For in thee do I trust: Cause me to know the way wherein I should walk; For I lift up my soul unto thee.அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

9 Deliver me, O Jehovah, from mine enemies: I flee unto thee to hide me.கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.

10 Teach me to do thy will; For thou art my God: Thy Spirit is good; Lead me in the land of uprightness.உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

11 Quicken me, O Jehovah, for thy name's sake: In thy righteousness bring my soul out of trouble.கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.

12 And in thy lovingkindness cut off mine enemies, And destroy all them that afflict my soul; For I am thy servant. Psalm 144 `A Psalm' of David.உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.

Tamil Bible