Psalm 54 - DBY (Tamil)

1 {To the chief Musician. On stringed instruments: an instruction. Of David; when the Ziphites came, and said to Saul, Is not David hiding himself with us?} O God, by thy name save me, and by thy strength do me justice.தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.

2 O God, hear my prayer; give ear to the words of my mouth.தேவனே, என் விண்ணப்பத்தைக்கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.

3 For strangers are risen up against me, and the violent seek after my life: they have not set God before them. Selah.அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.)

4 Behold, God is my helper; the Lord is among them that uphold my soul.இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.

5 He will requite evil to mine enemies: in thy truth cut them off.அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.

6 I will freely sacrifice unto thee; I will praise thy name, O Jehovah, because it is good.உற்சாகத்துடன் நான் உமக்குப்பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.

7 For he hath delivered me out of all trouble; and mine eye hath seen [its desire] upon mine enemies.அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.

Tamil Bible