1 ⁽என் கடவுளே! என்␢ எதிரிகளினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து␢ எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.⁾

2 ⁽தீமை செய்வோரிடமிருந்து␢ எனக்கு விடுதலை அளித்தருளும்;␢ கொலைவெறியரிடமிருந்து␢ என்னைக் காத்தருளும்.⁾

3 ⁽ஏனெனில், அவர்கள் என்னைக்␢ கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்;␢ கொடியவர் என்னைத் தாக்கத்␢ திட்டமிட்டுள்ளனர்;␢ நானோ, ஆண்டவரே!␢ குற்றம் ஏதும் இழைக்கவில்லை;␢ பாவம் ஏதும் செய்யவில்லை;⁾

4 ⁽என்னிடம் குற்றமில்லாதிருந்தும்,␢ அவர்கள் ஓடிவந்து␢ என்னைத் தாக்க முனைகின்றனர்;␢ என்னை எதிர்கொள்ளுமாறு␢ எழுந்தருளும்;␢ என்னைக் கண்ணோக்கும்,⁾

5 ⁽படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் இஸ்ரயேலின் கடவுள்!␢ பிற இனத்தார் அனைவரையும்␢ தண்டிக்க எழுந்துவாரும்;␢ தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள்␢ எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா)⁾

6 ⁽அவர்கள் மாலைவரை காத்திருந்து,␢ அதன்பின் நாய்களைப் போலக்␢ குரைத்து கொண்டு␢ நகரினுள் சுற்றித் திரிகின்றனர்.⁾

7 ⁽அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்; § அவர்களின் நாவின் சொற்கள்␢ வாள் போன்றவை;␢ ‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர்␢ யார்?’ என்கின்றார்கள்.⁾

8 ⁽ஆனால், ஆண்டவரே,␢ நீர் அவர்களைப் பார்த்து␢ எள்ளி நகைக்கின்றீர்;␢ பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து␢ நீர் ஏளனம் செய்கின்றீர்;⁾

9 ⁽நீரே என் ஆற்றல்! உமது உதவியை␢ எதிர்பார்க்கின்றேன்;␢ ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.⁾

10 ⁽என் கடவுள் தமது பேரன்பால்␢ என்னை எதிர்கொள்ள வருவார்;␢ கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை␢ நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.⁾

11 ⁽அவர்களை ஒரேயடியாய்க்␢ கொன்று விடாதேயும்;␢ இல்லையேல், உம் வல்லமையை␢ என் மக்கள் மறந்துவிடுவர்;␢ என் தலைவரே! எங்கள் கேடயமே!␢ அவர்களை உமது வலிமையால்␢ நிலைகுலையச் செய்யும்.⁾

12 ⁽அவர்களின் வாய் பேசுவதும்␢ நா உரைப்பதும் பாவமே;␢ அவர்கள் தற்பெருமை␢ அவர்களைச் சிக்கவைப்பதாக!␢ அவர்கள் சபிக்கின்றனர்;␢ அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்.⁾

13 ⁽ஆகவே, வெகுண்டெழுந்து␢ அவர்களை அழித்துவிடும்;␢ இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்;␢ அப்பொழுது, கடவுள்␢ யாக்கோபின் மரபினரை␢ ஆள்கின்றார் எனவும்␢ அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும்␢ உள்ளது எனவும் அவர்கள்␢ உணர்ந்து கொள்வார்கள். (சேலா)⁾

14 ⁽அவர்கள் மாலைவரை காத்திருந்து,␢ அதன்பின், நாய்களைப்போல␢ குரைத்துக் கொண்டு␢ நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள்.⁾

15 ⁽அவர்கள் இரைதேடி அலைகின்றனர்;␢ வயிறு நிறையாவிடில்,␢ முறுமுறுக்கின்றனர்.⁾

16 ⁽நானோ உமது ஆற்றலைப்␢ புகழ்ந்து பாடுவேன்;␢ காலையில் உமது பேரன்பைப் பற்றி␢ ஆர்ப்பரித்துப் பாடுவேன்;␢ ஏனெனில், நெருக்கடியான வேளையில்␢ நீர் எனக்கு அரணும்␢ அடைக்கலமுமாய் இருந்தீர்.⁾

17 ⁽என் ஆற்றல் நீரே!␢ உம்மைப் போற்றிப் பாடுவேன்;␢ ஏனெனில், கடவுள் எனக்கு அரண்;␢ கடவுளே எனக்குப் பேரன்பு!⁾

சங்கீதம் 59 ERV IRV TRV