Psalm 60 - ASV (Tamil)
1 O God thou hast cast us off, thou hast broken us down; Thou hast been angry; oh restore us again.தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
2 Thou hast made the land to tremble; thou hast rent it: Heal the breaches thereof; for it shaketh.பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.
3 Thou hast showed thy people hard things: Thou hast made us to drink the wine of staggering.உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
4 Thou hast given a banner to them that fear thee, That it may be displayed because of the truth. Selahசத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)
5 That thy beloved may be delivered, Save with thy right hand, and answer us.உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.
6 God hath spoken in his holiness: I will exult; I will divide Shechem, and mete out the valley of Succoth.தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
7 Gilead is mine, and Manasseh is mine; Ephraim also is the defence of my head; Judah is my sceptre.கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.
8 Moab is my washpot; Upon Edom will I cast my shoe: Philistia, shout thou because of me.மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.
9 Who will bring me into the strong city? Who hath led me unto Edom?அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?
10 Hast not thou, O God, cast us off? And thou goest not forth, O God, with our hosts.எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவோ?
11 Give us help against the adversary; For vain is the help of man.இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
12 Through God we shall do valiantly; For he it is that will tread down our adversaries. Psalm 61 For the Chief Musician; on a stringed instrument. `A Psalm' of David.தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
Tamil Bible