Psalm 60 - DBY (Tamil)

1 {To the chief Musician. On Shushan. Testimony. Michtam of David; to teach: when he strove with the Syrians of Mesopotamia, and the Syrians of Zobah, and Joab returned, and smote the Edomites in the valley of salt, twelve thousand.} O God, thou hast cast us off, thou hast scattered us, thou hast been displeased: restore us again.தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

2 Thou hast made the earth to tremble, thou hast rent it: heal the breaches thereof; for it shaketh.பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.

3 Thou hast shewn thy people hard things; thou hast made us to drink the wine of bewilderment.உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

4 Thou hast given a banner to them that fear thee, that it may be displayed because of the truth, (Selah,)சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)

5 That thy beloved ones may be delivered. Save with thy right hand, and answer me.உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.

6 God hath spoken in his holiness: I will exult, I will divide Shechem, and mete out the valley of Succoth.தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

7 Gilead is mine, and Manasseh is mine, and Ephraim is the strength of my head; Judah is my law-giver;கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

8 Moab is my wash-pot; upon Edom will I cast my sandal; Philistia, shout aloud because of me.மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

9 Who will bring me into the strong city? who will lead me unto Edom?அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?

10 [Wilt] not thou, O God, who didst cast us off? and didst not go forth, O God, with our armies?எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவோ?

11 Give us help from trouble; for vain is man's deliverance.இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.

12 Through God we shall do valiantly; and he it is that will tread down our adversaries.தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

Tamil Bible