Psalm 60 - YLT (Tamil)

1 To the Overseer. -- `Concerning the Lily of Testimony,' a secret treasure of David, to teach, in his striving with Aram-Naharaim, and with Aram-Zobah, and Joab turneth back and smiteth Edom in the valley of Salt -- twelve thousand. O God, Thou hadst cast us off, Thou hadst broken us -- hadst been angry! -- Thou dost turn back to us.தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

2 Thou hast caused the land to tremble, Thou hast broken it, Heal its breaches, for it hath moved.பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.

3 Thou hast shewn Thy people a hard thing, Thou hast caused us to drink wine of trembling.உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

4 Thou hast given to those fearing thee an ensign. To be lifted up as an ensign Because of truth. Selah.சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)

5 That Thy beloved ones may be drawn out, Save `with' Thy right hand, and answer us.உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.

6 God hath spoken in His holiness: I exult -- I apportion Shechem, And the valley of Succoth I measure,தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

7 Mine `is' Gilead, and mine `is' Manasseh, And Ephraim `is' the strength of my head, Judah `is' my lawgiver,கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

8 Moab `is' my pot for washing, over Edom I cast my shoe, Shout, concerning me, O Philistia.மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

9 Who doth bring me `to' a city of bulwarks? Who hath led me unto Edom?அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?

10 Is it not Thou, O God? hast Thou cast us off? And dost Thou not go forth, O God, with our hosts!எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவோ?

11 Give to us help from adversity, And vain `is' the deliverance of man.இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.

12 In God we do mightily, And He treadeth down our adversaries!தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

Tamil Bible