Psalm 69 - BBE (Tamil)

1 <To the chief music-maker; put to Shoshannim. Of David.> Be my saviour, O God; because the waters have come in, even to my neck.தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.

2 My feet are deep in the soft earth, where there is no support; I have come into deep waters, the waves are flowing over me.ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.

3 I am tired with my crying; my throat is burning: my eyes are wasted with waiting for my God.நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.

4 Those who have hate for me without cause are greater in number than the hairs of my head; those who are against me, falsely desiring my destruction, are very strong; I gave back what I had not taken away.நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.

5 O God, you see how foolish I am; and my wrongdoing is clear to you.தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.

6 Let not those who have hope in you be put to shame because of me, O Lord God of armies: let not those who are waiting for you be made low because of me, O God of Israel.சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக.

7 I have been wounded with sharp words because of you; my face has been covered with shame.உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.

8 I have become strange to my brothers, and like a man from a far country to my mother's children.என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.

9 I am on fire with passion for your house; and the hard things which are said about you have come on me.உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

10 My bitter weeping, and my going without food, were turned to my shame.என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.

11 When I put on the clothing of grief, they said evil of me.இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்கு பழமொழியானேன்.

12 I am a cause of wonder to those in authority; a song to those who are given to strong drink.வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானேன்.

13 But as for me, let my prayer be made to you, O Lord, at a time when you are pleased; O God, give me an answer in your great mercy, for your salvation is certain.ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.

14 Take me from the grip of the sticky earth, so that I may not go down into it; let me be lifted up from the deep waters.நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.

15 Let me not be covered by the flowing waters; let not the deep waters go over my head, and let me not be shut up in the underworld.ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

16 Give an answer to my words, O Lord; for your mercy is good: be turned to me, because of your great pity.கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.

17 Let not your face be covered from your servant, for I am in trouble; quickly give me an answer.உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.

18 Come near to my soul, for its salvation: be my saviour, because of those who are against me.நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.

19 You have seen my shame, how I was laughed at and made low; my haters are all before you.தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

20 My heart is broken by bitter words, I am full of grief; I made a search for some to have pity on me, but there was no one; I had no comforter.நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன் ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.

21 They gave me poison for my food; and bitter wine for my drink.என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.

22 Let their table before them be for their destruction; let their feasts become a net to take them.அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.

23 Let their eyes be blind so that they may not see; let their bodies for ever be shaking.அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.

24 Let your curse come on them; let the heat of your wrath overtake them.உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.

25 Give their houses to destruction, and let there be no one in their tents.அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.

26 Because they are cruel to him against whom your hand is turned; they make bitter the grief of him who is wounded by you.தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.

27 Let their punishment be increased; let them not come into your righteousness.அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.

28 Let their names be taken from the book of the living, let them not be numbered with the upright.ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.

29 But I am poor and full of sorrow; let me be lifted up by your salvation, O Lord.நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

30 I will give praise to the name of God with a song; I will give glory to him for what he has done.தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.

31 This will be more pleasing to the Lord than an ox, or a young ox of full growth.கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.

32 The poor will see it and be glad: you who are lovers of God, let your hearts have life.சாந்தகுணமுள்ளவர்கள் இதைக்கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.

33 For the ears of the Lord are open to the poor, and he takes thought for his prisoners.கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.

34 Let the heavens and the earth give praise to him, the seas, and everything moving in them.வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.

35 For God will be the saviour of Zion, and the builder of the towns of Judah; so that it may be their resting-place and heritage.தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

36 The seed of his servants will have their part in it, and there the lovers of his name will have rest.அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.

Tamil Bible