Psalm 72 - TELUGU (Tamil)
1 దేవా, రాజునకు నీ న్యాయవిధులను రాజకుమారునికి నీ నీతిని తెలియజేయుము.தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
2 నీతినిబట్టి నీ ప్రజలకును న్యాయవిధులనుబట్టి శ్రమ నొందిన నీ వారికిని అతడు న్యాయము తీర్చును.அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
3 నీతినిబట్టి పర్వతములును చిన్నకొండలును ప్రజలకు నెమ్మది పుట్టించును.பர்வதங்Εள் ஜனத்திற்க`Κ் சமாதானத்தψத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.
4 ప్రజలలో శ్రమనొందువారికి అతడు న్యాయము తీర్చును బీదల పిల్లలను రక్షించి బాధపెట్టువారిని నలగగొట్టును.ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
5 సూర్యుడు నిలుచునంత కాలము చంద్రుడు నిలుచునంతకాలము తరములన్నిటను జనులు నీయందు భయభక్తులు కలిగియుందురు.சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
6 గడ్డికోసిన బీటిమీద కురియు వానవలెను భూమిని తడుపు మంచి వర్షమువలెను అతడు విజ యము చేయును.புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
7 అతని దినములలో నీతిమంతులు వర్ధిల్లుదురు చంద్రుడు లేకపోవువరకు క్షేమాభివృద్ధి కలుగును.அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
8 సముద్రమునుండి సముద్రమువరకు యూఫ్రటీసునది మొదలుకొని భూదిగంతములవరకు అతడు రాజ్యము చేయును.சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
9 అరణ్యవాసులు అతనికి లోబడుదురు. అతని శత్రువులు మన్ను నాకెదరు.வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.
10 తర్షీషు రాజులు ద్వీపముల రాజులు కప్పము చెల్లించె దరు షేబరాజులును సెబారాజులును కానుకలు తీసికొని వచ్చెదరు.தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
11 రాజులందరు అతనికి నమస్కారము చేసెదరు. అన్యజనులందరు అతని సేవించెదరు.சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
12 దరిద్రులు మొఱ్ఱపెట్టగా అతడు వారిని విడిపించును. దీనులను నిరాధారులను అతడు విడిపించును.கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
13 నిరుపేదలయందును బీదలయందును అతడు కనిక రించును బీదల ప్రాణములను అతడు రక్షించునుபலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
14 కపట బలాత్కారములనుండి అతడు వారి ప్రాణ మును విమోచించును. వారి ప్రాణము అతని దృష్టికి ప్రియముగా ఉండును.அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.
15 అతడు చిరంజీవియగును, షేబ బంగారము అతనికి ఇయ్యబడును. అతని క్షేమమునకై జనులు నిత్యము ప్రార్థన చేయు దురు దినమంతయు అతని పొగడుదురు.அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
16 దేశములోను పర్వత శిఖరములమీదను సస్య సమృద్ధి కలుగును దాని పంట లెబానోను వృక్షములవలె తాండవమాడు చుండును నేలమీది పచ్చికవలె పట్టణస్థులు తేజరిల్లుదురు.பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.
17 అతని పేరు నిత్యము నిలుచును అతని నామము సూర్యుడున్నంతకాలము చిగుర్చు చుండును అతనినిబట్టి మనుష్యులు దీవింపబడుదురు అన్యజనులందరును అతడు ధన్యుడని చెప్పుకొందురు.அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.
18 దేవుడైన యెహోవా ఇశ్రాయేలుయొక్క దేవుడు స్తుతింపబడును గాక ఆయన మాత్రమే ఆశ్చర్యకార్యములు చేయువాడు.இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
19 ఆయన మహిమగల నామము నిత్యము స్తుతింపబడును గాక సర్వభూమియు ఆయన మహిమతో నిండియుండును గాక. ఆమేన్ . ఆమేన్.அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
20 యెష్షయి కుమారుడగు దావీదు ప్రార్థనలు ముగిసెను.ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
Tamil Bible