Psalm 88 - WEB (Tamil)
1 > Yahweh, the God of my salvation, I have cried day and night before you.என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2 Let my prayer enter into your presence. Turn your ear to my cry.என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
3 For my soul is full of troubles. My life draws near to Sheol.என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
4 I am counted among those who go down into the pit. I am like a man who has no help,நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப் போலானேன்.
5 Set apart among the dead, Like the slain who lie in the grave, Whom you remember no more. They are cut off from your hand.மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப் போலானேன்.
6 You have laid me in the lowest pit, In the darkest depths.என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
7 Your wrath lies heavily on me. You have afflicted me with all your waves. Selah.உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகளெல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)
8 You have taken my friends from me. You have made me an abomination to them. I am confined, and I can't escape.எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.
9 My eyes are dim from grief. I have called on you daily, Yahweh. I have spread out my hands to you.துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.
10 Do you show wonders to the dead? Do the dead rise up and praise you? Selah.மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
11 Is your loving kindness declared in the grave? Or your faithfulness in Destruction?பிரேதக்குழியில் உமது கிருபையும் அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
12 Are your wonders made known in the dark? Or your righteousness in the land of forgetfulness?இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
13 But to you, Yahweh, I have cried. In the morning, my prayer comes before you.நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
14 Yahweh, why do you reject my soul? Why do you hide your face from me?கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
15 I am afflicted and ready to die from my youth up. While I suffer your terrors, I am distracted.சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
16 Your fierce wrath has gone over me. Your terrors have cut me off.உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.
17 They came around me like water all day long. They completely engulfed me.அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது.
18 You have put lover and friend far from me, And my friends into darkness.சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.
Tamil Bible