2 யோவான் 1

fullscreen1 நமக்குள் நிலைநிற்கிறதும், என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும்,

fullscreen2 தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது,

fullscreen3 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட உங்களோடிருப்பதாக.

fullscreen4 பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு; மிகவும் சந்தோஷப்பட்டேன்.

fullscreen5 இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.

fullscreen6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.

fullscreen7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

fullscreen8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

fullscreen9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

fullscreen10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.

fullscreen11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.

fullscreen12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.

fullscreen13 தெரிந்துகொள்ளப்பட்ட நம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்

Tamil Indian Revised Version
சவுல் பெலிஸ்தர்களை பின்தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தர்களும் தங்கள் இடத்திற்குப் போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
சவுல் பெலிஸ்தர்களைத் துரத்தாததால் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குப் போனார்கள்.

Thiru Viviliam
சவுல் பெலிஸ்தியரை பின் தொடராமல் திரும்பிச் செல்ல, பெலிஸ்தியரும் தாங்கள் இடங்களுக்குச் சென்றனர்.

1 Samuel 14:451 Samuel 141 Samuel 14:47

King James Version (KJV)
Then Saul went up from following the Philistines: and the Philistines went to their own place.

American Standard Version (ASV)
Then Saul went up from following the Philistines; and the Philistines went to their own place.

Bible in Basic English (BBE)
Then Saul, turning back, went after the Philistines no longer: and the Philistines went back to their place.

Darby English Bible (DBY)
And Saul went up from following the Philistines; and the Philistines went to their own place.

Webster’s Bible (WBT)
Then Saul went up from following the Philistines: and the Philistines went to their own place.

World English Bible (WEB)
Then Saul went up from following the Philistines; and the Philistines went to their own place.

Young’s Literal Translation (YLT)
And Saul goeth up from after the Philistines, and the Philistines have gone to their place;

1 சாமுவேல் 1 Samuel 14:46
சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.
Then Saul went up from following the Philistines: and the Philistines went to their own place.

Then
Saul
וַיַּ֣עַלwayyaʿalva-YA-al
went
up
שָׁא֔וּלšāʾûlsha-OOL
from
following
מֵאַֽחֲרֵ֖יmēʾaḥărêmay-ah-huh-RAY
the
Philistines:
פְּלִשְׁתִּ֑יםpĕlištîmpeh-leesh-TEEM
Philistines
the
and
וּפְלִשְׁתִּ֖יםûpĕlištîmoo-feh-leesh-TEEM
went
הָֽלְכ֥וּhālĕkûha-leh-HOO
to
their
own
place.
לִמְקוֹמָֽם׃limqômāmleem-koh-MAHM