Esther 8 - ORIYA (Tamil)

1 ସହେିଦିନ ଅକ୍ଷଶ୍ବରେଶ ରାଜା ଏଷ୍ଟର ରାଣୀକୁ ୟିହୁଦୀଯ ଲୋକମାନଙ୍କର ଶତୃ ହାମନର ଗୃହ ଆଦି ଦଲୋ। ଆଉ ମର୍ଦ୍ଦଖଯ ରାଜାଙ୍କ ସାକ୍ଷାତ ରେ ଉପସ୍ଥିତ ହେଲା କାରଣ ମର୍ଦ୍ଦଖଯ ସହିତ କି ସମ୍ପର୍କ ତାହା ଜଣାଇ ଦଇେଥିଲା।அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.

2 ଏଥି ରେ ରାଜା ହାମନଠାରୁ ଯେଉଁ ଅଙ୍ଗୁରୀଯ ନଇେଥିଲା, ତାହା କାଢି ମର୍ଦ୍ଦଖଯକୁ ଦଲୋ। ଏବଂ ଏଷ୍ଟର ହାମନର ଗୃହ ଉପରେ ମର୍ଦ୍ଦଖଯକୁ ନିୟୁକ୍ତି କଲା।ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

3 ଏଷ୍ଟର ରାଜା ନିକଟରେ ପୁନର୍ବାର ନିବଦନେ କଲା, ପୁଣି ୟିହୁଦୀଯମାନଙ୍କ ପ୍ରତିକୂଳ ରେ ଅଗାଗୀଯ ହାମନର କୃତ ଅମଙ୍ଗଳ ଓ ତାର କଳ୍ପିତ କଳ୍ପନା ନିବାରାଣାର୍ଥେ ତାହାର ଚରଣ ରେ ପଡି ରୋଦନ କରି ପ୍ରାର୍ଥନା କଲା।பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில்பேசி, அவன் பாதங்களில் விழுந்து அது, ஆகாயனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.

4 ତହିଁରେ ରାଜା ଏଷ୍ଟର ଆଡେ ସୁବର୍ଣ୍ଣ ଦଣ୍ତ ବିସ୍ତାର କରନ୍ତେ ଏଷ୍ଟର ଉଠି ରାଜାଙ୍କ ଛାମୁ ରେ ଠିଆ ହେଲା।அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்றாள்.

5 ଏବଂ କହିଲା, ଯବେେ ମହାରାଜ ସନ୍ତୁଷ୍ଟ ହୁଅନ୍ତି ଯବେେ ରାଜାଙ୍କ ଦୁଷ୍ଟି ରେ ମୁଁ ଅନୁଗ୍ରହ ପାଇଅଛି, ଦୟାକରି ମାେ ପାଇଁ ଏହା କରନ୍ତୁ। ଆଉ ଯଦି ଏହା ରାଜାଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରେ, ତବେେ ମହାରାଜାଙ୍କର ସମୁଦାଯ ପ୍ରଦେଶସ୍ଥ ୟିହୁଦୀଯମାନଙ୍କୁ ବିନାଶ କରିବା ପାଇଁ ଅଗାଗୀଯ ହମ୍ମାଦାଥାର ପୁତ୍ର ହାମନ ଯେ ସକଳ ପତ୍ର ଲେଖିବାକୁ ପରାମର୍ଶ ଦଇେଥିଲା, ତାହା ପ୍ରତ୍ଯାହୃତ କରାଯାଉ।ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.

6 ଯେ ହତେୁ ମାେ ଲୋକଙ୍କ ପ୍ରତି ଯେଉଁ ଅମଙ୍ଗଳ ଘଟିବ ତାହା ଦେଖି ମୁଁ କିପରି ସହିପାରିବି? ପୁଣି ଆପଣା କୁଟୁମ୍ବମାନଙ୍କ ବିନାଶ ଦେଖି କିପରି ସହିପାରିବି?என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.

7 ଏଥି ରେ ଅକ୍ଷଶ୍ବରେଶ ରାଜା ଏଷ୍ଟର ରାଣୀକୁ ଓ ୟିହୁଦୀଯ ମର୍ଦ୍ଦଖଯକୁ କହିଲା, ଦେଖ, ମୁଁ ଏଷ୍ଟରକୁ ହାମନର ଗୃହ ଦଲେି, ଲୋକମାନେ ହାମନ୍କୁ ଫାଶିକାଠ ରେ ଫାଶି ଦଇେଛନ୍ତି। କାରଣ ସେ ୟିହୁଦୀଯମାନଙ୍କ ଉପରେ ହସ୍ତକ୍ଷପେ କରିଥିଲା।அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

8 ତୁମ୍ଭମାନେେ ୟିହୁଦୀଯମାନଙ୍କ ସମନ୍ଧ ରେ ନିଜ ନିଜ ଇଛାନୁସା ରେ ରାଜାଙ୍କ ନାମ ରେ ରାଜାଜ୍ଞା ଲେଖ ଓ ତାହା ରାଜାଙ୍କ ଅଙ୍ଗୁରୀଯ ରେ ମାହେରାଙ୍କିତ କର। କାରଣ ରାଜାଙ୍କର ନାମ ରେ ଲିଖିତ ଓ ରାଜାଙ୍କର ଅଙ୍ଗୁରୀଯ ରେ ମାହେରାଙ୍କିତ ପତ୍ର କହେି ଅନ୍ୟଥା କରିପାରିବେ ନାହିଁ।இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.

9 ତେଣୁ ତୃତୀୟ ମାସର ଅର୍ଥାତ୍ ସୀବନ ମାସର ତଇେଶ ଦିନ ରେ ରାଜାର ଲେଖକମାନେ ଆହୁତ ହୁଅନ୍ତେ ମର୍ଦ୍ଦଖଯର ଆଜ୍ଞା ଅନୁସାରେ ସମସ୍ତ ୟିହୁଦୀଯମାନଙ୍କ ନିକଟକୁ ଓ ହିନ୍ଦୁସ୍ଥାନଠାରୁ କୁଶଦେଶ ପର୍ୟ୍ଯନ୍ତ 127 ପ୍ରଦେଶର ଅନ୍ତର୍ଗତ ପ୍ରେତ୍ୟକକ ପ୍ରଦେଶର ଅକ୍ଷାରାନୁସା ରେ କ୍ଷତିପାଳ ଓ ଶାସନକର୍ତ୍ତା ଓ ପ୍ରଦଶାଧେିପତିମାନଙ୍କ ନିକଟକୁ। ପୁଣି ପ୍ରେତ୍ୟକକ ଗୋଷ୍ଠୀକି ସମାନଙ୍କେ ଭାଷାନୁସା ରେ, ଆଉ ୟିହୁଦୀଯ ଲୋକମାନଙ୍କ ନିକଟକୁ ସମାନଙ୍କେ ଅକ୍ଷର ଓ ଭାଷାନୁସା ରେ ପତ୍ର ଲଖାଗେଲା।சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.

10 ସେ ରାଜା ଅକ୍ଷଶ୍ବରେଶ ନାମ ରେ ଲେଖି ଓ ରାଜାଙ୍କ ଅଙ୍ଗୁରୀଯ ରେ ମାହେରାଙ୍କିତ କରି ଅଶ୍ବାଶାଳା-ଜାତ ରାଜକୀଯ ଅଶ୍ବବାହାରୂଢ ଦ୍ରୁତଗାମୀ ଦୂତଗଣ ହସ୍ତ ରେ ପତ୍ର ପଠାଇଲା।அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.

11 ରାଜାଙ୍କର ଚିଠି ରେ ଲିଖିତ ବିଷଯ ବସ୍ତୁ ଏହି:அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரேநாளிலே,

12 ସଦେିନ ଥିଲା ଅକ୍ଷଶ୍ବରେଶ ରାଜାଙ୍କର ତ୍ରଯୋଦଶ ଦିନ ଦ୍ବାଦଶ ମାସର ଅଦାର ମାସ ରେ। ୟିହୁଦୀଯମାନଙ୍କୁ ସବୁ ପ୍ରଦେଶ ରେ ପ୍ରଗ୍ଭର କରିବା ପାଇଁ, ରାଜା ଅନୁମତି ଦଇେଥିଲେ।அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.

13 ସହେି ଚିଠିର ଏକ ନକଲ ରାଜାଙ୍କର ଏକ ଆଜ୍ଞାପତ୍ର ଗ୍ଭରି ଆଡକୁ ପଠା ୟାଇଥିଲା। ଏହା ଏକ ବ୍ଯବସ୍ଥା ଥିଲା, ଏହି ନିର୍ଦ୍ଦେଶ ସବୁ ପ୍ରଦେଶ ରେ ନିଯମ ରେ ପରିଣତ କରାଗଲା। ସହେି ରାଜ୍ଯ ରେ ବାସ କରୁଥିବା ସବୁଜାତୀଯ ଲୋକଙ୍କ ପାଇଁ ତାହା ପ୍ରଗ୍ଭରିତ ହେଲା। ସେ ଏପରି କରିଥିଲେ କାରଣ ୟିହୁଦୀଯମାନେ ସହେି ଦିନପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହାଇେଥିଲେ। ୟିହୁଦୀଯମାନଙ୍କୁ ସୁଯୋଗ ଦିଆ ୟାଇଥିଲା ସମାନଙ୍କେର ଶତୃମାନଙ୍କଠାରୁ ପ୍ରତି ଶାଧେ ନବୋପାଇଁ।யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.

14 ତହିଁରେ ଦ୍ରୁତଗାମୀ ରାଜକୀଯ ଅଶ୍ବାରୁଢ ଦୂତମାନେ ରାଜାଙ୍କ ଆଜ୍ଞା ରେ ଶିଘ୍ର ଗ୍ଭଲିଗଲେ, ଏବଂ ଏହା ଶ୍ବଶନ ରାଜଧାନୀ ରେ ସହେି ଆଜ୍ଞା ପ୍ରକାଶିତ ହେଲା।அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.

15 ଏହାପରେ ମର୍ଦ୍ଦଖଯ ନୀଳ ଓ ଶୁକ୍ଲବର୍ଣ୍ଣ ରାଜକୀଯ ବସ୍ତ୍ର ପିନ୍ଧି ମସ୍ତକରେ ସୁବର୍ଣ୍ଣମଯ ବୃହତ ମୁକୁଟ ଦଇେ ସରୁ ଓ ଏକ ସୁକ୍ଷ୍ମ ନାଇଲନ୍ ଓଢଣୀ ଓ ବାଇଗଣୀ ରଂଗର ବସ୍ତ୍ର ପିନ୍ଧି ରାଜାଙ୍କ ଛାମୁରୁ ବାହାରି ଗଲା ତହିଁରେ ଶୂଶନ ରାଜଧାନୀ ଆନନ୍ଦ ଓ ହର୍ଷନାଦ ରେ ପରିପୂର୍ଣ୍ଣ ହେଲା।அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான்நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.

16 ଆଉ ୟିହୁଦୀଯମାନଙ୍କର ଦୀପ୍ତି, ଆନନ୍ଦ, ହର୍ଷ ଓ ସମ୍ଭ୍ରମର ଉଦଯ ହେଲା।இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமுமுண்டாயிற்று.

17 ଏବଂ ପ୍ରତି ପ୍ରଦେଶ ରେ ଓ ପ୍ରତି ନଗର ରେ, ଯେ କୌଣସି ସ୍ଥାନ ରେ ରାଜାଜ୍ଞା ଓ ନିଯମ ପତ୍ର ଉପସ୍ଥିତ ହେଲା, ସହେି ସ୍ଥାନ ରେ ୟିହୁଦୀଯମାନଙ୍କର ଆନନ୍ଦ ଓ ଆମାଦେ, ଭୋଜି ଓ ମଙ୍ଗଳର ଦିନ ହେଲା। ପୁଣି ଦେଶର ଅନକେ ଲୋକ ୟିହୁଦୀଯ ମତାଲମ୍ବୀ ହେଲେ, ଯେ ହତେୁ ସମାନେେ ୟିହୁଦୀଯମାନଙ୍କ ସକାେଶ ଭୟ କଲେ।ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.

Tamil Bible