நீதிமொழிகள் 28

fullscreen1 ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.

fullscreen2 தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.

fullscreen3 ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.

fullscreen4 வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.

fullscreen5 துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.

fullscreen6 இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.

fullscreen7 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

fullscreen8 அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

fullscreen9 வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

fullscreen10 உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

fullscreen11 ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

fullscreen12 நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

fullscreen13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

fullscreen14 எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

fullscreen15 ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.

fullscreen16 பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

fullscreen17 இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

fullscreen18 உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

fullscreen19 தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

fullscreen20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

fullscreen21 முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.

fullscreen22 வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.

fullscreen23 தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

fullscreen24 தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.

fullscreen25 பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

fullscreen26 தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

fullscreen27 தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

fullscreen28 துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் பசியினால் வாடி, சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; கொடிய மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.

Tamil Easy Reading Version
அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள். பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும். நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும்.

Thiru Viviliam
⁽பசியினால் அவர்கள் வாடுவர்;␢ கொள்ளை நோயால் மாய்வர்;␢ கொடிய வாதைகளால் மடிவர்;␢ விலங்குகளின் பற்களுக்கு␢ இரையாவர்; புழுதியில் ஊரும்␢ நச்சுப்பூச்சிகளால் மடிவர்.⁾

Deuteronomy 32:23Deuteronomy 32Deuteronomy 32:25

King James Version (KJV)
They shall be burnt with hunger, and devoured with burning heat, and with bitter destruction: I will also send the teeth of beasts upon them, with the poison of serpents of the dust.

American Standard Version (ASV)
`They shall be’ wasted with hunger, and devoured with burning heat And bitter destruction; And the teeth of beasts will I send upon them, With the poison of crawling things of the dust.

Bible in Basic English (BBE)
They will be wasted from need of food, and overcome by burning heat and bitter destruction; and the teeth of beasts I will send on them, with the poison of the worms of the dust.

Darby English Bible (DBY)
They shall be consumed with hunger, and devoured with burning heat, And with poisonous pestilence; And the teeth of beasts will I send against them, With the poison of what crawleth in the dust.

Webster’s Bible (WBT)
They shall be burnt with hunger, and devoured with burning heat, and with bitter destruction: I will also send the teeth of beasts upon them, with the poison of serpents of the dust.

World English Bible (WEB)
[They shall be] wasted with hunger, and devoured with burning heat Bitter destruction; The teeth of animals will I send on them, With the poison of crawling things of the dust.

Young’s Literal Translation (YLT)
Exhausted by famine, And consumed by heat, and bitter destruction. And the teeth of beasts I send upon them, With poison of fearful things of the dust.

உபாகமம் Deuteronomy 32:24
அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்டமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.
They shall be burnt with hunger, and devoured with burning heat, and with bitter destruction: I will also send the teeth of beasts upon them, with the poison of serpents of the dust.

They
shall
be
burnt
מְזֵ֥יmĕzêmeh-ZAY
with
hunger,
רָעָ֛בrāʿābra-AV
and
devoured
וּלְחֻ֥מֵיûlĕḥumêoo-leh-HOO-may
heat,
burning
with
רֶ֖שֶׁףrešepREH-shef
and
with
bitter
וְקֶ֣טֶבwĕqeṭebveh-KEH-tev
destruction:
מְרִירִ֑יmĕrîrîmeh-ree-REE
send
also
will
I
וְשֶׁןwĕšenveh-SHEN
the
teeth
בְּהֵמֹת֙bĕhēmōtbeh-hay-MOTE
of
beasts
אֲשַׁלַּחʾăšallaḥuh-sha-LAHK
with
them,
upon
בָּ֔םbāmbahm
the
poison
עִםʿimeem
of
serpents
חֲמַ֖תḥămathuh-MAHT
of
the
dust.
זֹֽחֲלֵ֥יzōḥălêzoh-huh-LAY
עָפָֽר׃ʿāpārah-FAHR