1 ஆரோகண பாடல் என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.

2 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.

3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.

4 கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.

6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.

7 அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.

8 கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; கர்த்தரின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.

சங்கீதம் 129 ERV IRV TRV