ஏசாயா 25

fullscreen1 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.

fullscreen2 நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் ராஜதானியை ஊராயிராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர்.

fullscreen3 ஆகையால் பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும்.

fullscreen4 கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.

fullscreen5 வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல, அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில்தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும்.

fullscreen6 சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும் ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.

fullscreen7 சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.

fullscreen8 அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

fullscreen9 அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

fullscreen10 கர்த்தருடைய கரம் இந்த மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போம்.

fullscreen11 நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல, அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும், அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார்.

fullscreen12 அவர் உன் மதில்களுடைய உயர்ந்த அரணைக் கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்.

Cross Reference

Psalm 41:9
ମାରେ ଅନ୍ତରଙ୍ଗ ବନ୍ଧୁ ମାେ ସହିତ ଭୋଜନ କଲେ ଏବଂ ମୁଁ ତାଙ୍କୁ ବିଶ୍ବାସ କଲି। କିନ୍ତୁ ଦେଖ, ସେ ଆଜି ମାେ ବିରୁଦ୍ଧରେ ଯାଉଛନ୍ତି।

Psalm 55:12
ୟଦି କୌଣସି ଶତ୍ରୁ ମାେତେ ତିରସ୍କାର କଲା ମୁଁ ସହନ୍ତି। ୟଦି ମାରେ ଶତ୍ରୁମାନେ ମାେ ବିରୁଦ୍ଧରେ ଆକ୍ରମଣ କରନ୍ତି। ମୁଁ ତାଙ୍କଠାରୁ ନିଜକୁ ଲୁଚାନ୍ତି।

Luke 22:48
କିନ୍ତୁ ଯୀଶୁ ତାହାଙ୍କୁ କହିଲେ, ୟିହୂଦା, ତୁମ୍ଭେ କ'ଣ ମନୁଷ୍ଯପୁତ୍ରଙ୍କୁ ତାହାଙ୍କ ଶତୃମାନଙ୍କ ହାତ ରେ ଦଇେ ଦବୋପାଇଁ ବଂଧୁତାର ଚୁମ୍ବନକୁ ବ୍ଯବହାର କରୁଛ?

Job 6:14
ଜଣେ ବ୍ଯକ୍ତିର ସାଙ୍ଗମାନେ ତା'ର କଷ୍ଟ ସମୟରେ ତାକୁ ଦୟା କରିବା କଥା, ଯଦିଓ ସେ ସର୍ବଶକ୍ତିମାନ ପରମେଶ୍ବରଙ୍କଠାରୁ ବିମୁଖ ହୁଏ।

Psalm 38:11
ମାରେ ରୋଗ ଯୋଗୁଁ ମାରେ ବନ୍ଧୁ ଓ ପଡ଼ୋଶୀମାନେ ମାେତେ ଦଖାେ କରିବାକୁ ଆସନ୍ତି ନାହିଁ। ମାରେ ପରିବାରବର୍ଗ ମାଠାରୁେ ଦୂରଇେ ରହନ୍ତି।

Psalm 55:20
ମାରେ ଶତ୍ରୁମାନେ ସମାନଙ୍କେର ଜୀବନ ଧାରଣର ପଥ ବଦଳାଇବେ ନାହିଁ। ସମାନେେ ପରମେଶ୍ବରଙ୍କୁ ଭୟ କରନ୍ତି ନାହିଁ କି ସମ୍ମାନ ଦିଅନ୍ତି ନାହିଁ।

Psalm 109:4
ମୁଁ ସମାନଙ୍କେୁ ପ୍ରମେ କଲି। କିନ୍ତୁ ସମାନେେ ମାେତେ ଦୋଷୀ କଲେ। କିନ୍ତୁ ମୁଁ କ୍ରମାଗତ ପ୍ରାର୍ଥନା କରିଚାଲିଛି।