1ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;Wherefore seeing we also are compassed about with so great a cloud of witnesses, let us lay aside every weight, and the sin which doth so easily beset us, and let us run with patience the race that is set before us,
2அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.Looking unto Jesus the author and finisher of our faith; who for the joy that was set before him endured the cross, despising the shame, and is set down at the right hand of the throne of God.
3ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்For consider him that endured such contradiction of sinners against himself, lest ye be wearied and faint in your minds.
4பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.Ye have not yet resisted unto blood, striving against sin.
5அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.And ye have forgotten the exhortation which speaketh unto you as unto children, My son, despise not thou the chastening of the Lord, nor faint when thou art rebuked of him:
6கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.For whom the Lord loveth he chasteneth, and scourgeth every son whom he receiveth.
7நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?If ye endure chastening, God dealeth with you as with sons; for what son is he whom the father chasteneth not?
8எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.But if ye be without chastisement, whereof all are partakers, then are ye bastards, and not sons.
9அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?Furthermore we have had fathers of our flesh which corrected us, and we gave them reverence: shall we not much rather be in subjection unto the Father of spirits, and live?
10அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.For they verily for a few days chastened us after their own pleasure; but he for our profit, that we might be partakers of his holiness.
11எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.Now no chastening for the present seemeth to be joyous, but grievous: nevertheless afterward it yieldeth the peaceable fruit of righteousness unto them which are exercised thereby.
12ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,Wherefore lift up the hands which hang down, and the feeble knees;
13முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.And make straight paths for your feet, lest that which is lame be turned out of the way; but let it rather be healed.
14யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.Follow peace with all men, and holiness, without which no man shall see the Lord:
15ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,Looking diligently lest any man fail of the grace of God; lest any root of bitterness springing up trouble you, and thereby many be defiled;
16ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.Lest there be any fornicator, or profane person, as Esau, who for one morsel of meat sold his birthright.
17ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.For ye know how that afterward, when he would have inherited the blessing, he was rejected: for he found no place of repentance, though he sought it carefully with tears.
18அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,For ye are not come unto the mount that might be touched, and that burned with fire, nor unto blackness, and darkness, and tempest,
19எக்காள முழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.And the sound of a trumpet, and the voice of words; which voice they that heard intreated that the word should not be spoken to them any more:
20ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.(For they could not endure that which was commanded, And if so much as a beast touch the mountain, it shall be stoned, or thrust through with a dart:
21மோசேயும்: நான் மிகவும் பயந்துநடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.And so terrible was the sight, that Moses said, I exceedingly fear and quake:)
22நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,But ye are come unto mount Sion, and unto the city of the living God, the heavenly Jerusalem, and to an innumerable company of angels,
23பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணமாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,To the general assembly and church of the firstborn, which are written in heaven, and to God the Judge of all, and to the spirits of just men made perfect,
24புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.And to Jesus the mediator of the new covenant, and to the blood of sprinkling, that speaketh better things that that of Abel.
25பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?See that ye refuse not him that speaketh. For if they escaped not who refused him that spake on earth, much more shall not we escape, if we turn away from him that speaketh from heaven:
26அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேனென்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.Whose voice then shook the earth: but now he hath promised, saying, Yet once more I shake not the earth only, but also heaven.
27இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது.And this word, Yet once more, signifieth the removing of those things that are shaken, as of things that are made, that those things which cannot be shaken may remain.
28ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.Wherefore we receiving a kingdom which cannot be moved, let us have grace, whereby we may serve God acceptably with reverence and godly fear:
29நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.For our God is a consuming fire.
1Aakaiyaal, maekamponta iththanai thiralaana saatchikal nammaich soolnthukonntirukka, paaramaana yaavattaைyum, nammaich sutti nerungi nirkira paavaththaiyum thallivittu, visuvaasaththaith thuvakkukiravarum mutikkiravarumaayirukkira Yesuvai Nnokki, namakku niyamiththirukkira ottaththil poraுmaiyotae odakkadavom;Wherefore seeing we also are compassed about with so great a cloud of witnesses, let us lay aside every weight, and the sin which doth so easily beset us, and let us run with patience the race that is set before us,
2Avar thamakkumun vaiththiruntha santhoshaththinporuttu, avamaanaththai ennnnaamal, siluvaiyaich sakiththu, thaevanutaiya singaasanaththin valathupaarisaththil veettirukkiraar.Looking unto Jesus the author and finisher of our faith; who for the joy that was set before him endured the cross, despising the shame, and is set down at the right hand of the throne of God.
3Aakaiyaal neengal ilaippullavarkalaay ungal aaththumaakkalil sornthupokaathapatikku, thamakku virothamaayp paavikalaal seyyappatta ivvithamaana vipareethangalaich sakiththa avaraiyae ninaiththukkollungalFor consider him that endured such contradiction of sinners against himself, lest ye be wearied and faint in your minds.
4Paavaththirku virothamaayp poraadukirathil iraththanjinthappadaththakkathaaka neengal innum ethirththunirkavillaiyae.Ye have not yet resisted unto blood, striving against sin.
5Antiyum: en makanae, karththarutaiya sitchaைyai arpamaaka ennnnaathae, avaraal katinthukollappadumpothu sornthupokaathae.And ye have forgotten the exhortation which speaketh unto you as unto children, My son, despise not thou the chastening of the Lord, nor faint when thou art rebuked of him:
6Karththar evanidaththil anpukoorukiraaro avanai avar sitchiththu, thaam serththukkollukira entha makanaiyum thanntikkiraar entu pillaikalukkuch sollukirathupola ungalukkuch solliyirukkira puththimathiyai marantheerkal.For whom the Lord loveth he chasteneth, and scourgeth every son whom he receiveth.
7Neengal sitchaைyaich sakikkiravarkalaayirunthaal Dhevan ungalaip puththiraraaka ennnni nadaththukiraar; thakappan sitchiyaatha puththiranunntoo?If ye endure chastening, God dealeth with you as with sons; for what son is he whom the father chasteneth not?
8Ellaarukkum kitaikkum sitchaை ungalukkuk kitaiyaathirunthaal neengal puththiraraayiraamal vaesippillaikalaayiruppeerkalae.But if ye be without chastisement, whereof all are partakers, then are ye bastards, and not sons.
9Antiyum, nammutaiya sareeraththin thakappanmaarkal nammaich sitchikkumpothu, avarkalukku naam anji nadanthirukka, naam pilaikkaththakkathaaka aavikalin pithaavukku veku athikamaay adangi nadakkavaenndumallavaa?Furthermore we have had fathers of our flesh which corrected us, and we gave them reverence: shall we not much rather be in subjection unto the Father of spirits, and live?
10Avarkal thangalukku nalamentu thontinapati konjakkaalam sitchiththaarkal; ivaro thammutaiya Parisuththaththukku naam pangullavarkalaakumporuttu nammutaiya pirayojanaththukkaakavae nammaich sitchikkiraar.For they verily for a few days chastened us after their own pleasure; but he for our profit, that we might be partakers of his holiness.
11Enthach sitchaைyum tharkaalaththil santhoshamaayk kaannaamal thukkamaayk kaanum; aakilum pirkaalaththil athil palakinavarkalukku athu neethiyaakiya samaathaana palanaith tharum.Now no chastening for the present seemeth to be joyous, but grievous: nevertheless afterward it yieldeth the peaceable fruit of righteousness unto them which are exercised thereby.
12Aakaiyinaal, nekilntha kaikalaiyum thalarntha mulangaalkalaiyum neengal, thirumpa nimirththi,Wherefore lift up the hands which hang down, and the feeble knees;
13Mudamaayirukkirathu pisakippokaamal sosthamaakumpatikku, ungal paathangalukku valikalaich sevvaippaduththungal.And make straight paths for your feet, lest that which is lame be turned out of the way; but let it rather be healed.
14Yaavarodum samaathaanamaayirukkavum, Parisuththamullavarkalaayirukkavum naadungal; Parisuththamillaamal oruvanum karththaraith tharisippathillaiyae.Follow peace with all men, and holiness, without which no man shall see the Lord:
15Oruvanum thaevanutaiya kirupaiyai ilanthupokaathapatikkum yaathoru kasappaana vaer mulaiththelumpik kalakkamunndaakkukirathinaal anaekar theettuppadaathapatikkum,Looking diligently lest any man fail of the grace of God; lest any root of bitterness springing up trouble you, and thereby many be defiled;
16Oruvanum vaesikkallanaakavum, oruvaelaip pojanaththukkaakath than seshdapuththirapaakaththai vittaுppotta aesaavaippolach seerkettavanaakavum iraathapatikkum echcharikkaiyaayirungal.Lest there be any fornicator, or profane person, as Esau, who for one morsel of meat sold his birthright.
17Aenental, pirpaadu avan aaseervaathaththaich suthanthariththukkolla virumpiyum aakaathavanentu thallappattathai ariveerkal; avan kannnneervittu, kavalaiyotae thaetiyum manam maaraுthalaik kaannaamarponaan.For ye know how that afterward, when he would have inherited the blessing, he was rejected: for he found no place of repentance, though he sought it carefully with tears.
18Antiyum, thodakkootiyathum, akkini pattiyerikirathumaana malaiyinidaththirkum, manthaaram irul perungaattaு aakiya ivaikalinidaththirkum,For ye are not come unto the mount that might be touched, and that burned with fire, nor unto blackness, and darkness, and tempest,
19Ekkaala mulakkaththinidaththirkum, vaarththaikalutaiya saththaththinidaththirkum, neengal vanthu seravillai; anthach saththaththaik kaettavarkal pinnum thangalukku vaarththai sollappadaathapatikku vaenntikkonndaarkal.And the sound of a trumpet, and the voice of words; which voice they that heard intreated that the word should not be spoken to them any more:
20Aenenil oru mirukamaakilum malaiyaith thottal, athu kalleriyunndu, allathu ampinaal eyyunndu saakavaenndumentu sollappatta kattalaiyaich sakikkamaattathirunthaarkal.(For they could not endure that which was commanded, And if so much as a beast touch the mountain, it shall be stoned, or thrust through with a dart:
21Mosesyum: naan mikavum payanthunadungukiraேn entu sollaththakkathaaka anthak kaatchi avvalavu payangaramaayirunthathu.And so terrible was the sight, that Moses said, I exceedingly fear and quake:)
22Neengalo seeyon malaiyinidaththirkum, jeevanulla thaevanutaiya nakaramaakiya parama erusalaeminidaththirkum, aayiram pathinaayiramaana thaevathootharkalinidaththirkum,But ye are come unto mount Sion, and unto the city of the living God, the heavenly Jerusalem, and to an innumerable company of angels,
23Paralokaththil paereluthiyirukkira mutharpaeraanavarkalin sarvasangamaakiya Sabaiyinidaththirkum, yaavarukkum niyaayaathipathiyaakiya thaevanidaththirkum, pooranamaakkappatta neethimaankalutaiya aavikalinidaththirkum,To the general assembly and church of the firstborn, which are written in heaven, and to God the Judge of all, and to the spirits of just men made perfect,
24Puthu udanpatikkaiyin maththiyastharaakiya Yesuvinidaththirkum, aapaelinutaiya iraththam paesinathaippaarkkilum nanmaiyaanavaikalaip paesukira iraththamaakiya thelikkappadum iraththaththinidaththirkum vanthu serntheerkal.And to Jesus the mediator of the new covenant, and to the blood of sprinkling, that speaketh better things that that of Abel.
25Paesukiravarukku neengal sevikodukkamaattaோmentu vilakaathapati echcharikkaiyaayirungal; aenenil, poomiyilae paesinavarukkuch sevikodukkamaattaோmentu vilakinavarkal thappippokaamalirukka, paralokaththilirunthu paesukiravarai naam vittuvilakinaal eppatith thappippovom?See that ye refuse not him that speaketh. For if they escaped not who refused him that spake on earth, much more shall not we escape, if we turn away from him that speaketh from heaven:
26Avarutaiya saththam appoluthu poomiyai asaiyappannnnittaு; innum orutharam naan poomiyai maaththiramalla, vaanaththaiyum asaiyappannnuvaenentu ippoluthu vaakkuththaththanjaெythirukkiraar.Whose voice then shook the earth: but now he hath promised, saying, Yet once more I shake not the earth only, but also heaven.
27Innum orutharam enkira sollaanathu asaiyaathavaikal nilaiththirukkaththakkathaaka, asaivullavaikal unndaakkappattavaikalpol maarippom enpathaik kurikkirathu.And this word, Yet once more, signifieth the removing of those things that are shaken, as of things that are made, that those things which cannot be shaken may remain.
28Aathalaal, asaivillaatha raajyaththaip peraுkiravarkalaakiya naam payaththodum pakthiyodum thaevanukkup piriyamaay aaraathanai seyyumpati kirupaiyaip pattikkollakkadavom.Wherefore we receiving a kingdom which cannot be moved, let us have grace, whereby we may serve God acceptably with reverence and godly fear:
29Nammutaiya Dhevan patchikkira akkiniyaayirukkiraarae.For our God is a consuming fire.