1ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,And it came to pass, when king Hezekiah heard it, that he rent his clothes, and covered himself with sackcloth, and went into the house of the LORD.
2அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.And he sent Eliakim, who was over the household, and Shebna the scribe, and the elders of the priests covered with sackcloth, unto Isaiah the prophet the son of Amoz.
3இவர்கள் அவனை நோக்கி: இந்தநாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.And they said unto him, Thus saith Hezekiah, This day is a day of trouble, and of rebuke, and of blasphemy: for the children are come to the birth, and there is not strength to bring forth.
4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.It may be the LORD thy God will hear the words of Rabshakeh, whom the king of Assyria his master hath sent to reproach the living God, and will reprove the words which the LORD thy God hath heard: wherefore lift up thy prayer for the remnant that is left.
5இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.So the servants of king Hezekiah came to Isaiah.
6அப்பொழுது ஏசாயா அவர்களைநோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.And Isaiah said unto them, Thus shall ye say unto your master, Thus saith the LORD, Be not afraid of the words that thou hast heard, wherewith the servants of the king of Assyria have blasphemed me.
7இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.Behold, I will send a blast upon him, and he shall hear a rumour, and return to his own land; and I will cause him to fall by the sword in his own land.
8அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.So Rabshakeh returned, and found the king of Assyria warring against Libnah: for he had heard that he was departed from Lachish.
9அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:And he heard say concerning Tirhakah king of Ethiopia, He is come forth to make war with thee. And when he heard it, he sent messengers to Hezekiah, saying,
10நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.Thus shall ye speak to Hezekiah king of Judah, saying, Let not thy God, in whom thou trustest, deceive thee, saying, Jerusalem shall not be given into the hand of the king of Assyria.
11இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?Behold, thou hast heard what the kings of Assyria have done to all lands by destroying them utterly; and shalt thou be delivered?
12என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?Have the gods of the nations delivered them which my fathers have destroyed, as Gozan, and Haran, and Rezeph, and the children of Eden which were in Telassar?
13ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.Where is the king of Hamath, and the king of Arphad, and the king of the city of Sepharvaim, Hena, and Ivah?
14எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,And Hezekiah received the letter from the hand of the messengers, and read it: and Hezekiah went up unto the house of the LORD, and spread it before the LORD.
15கர்த்தரை நோக்கி:And Hezekiah prayed unto the LORD, saying,
16சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.O LORD of hosts, God of Israel, that dwellest between the cherubims, thou art the God, even thou alone, of all the kingdoms of the earth: thou hast made heaven and earth.
17கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.Incline thine ear, O LORD, and hear; open thine eyes, O LORD, and see: and hear all the words of Sennacherib, which hath sent to reproach the living God.
18கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,Of a truth, LORD, the kings of Assyria have laid waste all the nations, and their countries,
19அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.And have cast their gods into the fire: for they were no gods, but the work of men's hands, wood and stone: therefore they have destroyed them.
20இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.Now therefore, O LORD our God, save us from his hand, that all the kingdoms of the earth may know that thou art the LORD, even thou only.
21அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.Then Isaiah the son of Amoz sent unto Hezekiah, saying, Thus saith the LORD God of Israel, Whereas thou hast prayed to me against Sennacherib king of Assyria:
22அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.This is the word which the LORD hath spoken concerning him; The virgin, the daughter of Zion, hath despised thee, and laughed thee to scorn; the daughter of Jerusalem hath shaken her head at thee.
23யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.Whom hast thou reproached and blasphemed? and against whom hast thou exalted thy voice, and lifted up thine eyes on high? even against the Holy One of Israel.
24உன் ஊழியக்காரரைக்கொண்டு ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,By thy servants hast thou reproached the Lord, and hast said, By the multitude of my chariots am I come up to the height of the mountains, to the sides of Lebanon; and I will cut down the tall cedars thereof, and the choice fir trees thereof: and I will enter into the height of his border, and the forest of his Carmel.
25நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.I have digged, and drunk water; and with the sole of my feet have I dried up all the rivers of the besieged places.
26நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.Hast thou not heard long ago, how I have done it; and of ancient times, that I have formed it? now have I brought it to pass, that thou shouldest be to lay waste defenced cities into ruinous heaps.
27அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும் ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள்.Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded: they were as the grass of the field, and as the green herb, as the grass on the housetops, and as corn blasted before it be grown up.
28உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.But I know thy abode, and thy going out, and thy coming in, and thy rage against me.
29நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.Because thy rage against me, and thy tumult, is come up into mine ears, therefore will I put my hook in thy nose, and my bridle in thy lips, and I will turn thee back by the way by which thou camest.
30உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.And this shall be a sign unto thee, Ye shall eat this year such as groweth of itself; and the second year that which springeth of the same: and in the third year sow ye, and reap, and plant vineyards, and eat the fruit thereof.
31யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.And the remnant that is escaped of the house of Judah shall again take root downward, and bear fruit upward:
32மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்பபடுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.For out of Jerusalem shall go forth a remnant, and they that escape out of mount Zion: the zeal of the LORD of hosts shall do this.
33ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம்போடுவதுமில்லை.Therefore thus saith the LORD concerning the king of Assyria, He shall not come into this city, nor shoot an arrow there, nor come before it with shields, nor cast a bank against it.
34அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல் தான் வந்தவழியே திரும்பிப்போவான்.By the way that he came, by the same shall he return, and shall not come into this city, saith the LORD.
35என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.For I will defend this city to save it for mine own sake, and for my servant David's sake.
36அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.Then the angel of the LORD went forth, and smote in the camp of the Assyrians a hundred and fourscore and five thousand: and when they arose early in the morning, behold, they were all dead corpses.
37அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.So Sennacherib king of Assyria departed, and went and returned, and dwelt at Nineveh.
38அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.And it came to pass, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer his sons smote him with the sword; and they escaped into the land of Armenia: and Esarhaddon his son reigned in his stead.
1Raajaavaakiya esekkiyaa athaikkaettapothu than vasthirangalaik kiliththu, irattu uduththukkonndu, karththarutaiya aalayaththil piravaesiththu,And it came to pass, when king Hezekiah heard it, that he rent his clothes, and covered himself with sackcloth, and went into the house of the LORD.
2Aramanai visaarippukkaaranaakiya eliyaakgeemaiyum, sampirathiyaakiya sepnaavaiyum, aasaariyarkalin moopparaiyum, aamothsin kumaaranaakiya aesaayaa ennum theerkkatharisiyinidaththirku irattu uduththavarkalaaka anuppinaan.And he sent Eliakim, who was over the household, and Shebna the scribe, and the elders of the priests covered with sackcloth, unto Isaiah the prophet the son of Amoz.
3Ivarkal avanai Nnokki: inthanaal nerukkamum, kanntithamum, thooshanamum anupavikkira naal; pillaippaeraு Nnokkiyirukkirathu; peravo pelan illai.And they said unto him, Thus saith Hezekiah, This day is a day of trouble, and of rebuke, and of blasphemy: for the children are come to the birth, and there is not strength to bring forth.
4Jeevanulla thaevanai ninthikkumpati, aseeriyaa raajaavaakiya than aanndavanaal anuppappatta rapsaakkae sonna vaarththaikalai umathu thaevanaakiya Karththar kaettirukkiraar; umathu thaevanaakiya Karththar kaettirukkira vaarththaikalinimiththam thanndanaiseyvaar; aakaiyaal, innum meethiyaayirukkiravarkalukkaaka vinnnappanjaெyveeraaka entu esekkiyaa sollachchaொnnaar entarkal.It may be the LORD thy God will hear the words of Rabshakeh, whom the king of Assyria his master hath sent to reproach the living God, and will reprove the words which the LORD thy God hath heard: wherefore lift up thy prayer for the remnant that is left.
5Ivvithamaay esekkiyaa raajaavin ooliyakkaarar aesaayaavinidaththil vanthu sonnaarkal.So the servants of king Hezekiah came to Isaiah.
6Appoluthu aesaayaa avarkalaiNnokki: aseeriyaa raajaavin ooliyakkaarar ennaith thooshiththathum neer kaettathumaana vaarththaikalinaalae payappadaathaeyum.And Isaiah said unto them, Thus shall ye say unto your master, Thus saith the LORD, Be not afraid of the words that thou hast heard, wherewith the servants of the king of Assyria have blasphemed me.
7Itho, avan oru seythiyaikkaettu, than thaesaththukkuth thirumpuvatharkaana aaviyai naan avanukkul anuppi, avanai avan thaesaththilae pattayaththaal vilappannnuvaen entu Karththar uraikkiraar enpathai ungal aanndavanidaththil sollungal entan.Behold, I will send a blast upon him, and he shall hear a rumour, and return to his own land; and I will cause him to fall by the sword in his own land.
8Aseeriyaa raajaa laageesaivittup purappattan entu kaelvippattu, rapsaakkae thirumpippoy, avan lipnaavinmael yuththampannnukirathaik kanndaan.So Rabshakeh returned, and found the king of Assyria warring against Libnah: for he had heard that he was departed from Lachish.
9Appoluthu, eththiyoppiyaavin raajaavaakiya thiraakkaa ummodu yuththampannnap purappattan entu sollak kaelvippattan; athaik kaettapothu avan esekkiyaavinidaththukku sthaanaapathikalai anuppi:And he heard say concerning Tirhakah king of Ethiopia, He is come forth to make war with thee. And when he heard it, he sent messengers to Hezekiah, saying,
10Neengal yoothaavin raajaavaakiya esekkiyaavukkuch sollavaenntiyathu ennavental, Jerusalem aseeriyaa raajaavin kaiyil oppukkodukkappaduvathillai entu nee nampiyirukkira un Dhevan unnai eththavottathae.Thus shall ye speak to Hezekiah king of Judah, saying, Let not thy God, in whom thou trustest, deceive thee, saying, Jerusalem shall not be given into the hand of the king of Assyria.
11Itho, aseeriyaa raajaakkal sakala thaesangalaiyum sangariththa seythiyai nee kaelvippattirukkiraay; nee thappuvaayo?Behold, thou hast heard what the kings of Assyria have done to all lands by destroying them utterly; and shalt thou be delivered?
12En pithaakkal aliththuvitta kosaanaiyum, aaraanaiyum raethseppaiyum, thelaasaariliruntha aethaenin puththiraraiyum avarkalutaiya thaevarkal thappuviththathunntoo?Have the gods of the nations delivered them which my fathers have destroyed, as Gozan, and Haran, and Rezeph, and the children of Eden which were in Telassar?
13Aamaaththin raajaavum, arpaaththin raajaavum, sepparvaayeem aenaa eevaa pattanangalin raajaavum engae entu sollungal entar.Where is the king of Hamath, and the king of Arphad, and the king of the city of Sepharvaim, Hena, and Ivah?
14Esekkiyaa sthaanaapathikalin kaiyiliruntha nirupaththai vaangi vaasiththaan; pinpu esekkiyaa karththarutaiya aalayaththirkup poy athaik karththarukku munpaaka viriththu,And Hezekiah received the letter from the hand of the messengers, and read it: and Hezekiah went up unto the house of the LORD, and spread it before the LORD.
15Karththarai Nnokki:And Hezekiah prayed unto the LORD, saying,
16Senaikalin karththaavae, kaerupeenkalin maththiyil vaasampannnukira isravaelin thaevanae, neer oruvarae poomiyin raajyangalukkellaam thaevanaanavar; neer vaanaththaiyum poomiyaiyum unndaakkineer.O LORD of hosts, God of Israel, that dwellest between the cherubims, thou art the God, even thou alone, of all the kingdoms of the earth: thou hast made heaven and earth.
17Karththaavae, umathu seviyaich saayththukkaelum; karththaavae, neer umathu kannkalaith thiranthupaarum, sanakerip jeevanulla thaevanai ninthikkumpatikkuch solliyanuppina vaarththaikalaiyellaam kaelum.Incline thine ear, O LORD, and hear; open thine eyes, O LORD, and see: and hear all the words of Sennacherib, which hath sent to reproach the living God.
18Karththaavae, aseeriyaa raajaakkal antha jaathikalaiyum, avarkal thaesaththaiyum naasamaakki,Of a truth, LORD, the kings of Assyria have laid waste all the nations, and their countries,
19Avarkalutaiya thaevarkalai neruppilae pottuvittathu meythaan; avaikal thaevarkal allavae, manushar kaivaeliyaana maramum kallunthaanae; aakaiyaal avaikalai neerththuliyaakkinaarkal.And have cast their gods into the fire: for they were no gods, but the work of men's hands, wood and stone: therefore they have destroyed them.
20Ippothum engal thaevanaakiya karththaavae, neer oruvarae Karththar entu poomiyin raajyangalellaam ariyumpatikku, engalai avan kaikku neengalaakki iratchiyum entu vinnnappampannnninaan.Now therefore, O LORD our God, save us from his hand, that all the kingdoms of the earth may know that thou art the LORD, even thou only.
21Appoluthu aamothsin kumaaranaakiya aesaayaa, esekkiyaavukkuch solliyanuppinathu: isravaelin thaevanaakiya Karththar uraikkirathu ennavental, aseeriyaa raajaavaakiya sanakeripinimiththam nee ennai Nnokki vinnnappampannnninaayae.Then Isaiah the son of Amoz sent unto Hezekiah, saying, Thus saith the LORD God of Israel, Whereas thou hast prayed to me against Sennacherib king of Assyria:
22Avanaikkuriththuk Karththar sollukira vasanamaavathu: seeyon kumaaraththiyaakiya kanniyaasthiree unnai ikalnthu, unnaip parikaasampannnukiraal; Jerusalem kumaaraththi un pinnaalae thalaiyaith thulukkukiraal.This is the word which the LORD hath spoken concerning him; The virgin, the daughter of Zion, hath despised thee, and laughed thee to scorn; the daughter of Jerusalem hath shaken her head at thee.
23Yaarai ninthiththuth thooshiththaay? Yaarukku virothamaay un saththaththai uyarththinaay? Nee isravaelin Parisuththarukku virothamaay allavo un kannkalai maettimaiyaay aeraெduththaay.Whom hast thou reproached and blasphemed? and against whom hast thou exalted thy voice, and lifted up thine eyes on high? even against the Holy One of Israel.
24Un ooliyakkaararaikkonndu aanndavarai ninthiththu: en irathangalin thiralinaalae naan malaikalin kodumutikalukkum leepanonin sikarangalukkum vanthu aerinaen; athin uyaramaana kaethurumarangalaiyum, uchchithamaana thaevathaaru virutchangalaiyum naan vetti, uyarntha athin kataisi ellaimattum, athin selumaiyaana vanamattum varuvaen entum,By thy servants hast thou reproached the Lord, and hast said, By the multitude of my chariots am I come up to the height of the mountains, to the sides of Lebanon; and I will cut down the tall cedars thereof, and the choice fir trees thereof: and I will enter into the height of his border, and the forest of his Carmel.
25Naan kinaraு vettith thannnneer kutiththaen; en ullangaalinaal arannippaana idangalin akalikalaiyellaam varalavum pannnninaen entum sonnaay.I have digged, and drunk water; and with the sole of my feet have I dried up all the rivers of the besieged places.
26Naan vekukaalaththukkumun athai niyamiththu, poorvanaatkalmuthal athaith thittampannnninaen enpathai nee kaettathillaiyo? Ippoluthu nee arannaana pattanangalaip paalaana mannmaedukalaakkumpati naanae athaich sampavikkappannnninaen.Hast thou not heard long ago, how I have done it; and of ancient times, that I have formed it? now have I brought it to pass, that thou shouldest be to lay waste defenced cities into ruinous heaps.
27Athinaalae avaikalin kutikal kaiyilaiththavarkalaaki, kalangi vetkappattu, veliyin poonndukkum, pachchilaikkum, veedukalinmael mulaikkum pullukkum ongi valarumun theeynthupom payirukkum samaanamaanaarkal.Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded: they were as the grass of the field, and as the green herb, as the grass on the housetops, and as corn blasted before it be grown up.
28Un iruppaiyum, un pokkaiyum, un varavaiyum, nee enakku virothamaayk konthalikkirathaiyum arivaen.But I know thy abode, and thy going out, and thy coming in, and thy rage against me.
29Nee enakku virothamaayk konthaliththu, veeriyampaesinathu en sevikalil aerinapatiyinaalae, naan en thurattaை un mookkilum, en kativaalaththai un vaayilum pottu, nee vantha valiyae unnaith thirumpappannnuvaen.Because thy rage against me, and thy tumult, is come up into mine ears, therefore will I put my hook in thy nose, and my bridle in thy lips, and I will turn thee back by the way by which thou camest.
30Unakku ataiyaalamaayiruppathu ennavental: intha varushaththilae thappip payiraakirathaiyum, iranndaam varushaththilae thaanaay vilaikirathaiyum saappiduveerkal; moontam varushaththilo vithaiththu araுththu, thiraatchaththottangalai naatti, avaikalin kanikalaip pusippeerkal.And this shall be a sign unto thee, Ye shall eat this year such as groweth of itself; and the second year that which springeth of the same: and in the third year sow ye, and reap, and plant vineyards, and eat the fruit thereof.
31Yoothaa vamsaththaaril thappi meenthirukkiravarkal maraுpatiyum geelae vaerpatti maelae kanikoduppaarkal.And the remnant that is escaped of the house of Judah shall again take root downward, and bear fruit upward:
32Meethiyaayirukkiravarkal erusalaemilum, thappinavarkal seeyon malaiyilumirunthu purappapaduvaarkal; senaikalutaiya karththarin vairaakkiyam ithaich seyyum.For out of Jerusalem shall go forth a remnant, and they that escape out of mount Zion: the zeal of the LORD of hosts shall do this.
33Aakaiyaal Karththar aseeriyaa raajaavaikkuriththu: avan intha nakaraththukkul piravaesippathillai; ithinmael ampu eyvathumillai; itharkumunpaakak kaedakaththotae varuvathumillai; itharku ethiraakak koththalampoduvathumillai.Therefore thus saith the LORD concerning the king of Assyria, He shall not come into this city, nor shoot an arrow there, nor come before it with shields, nor cast a bank against it.
34Avan intha nakaraththukkul piravaesiyaamal thaan vanthavaliyae thirumpippovaan.By the way that he came, by the same shall he return, and shall not come into this city, saith the LORD.
35Ennimiththamum en thaasanaakiya thaaveethinimiththamum, naan intha nakaraththai iratchikkumpatikku itharku aatharavaayiruppaen enpathaik Karththar uraikkiraar entu solliyanuppinaan.For I will defend this city to save it for mine own sake, and for my servant David's sake.
36Appoluthu karththarutaiya thoothan purappattu, aseeriyarin paalayaththil latchaththennpaththaiyaayirampaeraich sangariththaan; athikaalamae elunthirukkumpothu, itho, avarkalellaarum seththa piraethangalaayk kidanthaarkal.Then the angel of the LORD went forth, and smote in the camp of the Assyrians a hundred and fourscore and five thousand: and when they arose early in the morning, behold, they were all dead corpses.
37Appoluthu aseeriyaa raajaavaakiya sanakerip pirayaanappattuth thirumpippoy, ninivaeyil irunthuvittan.So Sennacherib king of Assyria departed, and went and returned, and dwelt at Nineveh.
38Avan than thaevanaakiya nisrokin kovililae panninthukollukirapothu, avan kumaararaakiya athramalaekkum saraethserum avanaip pattayaththinaal vettippottu, araraath thaesaththukkuth thappi otipponaarkal; avan kumaaranaakiya esaraththon avan pattaththirku vanthu arasaanndaan.And it came to pass, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer his sons smote him with the sword; and they escaped into the land of Armenia: and Esarhaddon his son reigned in his stead.