1 நாளாகமம் 13:6
கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப்போனார்கள்.
Tamil Indian Revised Version
கேருபீன்களின் நடுவே வாசம்செய்கிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்த இடத்திற்குப் போனார்கள்.
Tamil Easy Reading Version
தாவீதும் அவனோடு இருந்த மற்ற இஸ்ரவேலர்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். (பாலா என்பது கீரியாத்யாரீமின் இன்னொரு பெயர்) உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர அவர்கள் அங்கே போனார்கள். உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனாகிய கர்த்தருடைய பெட்டி. அவர் கேருபீன்களுக்கு மேலே அமர்ந்திருக்கிறார். இப்பெட்டி கர்த்தருடைய நாமத்தாலேயே அழைக்கப்படுகிறது.
திருவிவிலியம்
பின்னர், கெருபுகள் மேல் வீற்றிருக்கும் ஆண்டவர் பெயர் தாங்கிய கடவுளின் பேழையை யூதாவைச் சார்ந்த கிரியத் எயாரிம் என்னும் பாகாலாவிலிருந்து எடுத்துக்கொண்டு வரும்படி தாவீதும் இஸ்ரயேல் அனைவரும் அவ்விடத்துக்குச் சென்றனர்.
King James Version (KJV)
And David went up, and all Israel, to Baalah, that is, to Kirjathjearim, which belonged to Judah, to bring up thence the ark of God the LORD, that dwelleth between the cherubim, whose name is called on it.
American Standard Version (ASV)
And David went up, and all Israel, to Baalah, `that is’, to Kiriath-jearim, which belonged to Judah, to bring up from thence the ark of God Jehovah that sitteth `above’ the cherubim, that is called by the Name.
Bible in Basic English (BBE)
And David went up, with all Israel, to Baalah, that is, to Kiriath-jearim in Judah, to get up from there the ark of God, over which the holy Name is named, the name of the Lord whose place is between the winged ones.
Darby English Bible (DBY)
And David went up, and all Israel, to Baalah, to Kirjath-jearim, which belonged to Judah, to bring up from thence the ark of God, of Jehovah, who sitteth between the cherubim, whose name is placed [there].
Webster’s Bible (WBT)
And David went up, and all Israel, to Baalah, that is, to Kirjath-jearim, which belonged to Judah, to bring up thence the ark of God the LORD, that dwelleth between the cherubim, whose name is called on it.
World English Bible (WEB)
David went up, and all Israel, to Baalah, [that is], to Kiriath Jearim, which belonged to Judah, to bring up from there the ark of God Yahweh that sits [above] the cherubim, that is called by the Name.
Young’s Literal Translation (YLT)
and David goeth up, and all Israel, to Baalah, unto Kirjath-Jearim that `is’ to Judah, to bring up thence the ark of God Jehovah, inhabiting the cherubs, where the Name is called on.
1 நாளாகமம் 1 Chronicles 13:6
கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப்போனார்கள்.
And David went up, and all Israel, to Baalah, that is, to Kirjathjearim, which belonged to Judah, to bring up thence the ark of God the LORD, that dwelleth between the cherubim, whose name is called on it.
| וַיַּ֨עַל | wayyaʿal | va-YA-al | |
| דָּוִ֤יד | dāwîd | da-VEED | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בַּֽעֲלָ֔תָה | baʿălātâ | ba-uh-LA-ta | |
| אֶל | ʾel | el | |
| קִרְיַ֥ת | qiryat | keer-YAHT | |
| יְעָרִ֖ים | yĕʿārîm | yeh-ah-REEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| לִֽיהוּדָ֑ה | lîhûdâ | lee-hoo-DA | |
| לְהַֽעֲל֣וֹת | lĕhaʿălôt | leh-ha-uh-LOTE | |
| מִשָּׁ֗ם | miššām | mee-SHAHM | |
| אֵת֩ | ʾēt | ate | |
| אֲר֨וֹן | ʾărôn | uh-RONE | |
| הָֽאֱלֹהִ֧ים׀ | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| יוֹשֵׁ֥ב | yôšēb | yoh-SHAVE | |
| הַכְּרוּבִ֖ים | hakkĕrûbîm | ha-keh-roo-VEEM | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| נִקְרָ֥א | niqrāʾ | neek-RA | |
| שֵֽׁם׃ | šēm | shame |
இணை வசனம்
Joshua 15:9
அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
2 Kings 19:15
கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.
Exodus 25:22
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.
1 Samuel 4:4
அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள்.
Joshua 15:60
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
Isaiah 37:16
சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.
Psalm 99:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார். பூமி அசைவதாக.
Psalm 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
1 Kings 8:16
அவர் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள ஒரு பட்டணத்தையும் தெரிந்துகொள்ளாமல் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிகாரியாயிருக்கும்படி தாவீதையே தெரிந்துகொண்டேன் என்றார்.
2 Samuel 6:2
கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,
Numbers 7:89
மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்.
Numbers 6:27
இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.
Exodus 23:21
அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.
Exodus 20:24
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
Tags கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப்போனார்கள்
1 நாளாகமம் 13:6 Concordance 1 நாளாகமம் 13:6 Interlinear 1 நாளாகமம் 13:6 Image