1 கொரிந்தியர் 14:8
அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?
Tamil Indian Revised Version
அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் போருக்கு ஆயத்தம் செய்வான்?
Tamil Easy Reading Version
யுத்தத்தின்போது எக்காள முழக்கம் சரியாக முழக்கப்படாவிட்டால் வீரர்களுக்குப் போருக்குத் தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் அதுவென்பது தெரிய வராது.
திருவிவிலியம்
எக்காளம் தெளிவாக முழங்காவிடில் யார் போருக்குத் தயாராவார்?
King James Version (KJV)
For if the trumpet give an uncertain sound, who shall prepare himself to the battle?
American Standard Version (ASV)
For if the trumpet give an uncertain voice, who shall prepare himself for war?
Bible in Basic English (BBE)
For if the war-horn gives out an uncertain note, who will get ready for the fight?
Darby English Bible (DBY)
For also, if the trumpet give an uncertain sound, who shall prepare himself for war?
World English Bible (WEB)
For if the trumpet gave an uncertain sound, who would prepare himself for war?
Young’s Literal Translation (YLT)
for if also an uncertain sound a trumpet may give, who shall prepare himself for battle?
1 கொரிந்தியர் 1 Corinthians 14:8
அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?
For if the trumpet give an uncertain sound, who shall prepare himself to the battle?
| καὶ | kai | kay | |
| γὰρ | gar | gahr | |
| ἐὰν | ean | ay-AN | |
| ἄδηλον | adēlon | AH-thay-lone | |
| φωνὴν | phōnēn | foh-NANE | |
| σάλπιγξ | salpinx | SAHL-peeng-ks | |
| δῷ | dō | thoh | |
| τίς | tis | tees | |
| παρασκευάσεται | paraskeuasetai | pa-ra-skave-AH-say-tay | |
| εἰς | eis | ees | |
| πόλεμον | polemon | POH-lay-mone |
இணை வசனம்
Numbers 10:9
உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.
Jeremiah 4:19
என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
Ephesians 6:11
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
Amos 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
Joel 2:1
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
Ezekiel 33:3
இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,
Isaiah 27:13
அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது அசீரியாதேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.
Job 39:24
கர்வமும் மூர்க்கமுங்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும்.
Nehemiah 4:18
கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.
Judges 7:16
அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,
Joshua 6:4
ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டுபோகவேண்டும்; ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.
Tags அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்
1 கொரிந்தியர் 14:8 Concordance 1 கொரிந்தியர் 14:8 Interlinear 1 கொரிந்தியர் 14:8 Image