உபாகமம் 18:1
லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.
Tamil Indian Revised Version
லேவியர்களாகிய ஆசாரியர்களும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலிகளையும் அவருக்கு உரிமையானவைகளையும் அவர்கள் சாப்பிடலாம்.
Tamil Easy Reading Version
“லேவியின் கோத்திரம் இஸ்ரவேலில் எவ்வித சொத்தும், நிலமும் பெறுவதில்லை. அவர்கள் ஆசாரியா்களாக சேவை செய்வார்கள். தகன பலியாகக் கர்த்தருக்குச் செலுத்தும் உணவுப் பொருட்களே இவர்களுக்கு பிழைப்பூட்டும் சுதந்திர வீதமாக இருக்கிறது. அதுவே லேவியர்களின் பங்கு ஆகும்.
திருவிவிலியம்
லேவிய குருக்களுக்கும் அனைத்து லேவிய குலத்தாருக்கும் இஸ்ரயேல் மக்களிடையே பங்கும் சொத்துரிமையும் இல்லை. ஆண்டவருக்கெனச் செலுத்தப்படும் எரிபலிகளையும் அவருக்கே உரியவைகளையும் அவர்கள் உண்பார்கள்.
Title
ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு அளித்தல்
Other Title
குருக்களுக்கான பங்கு
King James Version (KJV)
The priests the Levites, and all the tribe of Levi, shall have no part nor inheritance with Israel: they shall eat the offerings of the LORD made by fire, and his inheritance.
American Standard Version (ASV)
The priests the Levites, `even’ all the tribe of Levi, shall have no portion nor inheritance with Israel: they shall eat the offerings of Jehovah made by fire, and his inheritance.
Bible in Basic English (BBE)
The priests, the Levites, that is, all the tribe of Levi, will have no part or heritage with Israel: their food and their heritage will be the offerings of the Lord made by fire.
Darby English Bible (DBY)
The priests, the Levites, [and] the whole tribe of Levi, shall have no portion nor inheritance with Israel: Jehovah’s offerings by fire, and his inheritance shall they eat,
Webster’s Bible (WBT)
The priests the Levites, and all the tribe of Levi, shall have no part nor inheritance with Israel: they shall eat the offerings of the LORD made by fire, and his inheritance.
World English Bible (WEB)
The priests the Levites, [even] all the tribe of Levi, shall have no portion nor inheritance with Israel: they shall eat the offerings of Yahweh made by fire, and his inheritance.
Young’s Literal Translation (YLT)
`There is not to the priests the Levites — all the tribe of Levi — a portion and inheritance with Israel; fire-offerings of Jehovah, even His inheritance, they eat,
உபாகமம் Deuteronomy 18:1
லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.
The priests the Levites, and all the tribe of Levi, shall have no part nor inheritance with Israel: they shall eat the offerings of the LORD made by fire, and his inheritance.
| לֹֽא | lōʾ | loh | |
| יִ֠הְיֶה | yihye | YEE-yeh | |
| לַכֹּֽהֲנִ֨ים | lakkōhănîm | la-koh-huh-NEEM | |
| הַלְוִיִּ֜ם | halwiyyim | hahl-vee-YEEM | |
| כָּל | kāl | kahl | |
| שֵׁ֧בֶט | šēbeṭ | SHAY-vet | |
| לֵוִ֛י | lēwî | lay-VEE | |
| חֵ֥לֶק | ḥēleq | HAY-lek | |
| וְנַֽחֲלָ֖ה | wĕnaḥălâ | veh-na-huh-LA | |
| עִם | ʿim | eem | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אִשֵּׁ֧י | ʾiššê | ee-SHAY | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| וְנַֽחֲלָת֖וֹ | wĕnaḥălātô | veh-na-huh-la-TOH | |
| יֹֽאכֵלֽוּן׃ | yōʾkēlûn | YOH-hay-LOON |
இணை வசனம்
Deuteronomy 10:9
ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.
Joshua 13:14
லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.
Deuteronomy 12:19
நீ உன் தேசத்திலுருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
Numbers 18:20
பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.
Numbers 18:8
பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.
1 Peter 5:2
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
1 Corinthians 9:13
ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
Joshua 18:7
லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியப்பட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.
Joshua 13:33
லேவிகோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்தரம்.
Numbers 26:62
அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.
Tags லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக
உபாகமம் 18:1 Concordance உபாகமம் 18:1 Interlinear உபாகமம் 18:1 Image