பிரசங்கி 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
Tamil Indian Revised Version
இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை.
Tamil Easy Reading Version
உன் உடல் பூமியிலிருந்து வந்தது. நீ மரித்துப் போகும்போது, உன் உடல் திரும்பவும் மண்ணுக்குப் போகும். ஆனால் உனது ஆவி தேவனிடமிருந்து வந்தது. நீ மரித்துப் போகும்போது உனது ஆவி திரும்பவும் தேவனிடமே போகும்.
திருவிவிலியம்
மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்புமுன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
King James Version (KJV)
Then shall the dust return to the earth as it was: and the spirit shall return unto God who gave it.
American Standard Version (ASV)
and the dust returneth to the earth as it was, and the spirit returneth unto God who gave it.
Bible in Basic English (BBE)
And the dust goes back to the earth as it was, and the spirit goes back to God who gave it.
Darby English Bible (DBY)
and the dust return to the earth as it was, and the spirit return unto God who gave it.
World English Bible (WEB)
And the dust returns to the earth as it was, And the spirit returns to God who gave it.
Young’s Literal Translation (YLT)
And the dust returneth to the earth as it was, And the spirit returneth to God who gave it.
பிரசங்கி Ecclesiastes 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
Then shall the dust return to the earth as it was: and the spirit shall return unto God who gave it.
| וְיָשֹׁ֧ב | wĕyāšōb | veh-ya-SHOVE | |
| הֶעָפָ֛ר | heʿāpār | heh-ah-FAHR | |
| עַל | ʿal | al | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| כְּשֶׁהָיָ֑ה | kĕšehāyâ | keh-sheh-ha-YA | |
| וְהָר֣וּחַ | wĕhārûaḥ | veh-ha-ROO-ak | |
| תָּשׁ֔וּב | tāšûb | ta-SHOOV | |
| אֶל | ʾel | el | |
| הָאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| נְתָנָֽהּ׃ | nĕtānāh | neh-ta-NA |
இணை வசனம்
Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
Psalm 146:4
அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.
Genesis 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
Zechariah 12:1
இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;
Daniel 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
Isaiah 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
Ecclesiastes 3:20
எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.
Job 34:14
அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாய்த் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
Hebrews 12:23
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணமாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
Hebrews 12:9
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
Psalm 90:3
நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி மனுபுத்திரரே திரும்புங்கள் என்கிறீர்.
Jeremiah 38:16
அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான்.
Job 20:11
அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
Job 7:21
என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.
Job 4:19
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
Numbers 27:16
கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,
Numbers 16:22
அப்பொழுது அவர்கள் முகங்குப்புறவிழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.
Genesis 18:27
அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
Tags இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும் அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை
பிரசங்கி 12:7 Concordance பிரசங்கி 12:7 Interlinear பிரசங்கி 12:7 Image