Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 20:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 20 எசேக்கியேல் 20:20

எசேக்கியேல் 20:20
என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.

Tamil Indian Revised Version
என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படி அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும் என்றேன்.

Tamil Easy Reading Version
எனது ஓய்வுக்குரிய நாட்கள் எல்லாம் முக்கியமானவை என்று காட்டுங்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே அவை சிறப்பான அடையாளங்களாக இருப்பதை நினைவுகொள்ளுங்கள். நானே கர்த்தர். அவ்விடுமுறைகள் நானே உங்கள் தேவன் என்பதைக் காட்டும்.”

திருவிவிலியம்
என் ஓய்வு நாள்களைப் புனிதப்படுத்தங்கள். அவை எனக்கும் உங்களுக்குமிடையே ஓர் அடையாளமாகத் திகழும். அப்போது நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள், என்று நான் கூறினேன்.

Ezekiel 20:19Ezekiel 20Ezekiel 20:21

King James Version (KJV)
And hallow my sabbaths; and they shall be a sign between me and you, that ye may know that I am the LORD your God.

American Standard Version (ASV)
and hallow my sabbaths; and they shall be a sign between me and you, that ye may know that I am Jehovah your God.

Bible in Basic English (BBE)
And keep my Sabbaths holy; and they will be a sign between me and you so that it may be clear to you that I am the Lord your God.

Darby English Bible (DBY)
and hallow my sabbaths; and they shall be a sign between me and you, that ye may know that I [am] Jehovah your God.

World English Bible (WEB)
and make my Sabbaths holy; and they shall be a sign between me and you, that you may know that I am Yahweh your God.

Young’s Literal Translation (YLT)
And My sabbaths sanctify, And they have been for a sign between Me and you, To know that I, Jehovah, `am’ your God.

எசேக்கியேல் Ezekiel 20:20
என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
And hallow my sabbaths; and they shall be a sign between me and you, that ye may know that I am the LORD your God.

וְאֶתwĕʾetveh-ET
שַׁבְּתוֹתַ֖יšabbĕtôtaysha-beh-toh-TAI
קַדֵּ֑שׁוּqaddēšûka-DAY-shoo
וְהָי֤וּwĕhāyûveh-ha-YOO
לְאוֹת֙lĕʾôtleh-OTE
בֵּינִ֣יbênîbay-NEE
וּבֵֽינֵיכֶ֔םûbênêkemoo-vay-nay-HEM
לָדַ֕עַתlādaʿatla-DA-at
כִּ֛יkee
אֲנִ֥יʾănîuh-NEE
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֱלֹהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-loh-hay-HEM

இணை வசனம்

Jeremiah 17:22
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Ezekiel 20:12
நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்கு, கட்டளையிட்டேன்.

Exodus 20:11
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

Exodus 31:13
நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.

Nehemiah 13:15
அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும் திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.

Isaiah 58:13
என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,

Jeremiah 17:24
நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,

Jeremiah 17:27
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Ezekiel 44:24
வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள்.


Tags என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள் நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்
எசேக்கியேல் 20:20 Concordance எசேக்கியேல் 20:20 Interlinear எசேக்கியேல் 20:20 Image