Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 7:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 7 எஸ்றா 7:1

எஸ்றா 7:1
இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்.

Tamil Indian Revised Version
இந்தக் காரியங்களுக்குப்பின்பு, செராயாவின் மகனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன்,

Tamil Easy Reading Version
பெர்சியாவின் அரசனான அர்தசஷ்டா அரசாளும் காலத்தில், இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு, செராயாவின் மகன் எஸ்றா, பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். இந்த செராயா அசீரியாவின் மகன், அசீரியா இல்க்கியாவின் மகன்,

திருவிவிலியம்
இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார்.

Title
எஸ்றா எருசலேமிற்கு வருகிறான்

Other Title
எஸ்ரா எருசலேமுக்கு வருதல்

Ezra 7Ezra 7:2

King James Version (KJV)
Now after these things, in the reign of Artaxerxes king of Persia, Ezra the son of Seraiah, the son of Azariah, the son of Hilkiah,

American Standard Version (ASV)
Now after these things, in the reign of Artaxerxes king of Persia, Ezra the son of Seraiah, the son of Azariah, the son of Hilkiah,

Bible in Basic English (BBE)
Now after these things, when Artaxerxes was king of Persia, Ezra, the son of Seraiah, the son of Azariah, the son of Hilkiah,

Darby English Bible (DBY)
And after these things, in the reign of Artaxerxes, king of Persia, Ezra the son of Seraiah, the son of Azariah, the son of Hilkijah,

Webster’s Bible (WBT)
Now after these things, in the reign of Artaxerxes king of Persia, Ezra the son of Seraiah, the son of Azariah, the son of Hilkiah,

World English Bible (WEB)
Now after these things, in the reign of Artaxerxes king of Persia, Ezra the son of Seraiah, the son of Azariah, the son of Hilkiah,

Young’s Literal Translation (YLT)
And after these things, in the reign of Artaxerxes king of Persia, Ezra son of Seraiah, son of Azariah, son of Hilkiah,

எஸ்றா Ezra 7:1
இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்.
Now after these things, in the reign of Artaxerxes king of Persia, Ezra the son of Seraiah, the son of Azariah, the son of Hilkiah,

וְאַחַר֙wĕʾaḥarveh-ah-HAHR
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
בְּמַלְכ֖וּתbĕmalkûtbeh-mahl-HOOT
אַרְתַּחְשַׁ֣סְתְּאʾartaḥšastĕʾar-tahk-SHAHS-teh
מֶֽלֶךְmelekMEH-lek
פָּרָ֑סpārāspa-RAHS
עֶזְרָא֙ʿezrāʾez-RA
בֶּןbenben
שְׂרָיָ֔הśĕrāyâseh-ra-YA
בֶּןbenben
עֲזַרְיָ֖הʿăzaryâuh-zahr-YA
בֶּןbenben
חִלְקִיָּֽה׃ḥilqiyyâheel-kee-YA

இணை வசனம்

Nehemiah 2:1
அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.

1 Chronicles 6:4
எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.

Ezra 7:21
நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறுதாலந்து வெள்ளி, ஆற்றுக்கலக்கோதுமை, நூற்றுக்கலத் திராட்சரசம், நூற்றுக்கல எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,

Ezra 7:12
ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

Ezra 6:14
அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.

2 Kings 22:4
நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல்காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,

Jeremiah 52:24
காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

Nehemiah 11:11
அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,

Nehemiah 8:2
அப்படியே ஏழாம் மாதம் முதல்தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து,

Ezra 8:1
அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடேகூட வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன:

Ezra 7:10
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.

2 Chronicles 34:15
அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான்.

2 Chronicles 34:9
அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து,

1 Chronicles 9:11
அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக் கர்த்தன்.

2 Kings 25:18
காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.

2 Kings 22:8
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டு பிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான்.


Tags இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு செராயாவின் குமாரனாகிய எஸ்றா பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான் இந்தச் செராயா அசரியாவின் குமாரன் இவன் இல்க்கியாவின் குமாரன்
எஸ்றா 7:1 Concordance எஸ்றா 7:1 Interlinear எஸ்றா 7:1 Image