யோபு 32:21
நான் ஒருவனுடைய முகத்தைப்பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
Tamil Indian Revised Version
நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக.
Tamil Easy Reading Version
பிறரை நடத்துவதைப்போல், நான் யோபுவையும் நடத்தவேண்டும். அவனிடம் நல்லவற்றைச் சொல்ல நான் முயலமாட்டேன். நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன்.
திருவிவிலியம்
⁽நான் யாரிடமும்␢ ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்;␢ நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.⁾
King James Version (KJV)
Let me not, I pray you, accept any man’s person, neither let me give flattering titles unto man.
American Standard Version (ASV)
Let me not, I pray you, respect any man’s person; Neither will I give flattering titles unto any man.
Bible in Basic English (BBE)
Let me not give respect to any man, or give names of honour to any living.
Darby English Bible (DBY)
Let me not, I pray you, accept any man’s person; neither will I give flattery to man.
Webster’s Bible (WBT)
Let me not, I pray you, accept any man’s person, neither let me give flattering titles to man.
World English Bible (WEB)
Please don’t let me respect any man’s person, Neither will I give flattering titles to any man.
Young’s Literal Translation (YLT)
Let me not, I pray you, accept the face of any, Nor unto man give flattering titles,
யோபு Job 32:21
நான் ஒருவனுடைய முகத்தைப்பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
Let me not, I pray you, accept any man's person, neither let me give flattering titles unto man.
| אַל | ʾal | al | |
| נָ֭א | nāʾ | na | |
| אֶשָּׂ֣א | ʾeśśāʾ | eh-SA | |
| פְנֵי | pĕnê | feh-NAY | |
| אִ֑ישׁ | ʾîš | eesh | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| אָ֝דָ֗ם | ʾādām | AH-DAHM | |
| לֹ֣א | lōʾ | loh | |
| אֲכַנֶּֽה׃ | ʾăkanne | uh-ha-NEH |
இணை வசனம்
Leviticus 19:15
நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
Matthew 22:16
தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
Job 34:19
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
Job 13:8
அவருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
Acts 24:2
அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
Acts 12:22
அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
Proverbs 24:23
பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.
Job 13:10
நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
2 Samuel 14:20
நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.
2 Samuel 14:17
ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்குமென்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்ப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றாள்.
Deuteronomy 16:19
நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.
Deuteronomy 1:17
நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோல சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்களாக: நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,
Tags நான் ஒருவனுடைய முகத்தைப்பாராமலும் ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக
யோபு 32:21 Concordance யோபு 32:21 Interlinear யோபு 32:21 Image