புலம்பல் 1:12
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
Tamil Indian Revised Version
வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? கர்த்தர் தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால் எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
Tamil Easy Reading Version
சாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே, நீங்கள் எனக்காக கவலைப்படுகின்றவர்களாக தெரியவில்லை. ஆனால் என்னைப் பாருங்கள். எனது வலியைப்போன்று வேறுவலி உண்டோ? எனக்கு வந்திருக்கிற வலியைப்போன்று வேறுவலி இருக்கிறதா? கர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறது போன்றவலி வேறு உள்ளதோ? அவர் தனது பெருங்கோபமான நாளில் என்னைத் தண்டித்திருக்கிறார்.
திருவிவிலியம்
⁽இவ்வழியாய்க் கடந்து செல்வோரே!␢ உங்களுக்குக் கவலை இல்லையா?␢ அனைவரும் உற்றுப் பாருங்கள்!␢ எனக்கு வந்துற்ற துயர்போல␢ வேறேதும் துயர் உண்டோ?␢ ஆண்டவர் தம் வெஞ்சின நாளில்␢ என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினார்.⁾
King James Version (KJV)
Is it nothing to you, all ye that pass by? behold, and see if there be any sorrow like unto my sorrow, which is done unto me, wherewith the LORD hath afflicted me in the day of his fierce anger.
American Standard Version (ASV)
Is it nothing to you, all ye that pass by? Behold, and see if there be any sorrow like unto my sorrow, which is brought upon me, Wherewith Jehovah hath afflicted `me’ in the day of his fierce anger.
Bible in Basic English (BBE)
Come to me, all you who go by! Keep your eyes on me, and see if there is any pain like the pain of my wound, which the Lord has sent on me in the day of his burning wrath.
Darby English Bible (DBY)
Is it nothing to you, all ye that pass by? Behold, and see if there be any sorrow like unto my sorrow, which is done unto me, whom Jehovah hath afflicted in the day of his fierce anger.
World English Bible (WEB)
Is it nothing to you, all you who pass by? Look, and see if there be any sorrow like my sorrow, which is brought on me, With which Yahweh has afflicted [me] in the day of his fierce anger.
Young’s Literal Translation (YLT)
`Is it’ nothing to you, all ye passing by the way? Look attentively, and see, If there is any pain like my pain, That He is rolling to me? Whom Jehovah hath afflicted In the day of the fierceness of His anger.
புலம்பல் Lamentations 1:12
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
Is it nothing to you, all ye that pass by? behold, and see if there be any sorrow like unto my sorrow, which is done unto me, wherewith the LORD hath afflicted me in the day of his fierce anger.
| ל֣וֹא | lôʾ | loh | |
| אֲלֵיכֶם֮ | ʾălêkem | uh-lay-HEM | |
| כָּל | kāl | kahl | |
| עֹ֣בְרֵי | ʿōbĕrê | OH-veh-ray | |
| דֶרֶךְ֒ | derek | deh-rek | |
| הַבִּ֣יטוּ | habbîṭû | ha-BEE-too | |
| וּרְא֗וּ | ûrĕʾû | oo-reh-OO | |
| אִם | ʾim | eem | |
| יֵ֤שׁ | yēš | yaysh | |
| מַכְאוֹב֙ | makʾôb | mahk-OVE | |
| כְּמַכְאֹבִ֔י | kĕmakʾōbî | keh-mahk-oh-VEE | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עוֹלַ֖ל | ʿôlal | oh-LAHL | |
| לִ֑י | lî | lee | |
| אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER | |
| הוֹגָ֣ה | hôgâ | hoh-ɡA | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| בְּי֖וֹם | bĕyôm | beh-YOME | |
| חֲר֥וֹן | ḥărôn | huh-RONE | |
| אַפּֽוֹ׃ | ʾappô | ah-poh |
இணை வசனம்
Daniel 9:12
எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.
Luke 23:28
இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
Isaiah 13:13
இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.
Jeremiah 18:16
நான் அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கவும், என்றென்றைக்கும் ஈசலிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் செய்யும்படி இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிற எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.
Jeremiah 30:24
கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை உணர்ந்து கொள்ளுவீர்கள்.
Lamentations 2:13
எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
Lamentations 4:6
கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
Matthew 24:21
ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
Luke 21:22
எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
Tags வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்
புலம்பல் 1:12 Concordance புலம்பல் 1:12 Interlinear புலம்பல் 1:12 Image