Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 17:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 17 மத்தேயு 17:18

மத்தேயு 17:18
இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.

Tamil Indian Revised Version
இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான்.

Tamil Easy Reading Version
இயேசு அப்பையனின் உடலுக்குள் இருந்த பிசாசுக்கு கண்டிப்பான கட்டளையிட்டார். பின் அப்பையனுக்குள்ளிருந்த பிசாசு வெளியேறியது. உடனே பையன் குணமடைந்தான்.

திருவிவிலியம்
கொண்டுவந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனைவிட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.

Matthew 17:17Matthew 17Matthew 17:19

King James Version (KJV)
And Jesus rebuked the devil; and he departed out of him: and the child was cured from that very hour.

American Standard Version (ASV)
And Jesus rebuked him; and the demon went out of him: and the boy was cured from that hour.

Bible in Basic English (BBE)
And Jesus gave orders to the unclean spirit, and it went out of him: and the boy was made well from that hour.

Darby English Bible (DBY)
And Jesus rebuked him, and the demon went out from him, and the boy was healed from that hour.

World English Bible (WEB)
Jesus rebuked him, the demon went out of him, and the boy was cured from that hour.

Young’s Literal Translation (YLT)
and Jesus rebuked him, and the demon went out of him, and the lad was healed from that hour.

மத்தேயு Matthew 17:18
இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.
And Jesus rebuked the devil; and he departed out of him: and the child was cured from that very hour.

καὶkaikay
ἐπετίμησενepetimēsenape-ay-TEE-may-sane
αὐτῷautōaf-TOH
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
καὶkaikay
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
ἀπ'apap
αὐτοῦautouaf-TOO
τὸtotoh
δαιμόνιονdaimonionthay-MOH-nee-one
καὶkaikay
ἐθεραπεύθηetherapeuthēay-thay-ra-PAYF-thay
hooh
παῖςpaispase
ἀπὸapoah-POH
τῆςtēstase
ὥραςhōrasOH-rahs
ἐκείνηςekeinēsake-EE-nase

இணை வசனம்

Matthew 9:22
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

Acts 19:13
அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்சிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.

Acts 16:18
இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப்புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.

John 4:52
அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.

Luke 9:42
அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

Luke 8:29
அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.

Luke 4:41
பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.

Luke 4:35
அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவிலே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.

Mark 9:25
அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

Mark 5:8
ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.

Mark 1:34
பலவிதமான வியாதிகளால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

Matthew 15:28
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

Matthew 12:22
அப்பொழுது பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.


Tags இயேசு பிசாசை அதட்டினார் உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்
மத்தேயு 17:18 Concordance மத்தேயு 17:18 Interlinear மத்தேயு 17:18 Image