Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 12:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 12 1 சாமுவேல் 12:8

1 சாமுவேல் 12:8
யாக்கோபு எகிப்திலே போயிருக்கும்போது, உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோரையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
யாக்கோபு எகிப்திற்கு போயிருக்கும்போது, உங்கள் முன்னோர்கள் கர்த்தரைப் பார்த்து முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த இடத்திலே குடியிருக்கச்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
“யாக்கோபு எகிப்துக்குப் போனார். பின்னர் எகிப்தியர்கள் அவருடைய சந்ததிகளுக்கு வாழ்க்கையை கடின மாக்கித் துன்புறுத்தினார்கள். கர்த்தரிடம் உதவிக்காக அழுதார்கள். கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார். அவர்கள் உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்துக் காப்பாற்றி இங்கே வாழும் பொருட்டு அழைத்து வந்தனர்.

திருவிவிலியம்
யாக்கோபு எகிப்திற்குச் சென்ற பின்,உங்கள் மூதாதையர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டபோது, அவர் மோசையையும் ஆரோனையும் அனுப்பினர். அவர்கள் உங்கள் மூதாதயரை எகிப்தினின்று கொண்டுவந்து இவ்விடத்தில் குடியேறச் செய்தார்.

1 Samuel 12:71 Samuel 121 Samuel 12:9

King James Version (KJV)
When Jacob was come into Egypt, and your fathers cried unto the LORD, then the LORD sent Moses and Aaron, which brought forth your fathers out of Egypt, and made them dwell in this place.

American Standard Version (ASV)
When Jacob was come into Egypt, and your fathers cried unto Jehovah, then Jehovah sent Moses and Aaron, who brought forth your fathers out of Egypt, and made them to dwell in this place.

Bible in Basic English (BBE)
When Jacob and his sons had come into Egypt, and were crushed by the Egyptians, the prayers of your fathers came up to the Lord, and the Lord sent Moses and Aaron, who took your fathers out of Egypt, and he put them into this place.

Darby English Bible (DBY)
When Jacob had come into Egypt, and your fathers cried to Jehovah, then Jehovah sent Moses and Aaron, and they brought your fathers forth out of Egypt, and made them dwell in this place.

Webster’s Bible (WBT)
When Jacob had come into Egypt, and your fathers cried to the LORD, then the LORD sent Moses and Aaron, who brought forth your fathers from Egypt, and made them dwell in this place.

World English Bible (WEB)
When Jacob was come into Egypt, and your fathers cried to Yahweh, then Yahweh sent Moses and Aaron, who brought forth your fathers out of Egypt, and made them to dwell in this place.

Young’s Literal Translation (YLT)
`When Jacob hath come in to Egypt, and your fathers cry unto Jehovah, then Jehovah sendeth Moses and Aaron, and they bring out your fathers from Egypt, and cause them to dwell in this place,

1 சாமுவேல் 1 Samuel 12:8
யாக்கோபு எகிப்திலே போயிருக்கும்போது, உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோரையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள்.
When Jacob was come into Egypt, and your fathers cried unto the LORD, then the LORD sent Moses and Aaron, which brought forth your fathers out of Egypt, and made them dwell in this place.

כַּֽאֲשֶׁרkaʾăšerKA-uh-sher
בָּ֥אbāʾba
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
וַיִּזְעֲק֤וּwayyizʿăqûva-yeez-uh-KOO
אֲבֽוֹתֵיכֶם֙ʾăbôtêkemuh-voh-tay-HEM
אֶלʾelel
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
יְהוָ֜הyĕhwâyeh-VA
אֶתʾetet
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
וְאֶֽתwĕʾetveh-ET
אַהֲרֹ֗ןʾahărōnah-huh-RONE
וַיּוֹצִ֤יאוּwayyôṣîʾûva-yoh-TSEE-oo
אֶתʾetet
אֲבֹֽתֵיכֶם֙ʾăbōtêkemuh-voh-tay-HEM
מִמִּצְרַ֔יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
וַיֹּֽשִׁב֖וּםwayyōšibûmva-yoh-shee-VOOM
בַּמָּק֥וֹםbammāqômba-ma-KOME
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

Exodus 4:14
அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.

Exodus 2:23
சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.

Acts 7:15
அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப்போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,

Psalm 105:44
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

Psalm 78:54
அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,

Psalm 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

1 Samuel 12:6
அப்புறம் சாமுவேல் ஜனங்களை நோக்கி: மோசேயையும் ஆரோனையும் ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே.

1 Samuel 10:18
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்.

Joshua 3:10
பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவிலே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:

Joshua 1:6
பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

Joshua 1:2
என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

Numbers 20:15
எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர் எங்களை எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது.

Exodus 14:30
இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.

Exodus 12:51
அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

Exodus 6:26
இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குகύ கΰ்ĠύΤРξல் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.

Exodus 4:27
கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.

Exodus 3:9
இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.

Genesis 46:5
அதற்குப் பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,


Tags யாக்கோபு எகிப்திலே போயிருக்கும்போது உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள் அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோரையும் அனுப்பினார் அவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள்
1 சாமுவேல் 12:8 Concordance 1 சாமுவேல் 12:8 Interlinear 1 சாமுவேல் 12:8 Image