Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 11:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 11 2 நாளாகமம் 11:4

2 நாளாகமம் 11:4
நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும் அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு போர்செய்யாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாக போர்செய்வதைத் தவிர்த்துத் திரும்பிப் போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் சொன்ன செய்திகள் இவை தான்: ‘உன் சகோதரர்களோடு நீ சண்டை போடாதே! ஒவ்வொருவரையும் தம் சொந்த வீட்டுக்குப் போகவிடு. நான் இவ்வாறு நிகழும்படிச் செய்தேன்.’” எனவே ரெகொபெயாமும் அவனது படையும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து திரும்பி வந்தது. அவர்கள் யெரொபெயாமைத் தாக்கவில்லை.

திருவிவிலியம்
‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் படையெடுத்துச் சென்று, உம் சகோதரருடன் போரிட வேண்டாம். அவரவர் தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; ஏனெனில், என்னாலேயே இச்செயல் நிகழ்ந்தது.” ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள், எரொபவாமுக்கு எதிராகச் செல்வதைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

2 Chronicles 11:32 Chronicles 112 Chronicles 11:5

King James Version (KJV)
Thus saith the LORD, Ye shall not go up, nor fight against your brethren: return every man to his house: for this thing is done of me. And they obeyed the words of the LORD, and returned from going against Jeroboam.

American Standard Version (ASV)
Thus saith Jehovah, Ye shall not go up, nor fight against your brethren: return every man to his house; for this thing is of me. So they hearkened unto the words of Jehovah, and returned from going against Jeroboam.

Bible in Basic English (BBE)
The Lord has said, You are not to go to war against your brothers: let every man go back to his house, for this thing is my purpose. So they gave ear to the words of the Lord and were turned back from fighting against Jeroboam.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Go not up, nor fight with your brethren; return every man to his house; for this thing is from me. And they hearkened to the words of Jehovah, and returned from going against Jeroboam.

Webster’s Bible (WBT)
Thus saith the LORD, Ye shall not go up, nor fight against your brethren: return every man to his house: for this thing is done by me. And they obeyed the words of the LORD, and returned from going against Jeroboam.

World English Bible (WEB)
Thus says Yahweh, You shall not go up, nor fight against your brothers: return every man to his house; for this thing is of me. So they listened to the words of Yahweh, and returned from going against Jeroboam.

Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah, Ye do not go up nor fight with your brethren, turn back each to his house, for from Me hath this thing been;’ and they hear the words of Jehovah, and turn back from going against Jeroboam.

2 நாளாகமம் 2 Chronicles 11:4
நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும் அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.
Thus saith the LORD, Ye shall not go up, nor fight against your brethren: return every man to his house: for this thing is done of me. And they obeyed the words of the LORD, and returned from going against Jeroboam.

כֹּ֣הkoh
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוָ֡הyĕhwâyeh-VA
לֹֽאlōʾloh
תַעֲלוּ֩taʿălûta-uh-LOO
וְלֹאwĕlōʾveh-LOH
תִלָּ֨חֲמ֜וּtillāḥămûtee-LA-huh-MOO
עִםʿimeem
אֲחֵיכֶ֗םʾăḥêkemuh-hay-HEM
שׁ֚וּבוּšûbûSHOO-voo
אִ֣ישׁʾîšeesh
לְבֵית֔וֹlĕbêtôleh-vay-TOH
כִּ֧יkee
מֵֽאִתִּ֛יmēʾittîmay-ee-TEE
נִֽהְיָ֖הnihĕyânee-heh-YA
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
הַזֶּ֑הhazzeha-ZEH
וַֽיִּשְׁמְעוּ֙wayyišmĕʿûva-yeesh-meh-OO
אֶתʾetet
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיָּשֻׁ֖בוּwayyāšubûva-ya-SHOO-voo
מִלֶּ֥כֶתmilleketmee-LEH-het
אֶלʾelel
יָֽרָבְעָֽם׃yārobʿāmYA-rove-AM

இணை வசனம்

2 Chronicles 28:8
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு, கொண்டுபோனார்கள்.

2 Chronicles 25:7
தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.

2 Chronicles 10:15
ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான், கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது.

1 Kings 11:29
அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிற போது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில்,

Genesis 50:20
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்

1 John 3:11
நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.

1 Peter 3:8
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,

Hebrews 13:1
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.

1 Corinthians 6:5
உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?

Acts 7:26
மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்: ஒருவருக்கொருவர் நியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.

Hosea 8:4
அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.

Psalm 33:11
கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

1 Kings 22:36
பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம் தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.

2 Samuel 2:26
அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு: பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்த மட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.

Genesis 13:8
ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.


Tags நீங்கள் போகாமலும் உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும் அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள் என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார் அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்
2 நாளாகமம் 11:4 Concordance 2 நாளாகமம் 11:4 Interlinear 2 நாளாகமம் 11:4 Image