Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 8:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 8 பிரசங்கி 8:13

பிரசங்கி 8:13
துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.

Tamil Indian Revised Version
துன்மார்க்கனோ நன்றாக இருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாமல் இருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாட்கள் நீடித்திருப்பதுமில்லை.

Tamil Easy Reading Version
தீயவர்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துவதில்லை. எனவே அவர்கள் நல்லவற்றைப் பெறுவதில்லை. அவர்கள் நீண்ட வாழ்க்கையைப் பெறுவதில்லை. சூரியன் அஸ்தமிக்கும்போது நிழல் நீண்டு தோன்றுவதுபோன்று, அவர்களின் வாழ்க்கை வளருவதில்லை.

திருவிவிலியம்
தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்; நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது. ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை.⒫

Ecclesiastes 8:12Ecclesiastes 8Ecclesiastes 8:14

King James Version (KJV)
But it shall not be well with the wicked, neither shall he prolong his days, which are as a shadow; because he feareth not before God.

American Standard Version (ASV)
but it shall not be well with the wicked, neither shall he prolong `his’ days, `which are’ as a shadow; because he feareth not before God.

Bible in Basic English (BBE)
But it will not be well for the evil-doer; he will not make his days long like a shade, because he has no fear before God.

Darby English Bible (DBY)
but it shall not be well with the wicked, neither shall he prolong [his] days as a shadow, because he feareth not before God.

World English Bible (WEB)
But it shall not be well with the wicked, neither shall he lengthen days like a shadow; because he doesn’t fear God.

Young’s Literal Translation (YLT)
And good is not to the wicked, and he doth not prolong days as a shadow, because he is not fearing before God.

பிரசங்கி Ecclesiastes 8:13
துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.
But it shall not be well with the wicked, neither shall he prolong his days, which are as a shadow; because he feareth not before God.

וְטוֹב֙wĕṭôbveh-TOVE
לֹֽאlōʾloh
יִהְיֶ֣הyihyeyee-YEH
לָֽרָשָׁ֔עlārāšāʿla-ra-SHA
וְלֹֽאwĕlōʾveh-LOH
יַאֲרִ֥יךְyaʾărîkya-uh-REEK
יָמִ֖יםyāmîmya-MEEM
כַּצֵּ֑לkaṣṣēlka-TSALE
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
אֵינֶ֥נּוּʾênennûay-NEH-noo
יָרֵ֖אyārēʾya-RAY
מִלִּפְנֵ֥יmillipnêmee-leef-NAY
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

இணை வசனம்

Ecclesiastes 6:12
நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?

Job 14:2
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.

Isaiah 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

2 Peter 2:3
பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

James 4:14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.

John 5:29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

Matthew 13:49
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,

Malachi 3:18
அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கும் ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.

Isaiah 57:21
துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.

Isaiah 30:13
இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்த்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப் போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.

Psalm 144:4
மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.

Psalm 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

Psalm 39:5
இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

Psalm 11:5
கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

Job 21:30
துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.

Job 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

Job 18:5
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.

Job 7:6
என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.


Tags துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை
பிரசங்கி 8:13 Concordance பிரசங்கி 8:13 Interlinear பிரசங்கி 8:13 Image