Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 3:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 3 எசேக்கியேல் 3:3

எசேக்கியேல் 3:3
மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன்னுடைய வயிற்றிற்கு உட்கொண்டு, அதினால் உன்னுடைய குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதை சாப்பிட்டேன்; அது என்னுடைய வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாக இருந்தது.

Tamil Easy Reading Version
பின்னர் தேவன், “மனுபுத்திரனே, நான் இந்தச் சுருளைக் கொடுக்கிறேன், இதை விழுங்கு. இது உன் உடலை நிரப்பட்டும்” என்றார். எனவே நான் சுருளைச் சாப்பிட்டேன். அது வாயிலே தேனைப்போன்று சுவையாக இருந்தது.

திருவிவிலியம்
மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது.

Ezekiel 3:2Ezekiel 3Ezekiel 3:4

King James Version (KJV)
And he said unto me, Son of man, cause thy belly to eat, and fill thy bowels with this roll that I give thee. Then did I eat it; and it was in my mouth as honey for sweetness.

American Standard Version (ASV)
And he said unto me, Son of man, cause thy belly to eat, and fill thy bowels with this roll that I give thee. Then did I eat it; and it was in my mouth as honey for sweetness.

Bible in Basic English (BBE)
And he said to me, Son of man, let your stomach make a meal of it and let your inside be full of this roll which I am giving you. Then I took it, and it was sweet as honey in my mouth.

Darby English Bible (DBY)
And he said unto me, Son of man, cause thy belly to eat, and fill thy bowels with this roll which I give thee. And I ate, and it was in my mouth as honey for sweetness.

World English Bible (WEB)
He said to me, Son of man, cause your belly to eat, and fill your bowels with this scroll that I give you. Then did I eat it; and it was in my mouth as honey for sweetness.

Young’s Literal Translation (YLT)
And He saith unto me, `Son of man, thy belly thou dost feed, and thy bowels thou dost fill with this roll that I am giving unto thee;’ and I eat it, and it is in my mouth as honey for sweetness.

எசேக்கியேல் Ezekiel 3:3
மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.
And he said unto me, Son of man, cause thy belly to eat, and fill thy bowels with this roll that I give thee. Then did I eat it; and it was in my mouth as honey for sweetness.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֗יʾēlayay-LAI
בֶּןbenben
אָדָם֙ʾādāmah-DAHM
בִּטְנְךָ֤biṭnĕkābeet-neh-HA
תַֽאֲכֵל֙taʾăkēlta-uh-HALE
וּמֵעֶ֣יךָûmēʿêkāoo-may-A-ha
תְמַלֵּ֔אtĕmallēʾteh-ma-LAY
אֵ֚תʾētate
הַמְּגִלָּ֣הhammĕgillâha-meh-ɡee-LA
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אֲנִ֖יʾănîuh-NEE
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
אֵלֶ֑יךָʾēlêkāay-LAY-ha
וָאֹ֣כְלָ֔הwāʾōkĕlâva-OH-heh-LA
וַתְּהִ֥יwattĕhîva-teh-HEE
בְּפִ֖יbĕpîbeh-FEE
כִּדְבַ֥שׁkidbaškeed-VAHSH
לְמָתֽוֹק׃lĕmātôqleh-ma-TOKE

இணை வசனம்

Jeremiah 15:16
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.

Revelation 10:9
நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.

Psalm 119:103
உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.

Psalm 19:10
அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.

Jeremiah 6:11
ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.

Colossians 3:16
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

John 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

John 6:53
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Ezekiel 2:10
அவர் அதை எனக்குமுன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.

Jeremiah 20:9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.

Proverbs 2:10
ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

Psalm 119:97
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

Psalm 119:11
நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

Job 32:18
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.

Job 23:12
அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.


Tags மனுபுத்திரனே நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார் அப்பொழுது நான் அதைப் புசித்தேன் அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது
எசேக்கியேல் 3:3 Concordance எசேக்கியேல் 3:3 Interlinear எசேக்கியேல் 3:3 Image