Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 3:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கலாத்தியர் கலாத்தியர் 3 கலாத்தியர் 3:2

கலாத்தியர் 3:2
ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?

Tamil Indian Revised Version
ஒன்றைமட்டும் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்கள்?

Tamil Easy Reading Version
இதைப்பற்றி எனக்குக் கூறுங்கள், பரிசுத்த ஆவியானவரை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஆவியானவரை ஏற்றுக்கொண்டீர்களா? இல்லை. நீங்கள் ஆவியைப் பெற்றீர்கள். ஏனென்றால் நீங்கள் நற்செய்தியைக் கேள்விப்பட்டு நம்பினீர்கள்.

திருவிவிலியம்
உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்; நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?

Galatians 3:1Galatians 3Galatians 3:3

King James Version (KJV)
This only would I learn of you, Received ye the Spirit by the works of the law, or by the hearing of faith?

American Standard Version (ASV)
This only would I learn from you. Received ye the Spirit by the works of the law, or by the hearing of faith?

Bible in Basic English (BBE)
Give me an answer to this one question, Did the Spirit come to you through the works of the law, or by the hearing of faith?

Darby English Bible (DBY)
This only I wish to learn of you, Have ye received the Spirit on the principle of works of law, or of [the] report of faith?

World English Bible (WEB)
I just want to learn this from you. Did you receive the Spirit by the works of the law, or by hearing of faith?

Young’s Literal Translation (YLT)
this only do I wish to learn from you — by works of law the Spirit did ye receive, or by the hearing of faith?

கலாத்தியர் Galatians 3:2
ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
This only would I learn of you, Received ye the Spirit by the works of the law, or by the hearing of faith?

τοῦτοtoutoTOO-toh
μόνονmononMOH-none
θέλωthelōTHAY-loh
μαθεῖνmatheinma-THEEN
ἀφ'aphaf
ὑμῶν·hymōnyoo-MONE
ἐξexayks
ἔργωνergōnARE-gone
νόμουnomouNOH-moo
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
ἐλάβετεelabeteay-LA-vay-tay
ēay
ἐξexayks
ἀκοῆςakoēsah-koh-ASE
πίστεωςpisteōsPEE-stay-ose

இணை வசனம்

Galatians 3:14
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.

Acts 19:2
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.

Acts 15:8
இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக் குறித்துச் சாட்சிகொடுத்தார்;

Acts 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

Hebrews 6:4
ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

Hebrews 2:4
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து பரிசுத்த ஆவியின் வரங்களிலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

Ephesians 1:13
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

Galatians 3:5
அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?

Romans 10:16
ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.

Acts 11:15
நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

Acts 10:44
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.

Acts 8:15
இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

Romans 1:17
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

1 Peter 1:12
தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.

1 Corinthians 12:7
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.


Tags ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ விசுவாசக் கேள்வியினாலேயோ எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்
கலாத்தியர் 3:2 Concordance கலாத்தியர் 3:2 Interlinear கலாத்தியர் 3:2 Image